நேற்றிரவே நினைத்து முடியாமல் போய்விட்டதை வாங்க இப்பொழுது வந்து கொண்டி ருக்கிறேன். நான் வைத்திருந்த பையில் சின்னவெங்காயம் ரெண்டுகிலோவும், பெரிய வெங் காயம் ஒருகிலோவும்,பின்தேங்காயுமாய் இருந்தது.
இவையெல்லாம் பையில் இடம் பிடித்ததுபோகவாங்கும்காய்கறியைஎங்குவைப்பதுஎன்கிற யோசனையிலும்,உங்கள் கடையில் இருக்கிற வெங்காயம், தேங்காயை வேறொரு கடையில் வாங்கியது குறித்து உங்களுக்கு ஏதேனும் வருத்தமும்,மனத்தாங்கலும் வந்து விடுமோ என்கிற பீதியினாலும் உங்களது கடை முன் நின்று பார்த்த நான் அப்படியே வாங்காமல் கிளம்பி வந்து விடுகிறேன்.
தக்காளி 1கிலோ,பீட்ரூட்அரைக்கிலோ,முட்டைக்கோஸ்சின்னதாக ஒன்றுஉருளைக்கிழங்கு அரைக்கிலோஇப்படிமொத்தமாக மூன்று நான்கு நாட்களுக்கு காணுகிற மாதிரி வாங்குகி றதுதான் எப்பவும் நடப்பது.அன்றைக்கும் கூட அப்படியே வாங்கி நீங்கள் தரும் பையில் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம்தான்.பணம்மெல்லாம் இருந்தது. செலவ ழிக்க மனமும் இருந்தது. “இன்னும் எத்தனைய தூக்கிக்கிட்டு என்கிற சின்னதான மனச் சோம்பலும், தட்டிக் கழித்தலும் ஒன்று சேர வந்து விடுகிறேன்.
நானும் எனது மகனும்தான் வந்தோம்.சின்னவன் ஏழு படிக்கிறான்.நன்றாக என இல்லை, பரவாயில்லாமல் படிப்பான்.இங்குள்ள ..........பள்ளியில்தான் படிக்கிறான்.அவனது பள்ளியில் நடக்கவிருக்கிற அறிவியல் கண்காட்சியில் இவனும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை வக்கப் போகிறான்.அதற்கான பொருள் வாங்க என்னோடு வந்தான்.பேட்டரி,வயர்,வயர் சுற்றுகிற டேப் என நிறைய வாங்கினான்.
நேற்றுசனிக் கிழமை.அவனுக்கு பள்ளி விடுமுறை.எனக்கு அரைநாள்தான் அலுவகம். முடிந் து வீட்டிற்கு வந்ததும் சின்னதாக ஒருயோசனை.அப்படியேடீ சாப்பிட்டுஉட்கார்ந்தால் தொலைக்காட்சி,மனைவியுடன்அரட்டை,சினிமா, கொஞ்சமாய் அரசியல், சொந்த பந்தம், அக்கம் பக்கம்,அதுஇது என தன் வசத்திற்கு வருகிற பேச்சுக்களை தங்களுக்குத் தோதாக பேசிவிட்டு அமர்ந்து விடக்கூடும்.இதைதவிர்க்க வேண்டுமென்றால் பேசாமல் பஜாருக்குப் போய் விடலாம்.தோழர் தங்கப்பாண்டிகடையில் டீசாப்பிட்டுவிட்டு அங்கு வேறு யாரேனும் தோழர்கள்வந்தால்முகம்பார்த்துசிரித்துவிட்டுவரலாம்அந்தசிரிப்பிற்கும் பேச்சிற்கும் பின்னால் ஏதாவதுஇருக்கலாம்அல்லது ஒன்றுமற்று கூடப்போய்விடலாம்.இருந்தாலும் அதைவிட மனமில்லாமல் தொடர்பவனாகவும்,கடைபிடிப்பவனாகவும்நேரம்வாய்க்கிறபோதெல்லாம்
சென்றுவிடுகிறேன்.
அம்மாதிரியானசெல்லுதல்களின்செலுத்துதல்களேஇப்பொழுதும் உந்தித்தள்ளவந்து கொண் டிருக்கி றேன்பஜார்நோக்கி.
முழங்கால்வரைதொங்கியசாம்பல்கலர்பெர்முடாஸ்,டிசைன்போட்ட குட்டைசட்டை போட்டிருந்தான்.
