சற்றே மேடிட்டுத்தெரிகிறது வயிறு.தன் உடலே தனக்கு அந்நியமானது
போல/
சற்றைக்குமுந்தையசிலவருடங்கள்முன்புவரைகொஞ்சமாகமேடிட்டுத்தெரிந்ததுதான்.
ஆனால் இவ்வளவு பெரிதாய் அல்ல.ஏதோசின்னதானஒருஇளம்தொந்திபோன்றஅமைப்புடன் உடலை விட்டுத்துருத்தித்தெரியாமல்உடலுடன்ஒட்டியேதான் இருந்தது. அஞ்சுக்கு ரெண்டு பழுதில் லாமல்.
தினசரிகளின் நகர்வுகளில் எப்படியும் ஐந்து கிலோ மீட்டராவது
சைக்கிள் ஓட்டி விடுவான். அலுவலகத்தில் அவனது வேலை அப்படி.கடை நிலை ஊழியனுக்கு ஏது
ஓய்வு?அதுவும் தனியார் நிறுவனத்தில்/
கடை நிலை ஊழியருக்கான சீருடையிலிருந்த அவன்அனைத்துநிலைப்பணியாளர்களுக்கான வேலைகலைச்செய்தவன் அந்த அலுவலகத்தில்/
டீ வேண்டுமா,,,?கூப்பிடு அவரை.பைல் எடுக்க வேண்டுமா அவரை
அழையுங்கள்/ வேறெதுவும் தேவையா கறாராக அழைத்து விடுங்கள் அவரை/இது போக கம்ப்யூட்ட ரில்
ரிப்பேர், கரன்சி எண்ணுகிற மிசின் வேலை செய்யவில்லையா?எங்கேனுமாவது ஒரு பேங்கிற்கு
போக வேண்டுமா?அலுவலகடத்தில் ஏதேனும் ஒரு டெக்னிக்கல் ஒர்க்கா?எல்லாம் அவன் தலையில்தான்.
சுவர்கள்சூழ்ந்துநின்றஅலுவலகத்தின் ஊழியர்கள்நான்குதிசைகளிலிருந்து
மட்டுமல்ல எட்டு திசைகளிலிருந்தும் அழைக்கிற அழைப்பிற்கு அவன் செவி சாய்த்தும் ஓடோடித்
திரிந்துமாய்/
அப்படியாய் ஓடித்திரிந்த பொழுதுகளிலும்,வேலை சுமந்த நேரங்களிலுமாய்
சைக்கிள் மிதி அவனுக்கு சுகம் அளித்ததுண்டு.கால ஓட்டத்தில்தான் தெரிந்தது,அது ஓரு சுகம்
அல்ல உடற் பயிற்சி என/அதுவாகவும் இருக்கட்டும்,இதுவாகவும் இருக்கட்டும்.என்ன இப்போது
என அலைந்து திரிந்த நாட்களில் இருந்த உடல் இல்லை இப்போது. அந்த சுறுசுறுப்பும்,ஓட்டமும்
ஏனோ குறைந்து போனது இப்போது.
அது என்னவெனத்தெரியவில்லை,அது என்ன மாயம் எனப்புரியவில்லை.ஓட்டம்
குறைந்தும் உட்கார்வது அதிகமாக ஆகிப்போன காரணமாய் இருக்கலாம்.
குழித்தொந்தி என்பார்களாம் அந்த மாநிலத்தில்/அது இல்லாதவர்கள்
அங்கு மிகவும் குறைவு என ஒரு அறிக்கை போகிற போக்கில் சொல்லிச்செல்கிறதாய்/
அது மாதிரி அவன் நண்பனுக்கு இருந்தது.நண்பனிடம் அவன் பலசமயங்களில்
கேட்டதுண்டு, உனக்கு வயிறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது,வயிறு ஆரம்பிப்பது வயிற்றிலிருந்தா
கழுத்திலி ருந்தா? தெரியவில்லை சொல் நீ எனக்கு என/
அவன் நண்பனாவது பரவாயில்லை.இன்னும் குண்டாக இருக்கிற ஒரு
சிலரை பார்க் கிற போது அவனுக்குள் ஒரு நினைவு எழுந்து மறைவதுண்டு.இவர்களுக்கெல்லாம்
எப்போது தும்பிக்கை முளைக்கும் என/
நினைப்பதுண்டுதான் அவ்வப்போது அல்லது தினசரிகளின் விடியலில்
பலசமய ங்களில்/ காலையில் சீக்கிரம் எழ வேண்டும். வாக்கிங் போகவேண்டும்அல்லது சைக்கி
ளிங்காவது போக வேண்டும் என/எங்கே எதுவுமற்று எதுவுமற்று தூக்கத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு
தூங்கி போய் விடுகிற அதிகாலைப்பொழுதுகள் இமைகள் திறப்பதை மறக்கச்செய்து சொக்க வைத்து
விடுகிறதுதான்.கூடவே ஓடோடி வந்து போர்த்தி க் கொள்கிற சோம்பலுமாய் சேர்ந்து கொள்ள மெலிதான
புரளலுடன் தொடர்கிற தூக்கம் இது எதையும் செய்ய விடுவதில்லை. மாறாக உடல் சோம்பலை வளர்த்து
இப்படி குண்டாக்கி வைத்திருப்பதாய்/
சற்றே மேடிட்டுத்தெரிகிறது வயிறு,தன் உடலே தனக்கு அந்நியமானது
போல/கீழ் நோக்கி குனிகையில் தெரிகிற உடலில் வெள்ளையும் கருப்புமான முடிகள் அலைபா ய்ந்திருந்த
உடல் நிறைந்து போன உபாதைகளுடனும்,சங்கடங்களுடனுமாய்/
11 comments:
மேட்டுக்குடி...
தலைப்பே அருமை...
அழகான எழுத்து நடை...
ரொம்ப அருமையா இருக்கு.
நல்லதொரு பதிவு. எழுதிய விதம் அருமை.
வணக்கம் சே,குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் நிரஞ்சன் தம்பி சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
நெடு நாளைக்குப்பின் வருகிறேன் ...
பிரமித்து போகிறேன் சார் ....
எழுத்தாக்கம் வெகுவாய் ரசித்தேன்
வணக்கம் அரசன் சே சார்.
நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/வெக்கு நாட்களுக்குப்பின்னான தங்களது ரசிப்புக்கு என் எழுத்தே நன்றி சொல்லி ச்செல்கிறதாய்/
நல்லதோர் பதிவு ஐயா. வாழ்த்துகள்.
தங்களது எழுத்துகளின் தாக்கத்தினால், ஓர் வர்ணனை பதிவு எனது வலையில் எழுதியுளேன். தங்களது மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன். அதற்கான link இதோ:
ஒரு வெயில் பொழுதில்....
வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.பாதிப்புகளைதரக்கூடிய எழுத்துக்களாய் இன்னும் நிறையவே உள்ளது.அதில் எனது எழுத்து ஒரு சிறு முயற்சியே.இருந்தாலும் எனது எழுத்தும் தங்களைடம் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்திச்சென்றதற்கு நன்றி.
Post a Comment