27 Jul 2013

ஞாபகமறதி,,,,,


  

பேருந்தின் ஒலியையும்,
நடத்துனர் டிக்கெட்
கேட்ட சப்தத்தையும்
தவிர வேறொன்றுமில்லை.
கலர்,கலராக
துணி போர்த்தியிருந்த
இருக்கைகள் மனிதர்களையும்,
அவர்கள் சுமந்த எண்ணங்களையும்,
உடைமைகளையும் சுமந்தபடி/
அதிகாலை நேரமாகையால்
அனேகமாக
அனைவரும் உறங்கி விட்டிருந்தனர்.
பேருந்து உமிழ்ந்த
விளக்கு வெளிச்சசத்தில்
சாலையின் தெளிவும்,
அதிகாலையின் சுகந்தமும்/
பேருந்தினுள் ஒலித்த பாடல்கள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நினைவுகளை
சுமந்து வந்து என்னில் தந்தபடி/
பயணம் சுமந்த சமகாலத்தைய,
பழைய காலத்தைய
நினைவுகளையும்
நினைவிகளை சுமந்த
பயணத்தையும்,,,,,,
அசைபோட்டவாறே 
பயணித்துக் கொண்டிருக்கையில்தான்
எனது மனைவியிடமிருந்து
போன் வந்தது,
பஸ் ஏறிவிட்டீர்களா என/
பஸ் மட்டும் ஏறவில்லை அன்பே
சந்தோசமாகவும்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்
என சொல்ல வந்த நான்
தூக்கத்திலிருந்து படக்கென
விழித்துக்கொண்ட
அருகாமை இருக்கை
குழந்தையை பார்த்தவாறு
மெய் மறந்தவனாய் நிற்கிறேன்/

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை. பயணிக்க வைக்கிறது எங்களையும்.

vimalanperali said...

வணக்கம் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

இளமதி said...

கண்ணுக்குள் காட்சியினைக் கொண்டுவந்தன வரிகள்!

அப்படியே லயிக்கவைக்கின்றன...

அருமை! வாழ்த்துக்கள் சகோ!

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/