அப்படியே கிளம்பி வருகிறேன் என்றான்.நாந்தான் “வேண்டாம் கறுப்புக்கலர் பேண்ட் போட் டுக் கொண்டு முடிந்தால் சட்டையையும் மாற்றிக் கொண்டு வா” என்றேன். பேண்ட் மாற்ற சம்மதித்தவன்சட்டையைமாற்ற சம்மதிக்கவில்லை.
“இருக்கட்டும் நன்றாகவே இருக்கிறது” என எல்லோரும் சொல்கிறார்கள் என்கிறான். யாரந்த எல்லோரும் எனக் கேட்டதற்கு அவனது டாக்டர் அக்காவை கை காண்பிக்கிறான்.அவள் மேல் அவனுக்குமட்டும் அல்ல,எங்கள் எல்லோருக்குமே தனிபிரியம் இருந்ததுண்டு.சரி அவனது இஷ்டமும்,டாக்டரின் சொல்லும் ஒன்று சேர அவன் அதையே போட்டுக் கொண்டான்.
பணம் எடுத்துக் கொடுத்த மனைவியை ஏறிடுகிறேன்.2500 ரூபாயையும் அன்பையும் சேர்த்து கொடுத்தாள்.எமெல்சன் பெயிண்ட் இருபது லிட்டர் வாங்க வேண்டும்.நாளை மறு நாள் பெயிண்ட் அடிக்க வருகிறேன் எனச்சொன்ன பெயிண்டரை நம்பிமட்டுமல்ல.சுவர்கள் ரொம்பவும் வெளுத்துப் போனதாலும் அங்கங்கே பெயர்ந்து உருவங்கள் காட்டுவதானாலும், இந்த வருடம் கண்டிப்பாக பெயிண்ட் அடித்து விட வேண்டும் என்கிற முடிவினாலும்/
போனவாரம் பெயிண்டரைக் கூப்பிட்டு யோசனைகேட்டதில் வீட்டின் உள்புறம் அடித்து விடலாம். வெளிப்புறம் நன்றாக இருக்கிறது அதற்கேற்றாற்ப் போல பொருள் வாங்கிக் கொள்ளுங்கள் என பொருட்களின் பட்டியலை சொன்னார். அந்த பொருட்களடங்கிய பட்டியலுடனும்,மனைவி கொடுத்த ரூபாயுடனுமாய் நான்.
மஞ்சள் கலரில் பூப்போட்ட சேலைகட்டியிருந்தாள்.பெரிது,பெரிதாக பூத்திருந்த பூக்கள் பார்க்க அழகாயிருந்தது.உடல் முழுக்க பூக்களும்,முந்தியில் வேறு மாடர்ன்டிசைனுமாக இருந்தது. கறுப்புக்கலர்ஜாக்கெட் அணிந்திருந்தாள்.
தலையைபடிய வாரி நெற்றிக்கு இட்டிருந்தாள்.பெரும்பாலும் வீட்டிலிருக்கிற நேரங்களில் நைட்டி உடுத்துவதை மட்டுமே வாடிக்கையாக கொண்ட பெண்களுக்கு மத்தியில் இவள் மட்டும் எப்படி இந்நேரம்?பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறாள்.
“போதும் என்னையவே பாத்தது,பணத்த புடிங்க”என கையில் திணித்த நேரத்தில் பார்வை ஷெல்பின் மீது படிந்தது.
ஏதோ நிறைய படிக்கிறவன் மாதிரி தோற்றம் தருகிற விதமாய் ஷெல்பில் அடுக்கப் பட்டிருக்கும் புத்தகங்கள்,தினசரி பேப்பர்,டீவிடி ப்ளேயர் ,பிள்ளையார் பொம்மை மண்ணால் செய்யப்பட்டிருந்த அலங்காரவிளக்கு என அடுக்கிற்கு ஒன்றாய்இருந்த ஷெல்பின் ஒரு மூலையில் மகாகவியின் போட்டோவும்,அதற்கு கீழாய் காற்றில் லேசாய் ஆடிக் கொண்டிருந்த பேப்பரும்/
ஷெல்ப்,ஷெல்பினருகேஇருந்ததொலைக்காட்சி,தொலைக்காட்சிஅமர்ந்திருந்த மேஜை, அத னருகே இருந்த தையல் மிஷின், மிஷினின் அருகாய் இழுத்த நேர்கோடாய் இரண்டு ப்ளாஸ்டிக் சேர்கள்,இரண்டு வயர் சேர்கள்,ஒரு இரும்புச் சேர் என ஒழுங்கற்று வரிசை காட்டி நின்றது.
