1 Aug 2013

கண்ணாடிக்குமிழ்,,,,,,,


                                   
     
அவளுள் சுடர் விட்டு எழுந்த கோபமும்,கேள்வியும் ஞாயமென்றே படுகிறது அவனுக்கு /

     காலை பதினோரு மணி இருக்கும்.அவன் பணிபுரிகிற நிதி நிறுவனத்திற்கு வருகிறாள்.அடகு வைத்த நகையை மீட்டவேண்டும் என்கிறாள்.

    வீட்டின் அவசர தேவைக்காக வைத்த நகை.ஒரு வருடத்திற்கும் மேலாகிப்போனது. நேற்றைக்கு முதல் நாள்தான் நினைவூட்டல் கடிதம் வந்தது.அவசர,அவசரமாக பணம் புரட்டிக் கொண்டு திருப்ப வந்திருக்கிறேன் என்றாள்.

    பார்க்க பாந்தமாகத்தெரிந்தாள்.ஒல்லியாய் கசலையான  உருவம் தலைக்கு வாரி நெற்றிக்கு இட்டிருந்தாள்.

    நீண்டதாயும் இல்லாமல் கொஞ்சமாயும் இல்லாமல் பின்னலில் கொஞ்சமாக பூ சொருகியிருந்தாள்.

    காட்டனா,பூனம் சேலையா என தெரியாத் ஆளவிற்கு அடர் நிறத்தில் ஒரு சேலை உடுத்தியிருந்தாள்.

   பூப்போட்டுமல்லாமல் ,நவீன டிஸைன்களிலும் அல்லாமல் நடுவாந்திரமாய் உடலில் ஒட்டிக்கொண்டு சிரித்தது.

   வாடிக்களைத்து முகத்தில் ஒட்டியிருந்த ஏழ்மை அவளது நிலைமையை பளிச்சென சொல்லிச் சென்றவாறு/

    பூஒன்றின் மேனியிலிருந்து கசிகிற மெலிதான வாசனை போலானதாய் இருந்த அவளது ஏழ்மைச் சொல்லல் இன்னமும் அவளை அழகாக்கிக்காட்டியதாக/

    பக்கத்து ஊர்தானாம் சொன்னாள்.கணவன் தச்சு வேலை செய்கிறார்.இவர் கிடைக்கிற கூலி வேலைக்க்குச்செல்வாராம்.

    இரண்டு பிள்ளைகள்.அவளது பெண்பிள்ளையை உள்ளூர் பள்ளியிலும்,பையன் வெளியூரி ல் சென்று வேலைபார்க்கவுமாய் இருக்கிற குடும்பம் வயிற்றுக்கும்,வாய்க்குமாய் ஓடுவதாக சொன் னாள்.

    நகர்கின்ற நாட்களின் கனம் மற்றும் லேசுகளில் கோர்த்திருக்கிற கை கோர்வையின் மொத்தத் திற்கும்  உள்ளாகபல்சக்கரத்தில்வாழ்க்கைசீராகவும்,சீரற்றும்ஓடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.
   தம்பி பையனின் மொட்டைக்கு செய்ய வேண்டிய செய்முறை செய்வதற்காக வைத்த நகையை திருப்ப இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது,வந்திருக்கிறேன் என்றவாறு அதற்காக கணக்குப் பார்த்து எழுதப்பட்ட ரசீதுடன் அவனிடம் பணம் கட்டவந்து நின்றாள்.

   மொத்தம் 15530 என போடப்பட்டிருந்தது.பணத்தையும்,ரசீதையும் வாங்கிக்கொண்டு எண்ணிப் பார்த்தான்.

   என்னம்மா எவ்வளவு குடுத்தீங்க எனக்கேட்க அவள் 15530 என சொல்ல அம்மா 100 ரூபாய் குறையாய் இருக்கிறதே எனவும்,சரியாய் எண்ணித்தருமாறும் திரும்பவுமாய் அந்தப்பெண்ணிடம் தருகிறான்.

