11 Jul 2013

பூக்கள் சிரிக்கும் வேளை,,,,,

                     
சிவப்பும்மஞ்சளுமானபூக்களைஅள்ளித்தெளித்தால் எப்படியிருக்கும்?அப்படித் தான் இருந்தது.

மரம் இல்லாமல் ,கிளைகள் ஏதும் விரியாமல் இலைகள் கூட்டணி சேராமல் பூக்கள் மட்டும் இங்கு எப்படி சாத்தியமாகிப்போகிறது.அதுவும் அந்த இடத்தில், அதுவும் அந்த காலை நேரத்தில்?

பறவைகள் கீச்சிட,மனிதர்கள் நடமிட அதிகாலை நேரத்தின் ரம்யத்தில் ராம மூர்த்தி ரோட்டில் காணப்படுகிற மரங்களிலிருந்து எழும் பறவைகளின் ஓசை தினசரிகளின் விடியலில் சுப்ரபாதமாய் இருந்திருக்கிறது. சுப்ரபாதம் பறவை களின் கூட்டம் செய்கிற வித்தை எனச் சொல்லலாம்,ஆனால்பூக்கள் நடமிடு வது மரங்கள்உதிர்த்துச்சென்றதா? இல்லை,,,,,,,எப்படி என்பதுவே  என்னின்  இந்நேரத்துக்கேள்வியாய் இருந்திருக்கிறது.

மலர்கள் நிறைந்தது நிற்கிற வனத்தில் யார் சொல்லி பூத்தது இவைகள் என்கிற கேள்வி யும்  உள்ளடங்கித்தெரிகிற அளவிற்கு ஒரே பூக்காடு மற்றும் ஒரே பூமழை அவள் கட்டிசென்ற சேலையில்/

ரயில்வே கேட் அடைப்பு அப்பொழுதான் திறந்திருந்தது. பூத்திருந்த  மண்ணும், அதன்மீதான மனிதர்களும் வாகனங்களுமாய் அவசரப்பட்டு கடக்கிற வேளை/ அதுவும் காலை நேரம் என்றால் சொல்லவா வேண்டும்?

சைக்கிள், இரு சக்கரவாகனம்,வேன் மற்றும் லாரிகள் தன் அவசரம் காட்டின/ இவைகளுடன் இறக்கை முளைக்காத பட்டாம் பூச்சிகளாய் சீருடையுடன்
 பள்ளிப்  பிள்ளைகள் சைக்கிளுடன்/

இவர்களைத்தாண்டி மெதுவாக ஊர்ந்து நகர்ந்த போது எனது சைக்கிளை  முந்திக் கொண்டு விலகி சென்றவள்உடுத்தியிருந்தபுடவையில்தான் பூக்கள் பூத்துச்சிரித்ததாய்/

இப்படி பூக்கள் மலர்ந்து சிரித்து நந்தவனமாய் தெரிகிற மாதிரியான ஒரு புடவையை நானும் எடுக்க வேண்டும் கூடிய விரைவில்/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்...

படம் பிரமாதம்...

Tamizhmuhil Prakasam said...

அழகான வர்ணனை ஐயா. படமும் பிரமாதம்.

sathishsangkavi.blogspot.com said...

நன்று...

ezhil said...

வருணனையுடன் அந்தப் புகைப்படமும் அழகான காலை பொழுதாக்கியது..அருமை....

'பரிவை' சே.குமார் said...

புடவையில் பூக்கள்...
ரசித்ததை ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்று தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் ப்பிரகாசம் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சங்கவி சார்,நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார் நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம் நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/