திறந்திருந்த ஜன்னலின் வழியாக வீட்டின் பக்கவாட்டு வெற்றிடமும்,அதில் நின்ற வேப்பமர மும்,பன்னீர் மரமும் தெரிந்தது.நல்ல வேலையாக பன்னீர் மரத்தில் புழு வைக்கவில்லை இந்த வருடம்.இல்லையென்றால் வருடா,வருடம் இந்த கம்பளிப்புளுக்களோடு பெரிய அக்கப்போர் அல்லது பொழையாட்டு.
வேப்பமரத்தின்ஒருகிளையில்ஒரு குருவிஉட்கார்ந்திருந்தது.ஒருசாண் நீளம்தான் இருக்கும். சின்னத்தலையும்,சின்ன உடலும், பெரிய வாலுடனுமாய் இருந்தது.கரிச்சான் குஞ்சு என்கி றாள் என் மனைவி.
தான் மட்டும் வந்து உட்கார்ந்திருக்கிறதா அல்லது வேறு மாவட்டத்திலிருந்து ஜோடி பறந்து வர காத்திருக்கிறதா?எதாயிருந்தாலும் மூணாம் பேருக்குக் கேட்காமல் செல்போனில் பேசி தூதனுப்பிவிடும் போல.அப்படிப் பேசும் வித்தையைஎப்படியாரிடம்கற்றதுஎனத் தெரிய வில்லை.
பேசுகிறது,பாடுகிறது,கத்துகிறது எல்லாம் முடித்துவிட்டு தனியாக ஓரமாய்ப் போய் அழுதும் விடுகி றது.காற்றின் திசையில் மிதந்து செல்லும் அதனின் பேச்சிற்கும், பாட்டிற்கும். கத்தலுக்கும் சம்பந்தப்பட்டவேறு மாவட்டத்துப் பறவை மனம் சாய்க்கும் என்கிற நம்பிக்கை யோடு பார்வையைவீட்டினுள் திருப்பி கதவு படுக்கையறை,சமையலறை என பார்த்த வனாய் கழிவறை நோக்கி விரைகிறேன். வீட்டை விட்டு வெளியே போனால் ஒண்ணுக்கிருக்க எங்கும் இடம் தேடி அலையமுடியாது.
சிக்கனமாகக் கட்டியதால் குளியலறையும்,கழிவறையும் சேர்ந்தே இருந்தது.கையைக ழுவி விட்டு தண்ணீர் குடித்து விட்டு நிமிர்கையில்தான் கவனிக்கிறேன்.ஜார் பொருத்துமிடத்தில் வாயோரம் பிளந்திருந்த மிக்ஸியை மின்வயரை ஒட்டும் கறுப்பு டேப்பினால் ஒட்டி வைத்திருந்தாள் மனைவி.அடுத்த மாதம் பாத்திரச் சீட்டு முடிகிறது.கூடக் கொஞ்சம் ரூபாய் போட்டு புது மிக்ஸி எடுத்துக் கொள்ளலாம்.அந்நேரம் ஏதாவது “எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்” இருந்தால் இன்னும் கொஞ்சம் வசதி.
ஃபேண்ட் மாற்றிக் கொண்ட மகன் அவசரப்படுத்த மனைவியிடம் சொல்லிவிட்டு இருவரு மாய் கிளம்புகிறோம்.நல்ல கலராப் பாத்து வாங்கிக்கங்க,நம்ம ஒட்டியிருக்குற டைல்ஸீ க்கு பொருத்தமா என்கிறாள்.
வீட்டிலிருந்து கிளம்பி வீதியடைந்து,சாலை மிதித்து சென்றால் வருகிற கடைகள்,ஆஸ் பத்திரி,போஸ்ட்ஆபீஸ் என பின்னோக்கி நகர்கிற கட்டிடங்களை தள்ளிவிட்டு விரைகி றோம். இதில்ஒயின்ஷாப்பும், ஆஸ்பத்திரியும், மருந்துக்கடையும்,தங்கும் விடுதியும் அருக ருகே அமைந்திருந்தது தற்செயல் ஒற்றுமையா?அல்லது...,,,,,.....,,,,,,,,தெரியவில்லை.