   அவளும் வாங்கி ஒரு முறை எண்ணிப்பார்த்து விட்டு எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என திரும்பத்தருகிறாள்.எட்டாப்பு வரைக்கு படிச்ச நான் எண்ணுன நோட்டு தப்புன்னுட்டீங்களே?

   “ஏன் எண்ணிக்கையில எப்படி தப்பு வரும்?நான் என்ன அப்பிடியா கொறையா குடுத்து ஒங்கள ஏமாத்திறப்போறேன்”.என வெடித்த வார்த்தைகளுடன் கோபமாக பணத்தைத் தருகிறாள்.

   வாங்கி எண்ணிப்பார்த்தால் சரியாக இருக்கிறது.திரும்பவும் எண்ணுவதாய் பாசாங்கு செய்து விட்டு கொடுத்த பணம் சரியாக இருக்கிறதென வாங்கிப்போட்டு விட்டு ரசீதில் சீல் அடித்துத் தருகிறான்.

   இதில் எங்கு தவறு நடந்தது எனத்தெரியவில்லை.அந்த பெண்ணிடமிருந்து பணம் வாங்கி எண்ணுகையில் தவறாக எண்ணி விட்டானா அல்லது அந்த பெண் இப்போது திருப்பித் தருகையில் நூறை சேர்த்துக்கொடுத்துவிட்டாளா?(கம்பி போட்ட கூண்டுக்குள் அமர்ந்து பணத் துடன் உறவாட ஆரம்பித்த நாளிலிருந்து இப்படித்தான் ஆகிப்போனதாய் நினைக்கிறா ன். எந்த எண்ணிகையில் உள்ள ரூபாய் நோட்டை யார் கொடுத்தபோதும் 1000,500,100,50,20,10 என எதைப் பார்க்கிற போதும் அதன்மீது விழுகிற சந்தேகம் தவிர்க்க முடியாது போலும்.அப்படியான மனோநிலை கோலாச்சுகிற இடத்தில்நின்று பணம் வாங்கிய போது நிகழ்ந்த தவறுதானா அது தெரியவில்லை/)

    எதுஎப்படியாயினும் அவ்வளவுநேரம் நன்றாகவும், இணக்கமாயும்  பேசிய அந்தப்பெண், அவள் மீதும் அவளது, செய்கையின் மீதும் தவறு என சொல்லப்பட்டதும் பொருக்க மாட்டாத வளாய் துள்ளி எழுந்துசட்டெனசுடர்விட்டெழுந்தஅவளது கோபமும்,கோபம் சார்ந்த  ஆழ்ந்த  வருத்தமும்  ஞாயம் என்றே படுகிறது.

    பரவாயில்லை, வேலைத்தளங்களில் இது மாதிரி நாலு விஷயங்கள் வரும்,போகும் அதில் ரெண்டு நல்லதாயும்,ரெண்டு கெட்டதாயும்/

     ஆனால் உரசிக்கொள்கிற சிறு சிக்கி முக்கி கற்களின் முனையில் பற்றிக்கொள்கிற    
     சிறு பொறியைப்போல எள் முனையளவு எழுகிற கோபமும்,ஆதங்கமுமே மனதின்    
     ஏதாவது ஒரு புள்ளியில் ஒன்றினைந்து சட்டெனகோபமாக,கேள்விகளாக
     உருவெடுத்து விடுகிறது போலும்/      

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

2 நல்லதாயும், 2 கெட்டதாயும்....

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார் 2 நல்லதாயும் 2 கெட்டதாயும் அமைந்து போகிற நிகழ்வுகளின் கனங்கள் மனித மனதை என்னவோ செய்து விடுகிறதுதான்.

கவியாழி said...

மனதை வருடும் சம்பவங்கள்

vimalanperali said...

வணக்கம் கவியாஇ கண்னதாசன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

சசிகலா said...

தங்களை தொடர் பதிவெழுத அழைத்திருக்கிறேன்.

vimalanperali said...

நன்றி சசிகலா மேடம்.தொடர் பதிவு எழுத கண்டிப்பாய் வருகிறேன்.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் அழைப்பிற்கு/