முதலில் அருப்புக்கோட்டை ரோடு வழியாகப் போய் பாலத்திலேறி கருமாதிமடம் முக்கில் தோழர் கடையில் டீக் குடித்துவிட்டு,காய்கறி வெங்காயம் எல்லாம் வாங்கிக் கொண்டு கடைசியாக பெயிண்ட் வாங்க வேண்டும் என்பதாகத் திட்டம்.
அதற்கு முன்பாக பெட்ரோல் போட வேண்டும். பெட்ரோல் போட்டுவிட்டு வரும்போது சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்து ஏறிய வண்டி சிதறியிருந்த பொடிப்பொடி கற்களின் மீது ஏறி பஞ்சராகி நின்றது.
பஞ்சரான வண்டியை உருட்டிக் கொண்டு ஒரம் கட்டி நிறுத்துவதற்குள் ரோட்டின் பார்வை என்னை பிடுங்கித்தின்றது.நல்ல வேளை வண்டி பஞ்சரான இடத்திலிருந்து கூப்பிடு தூரத் தில் ஒர்க் ஷாப் இருந்தது.எல்லாம் முடிந்து டீசாப்பிட்டுவிட்டு பஜார் கூட்டத்தை பிளந் து உங்களது கடை முன் நிற்கையில் இரவு மணி ஏழு.
இன்று சனிக்கிழமையாதலால் பஜாரில்கூட்டம் அதிகமாகவே இருந்தது. டீக்கடையிலிரு ந்து டாஸ்மாக் வரை அதனுடைய நீட்சி தெரிந்தது. நிமிந்தாள் கந்தசாமி, சித்தாள் செல் லம் மா,பெயிண்டர் தனபாலு......இப்படியான எல்லோருக்கு மேஇன்று வாரச் சம்பளம் கையிலேறி தின்பண்டங்களாய்,சாரயமாய், டீயாய்,புரோட்டா சால்னா வாய் கரைந்து கொண்டிருக்கிற பொழுது அதை கடந்து நான் உங்களது கடைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.கட்டம் போட்டகைலி,பூப்போட்டசேலை,பழதாகிப்போன சைக்கிள்,கறுப்பிலும்,பச்சையிலும், ஊதா விலுமாய் ஊர்ந்த இருசக்கரவாகனங்கள்,கார்கள்,ஆட்டோக்கள், மனிதர்கள் பஜாரின் இரு சாரியிலுமாய் கடைகள் எல்லாம் எல்லாம் தென்படுகிறது.
அப்படியெல்லாம் தென்பட்ட எல்லாம் தாண்டி உங்களது கடை முன் நின்ற போது வட்ட மா ன தட்டுகளில் தெரிந்த காய்கறிகளுக்கு மத்தியில் வளர்த்தியாய் நீங்கள். காய்கறி களை பெறக்கிக்கொண்டுஇரண்டுமூன்று பேர்.
நின்றோம்,பார்த்தோம்,போய்விட்டோம்எனதுமகன்கூடக்கேட்டான்.“என்னப்பாகாய்கறி வாங்கலையா”என?வாங்கிக் கொள்ளலாம் என வந்த நான் இதோ உங்களது கடை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன் இப்பொழுது.
கடையை மூடி விடாதீர்கள் விலையை கொஞ்சம் குறைத்துக் கொடுங்கள் தயவு செய்து/
6 comments:
அருமை... அழகான எழுத்து நடை...
கலக்கலான பகிர்வு...
வாழ்த்துக்கள்...
எழுத்து நடை அருமை இனிமை
வழமைபோல் காட்சிப்படுத்தலில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை சகோ!
அழகிய காட்சிகளை மனக் கண்களில் கண்டு ரசித்தேன்!
வாழ்த்துக்கள்!
த ம.2
காய்கற்களில் இருக்கிற அழகு இப்போதெ ல்லாம் நம் மனதை கனக்க ச் செய்து விடுகிறதுதானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக சேக்குமார் சார்/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் இளமதி அவர்களே, காட்சிபிழைகள் எல்லாம் சொல்லப்பட வேண்டியவைகளாய் தெரிகிறதுதானே?நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment