9 Aug 2013

நல்லதொரு,,,,,,,


             

ல்லதொரு காலை ஐந்து மணிக்கு ஒரு குறுநாவலைப் படிக்கிறேன்.

நாவலைபடித்துமுடிக்கவும் மணி ஆறு ஆகவும் சரியாக இருக்கிறது.நாவலை படித்து கொண் டிருந்த ஒரு மணி நேரமும் வேறெதுவும் இல்லை மனதிற்குள்.கதையும்,கதையின் களமும், கதையின்,மாந்தர்களும் மட்டுமே மனதினுள்ளாகத் தங்கிப் போனார்கள்.

  அவர்களுடன் மட்டுமே உறையாடி உறவாடிக் கொண்டிருந்த நேரம் அது.அந்த ஒரு மணி நேரமும் ஒண்ணுக்கு தண்ணிக்கு எதுவுமே ஞாபகம் வரவில்லை.

புத்தகம்என்னைஅப்படிஉள்ளிழுத்துஆட்கொண்டுவிட்டதுநாவலைபடித்துமுடித்ததும் வீடே மிக அழகாக,ரம்யமாக,ரசிக்கத்தக்கதாகத் தெரிகிறது.

தினம்,தினம் பார்க்கும் மனைவியும் பிள்ளைகளும் கூட மிக பொலிவு கூடிஅழகாகத் தெரிகி றார்கள்.மனசுசந்தோசத்தில்வியாபித்து,விரிவடைந்து குதூகுலமடைகிறது.

தூங்கிக்கொண்டிருக்கும்மனைவியையும்,பிள்ளைகளையும்எழுப்பாமல் டீக்குடிக்க வெளியில்  செல்கிறேன்.

 தார்ரோடும்,மிகக் குறைந்த அளவிலான பாதசாரிகளும் டீக்கடையின் ரேடியோ இசையும் மிகவும் ரசிக்கத்தக்கதாக.ஏற்றுக் கொள்ளவும் ஆக்கிக் கொள்ளவும் முடிகிறது என்னால்.

 நடை முறைவாழ்வில் அது எத்தனை பேருக்கு வாய்க்கிறது எனத் தெரியவில்லை. கைவரப் பெற்றிருக்கிறது என்பதும் புரியவில்லை.

எனக்கு மட்டுமா அது ?எல்லோருக்கும்  அப்படித்தானே?நல்லதொரு படிப்பும், நல்லதொரு  காட்சியும் நம்மை அப்படியாக்கி விடுகிறதுதானே?ஆனால் யதார்த்தம்.........?வேறொன்றாகத் தானே விரிகிறது.தினசரிகளை விரித்தவுடன்  கொலை,கொள்ளை, கற்பழிப்பு. கடத்தல், ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,போன்ற செய்திகளும் புத்தகங்களில் படிக்கிற தரக் குறைவான கதைகளும் ,சினிமா நமக்கு காண்பிக்கிற மட்டமானகாட்சிகளும்,நம்மனதை ஊடறுத்து,செல்லரித்து,
காயடித்து, காயப்படுத்தி விடுகிறதுதானே?

 “டாடிமம்மி வீட்டில் இல்லை”களும், ‘பஜன் பஜன் கே,பஜன் பஜன்கே’களும் நமது தேசிய கீதமாகவும், ரிங்டோன்களாகவும்,,,,,,,,,,, அரிவாள் தூக்கிய படங்களே நம்மை கொள்ளை கொள்வனவாகவும் அமைந்து போகிறது.

 கையில் பட்டாக்கத்தி  வைத்திருப்பவர்கள் புடைசூழ எதிராளியை தாக்கச் செல்லும் சினிமா கதாநாயகனை பார்த்ததும் மனது ஒரு நிமிடம் ஏங்கிப்போய் விடுகிறதுதான்.

 அதே போன்ற காதநாயகத் தனத்திற்காக ஏங்கி  உருவகப் பட்டுப் போகிறது மனம்.

இத்தனை கடுமையாக சட்டம் பிரயோகிக்கப் பட்டபின்பும் கூட ஈவ் டீசிங்குகள் தொடர் வதும் ,நகரின் இதயப் பகுதியில் காலை எட்டு மணிக்கு கொலை நடப்பதும் எதன் பாதிப்பாய் தெரிகிறது அல்லது எதன் பாதிப்பாய் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது?

அண்மையில் தினசரியில் படித்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது.35 வய தை தாண்டிய அந்த வாலிபர் இரவு வேலைகளில் தனியாகத் தூங்குவதோ, விளக்கை அனைத்துவிட்டுத்தூங்கச்செல்வதோ கிடையாதாம்.

இரவு வேலையில் தனியாக பாத்ரூம் கூடப் போக மாட்டாராம்.ஏன் அப்படி எனக்கேட்ட போது  அந்தஇளைஞன்தெளிவாகவே சொல்லுகிறான்.

தொலைகாட்சி யில் வருகின்ற மர்மத் தொடர்களும்,மர்ம நாவல்களில் வருகின்ற கதாப்பாத் திரங்களுமே என்னை இப்படி செய்து விடுகின்றன என./  
 
 ஏன் இவைகளெல்லாம் இவைகளை தவிர்க்க முடியாதா?என்கிற கேள்வியின் விடையாகவே, அல்லது ஒரு சிறு ஆலோசனையாகவோ இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள் தான் தோனுகிறது.  
       
  ஆரம்பவரிகளைதிரும்பவும்படித்துவிட்டுகூறுங்கள். முடிந்தால்செயல்படுத்திப்பார்க்கலாம்.
  முயன்றால்எதுவும் முடியும்தானே? 

10 comments:

சென்னை பித்தன் said...

காலை எழுந்ததும் நல்ல இலக்கியமோ,இதமான இசையோ அந்த நாளையே இனிமையாக்கும் வல்லமை படைத்ததுதான்!

இளமதி said...

குறள் :

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

இக்குறள் உணர்த்துவதுதான் உங்கள் கருத்தும்.

நல்ல பதிவும் பகிர்வும் சகோ!
வாழ்த்துக்கள்!

த ம.2

vimalanperali said...

வாஸ்தவம் பொதிந்த வார்த்தை.நாளை இன்மையாக்குகிற வித்தையை சொல்லிசெல்கிர புத்தகமோ,இசையோ மனித மனதை பண்படுத்தும் தன்மை உள்ள அற்புதம் சென்னைப்பித்தன் சார்.நன்றி தங்கள் வருகைக்கு/

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே/நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
கருத்து சொல்ல வந்த இடத்தில் குறளைபகிர்ந்துகொள்கிற தனம் மிகவும் மேன்மையாய் தெரிகிறது.நன்றி திரும்பவுமாய்/

வேல்முருகன் said...

டிவியும், பேஸ்புக் வந்து படிப்பதை குறைத்துவிட்டது. புத்தகத்தின் வாசனையுடன் கதையை படிப்பது சுவையானது

Anonymous said...

ஈவ் டீசிங்குகள் தொடர் வதும் ,நகரின் இதயப் பகுதியில் காலை எட்டு மணிக்கு கொலை நடப்பதும் எதன் பாதிப்பாய் தெரிகிறது அல்லது எதன் பாதிப்பாய் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது? பணம் நல்ல மனம் இல்லாமை என்ற வறுமை தான் இப்படி ஆக்குகிறது.
அது தவிர நல்ல குணங்களோடு பிள்ளைகள் வளர்ந்து வரவில்லை. காரணம் பெற்றவர் நல்லவர்களாக இல்லை.
இவைகள் எல்லாம் சரியாக இருந்தால் எதுவும் பிழையாகாது எனலாமோ!
நல்ல சிந்தனை...விமலன். இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

'பரிவை' சே.குமார் said...

காலையில் நல்ல இலக்கியம் அல்லது இசை அன்றைய தினத்தை இனிமையாக்கும்...

அருமை...

vimalanperali said...

புத்தக வாசைனை கதைகளை மட்டுமல்ல,நம் வாழ்வையும் தெரிவுபடுத்துவதாயும்,சொல்லிச்செல்வ
தாயும்,நன்றி வேல்முருகன் சார். தங்கள் வருகைக்கும்,கருத்துரைகுமாக/

vimalanperali said...

வணக்கம் கோவைக்காவை அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/சூழலே இங்கு நம் பிள்லைகளை வளர்க்கிறது ஒரு குறிப்பிட்ட வயதிற்க்கு மேல்/அந்த ச் சூழல் இப்போது மிக கூறுகிய வர்ம்பிற்குள்ளாக வைத்துப்பார்க்கப்பட எத்தனிக்கும் சக்திகளாக வளர்கிறவைகள் நிறைய/

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.காலையில் இலக்கியமும்,பாடல்களும் வாய்க்கப்பெறாதவர்கள் துரதிஷ்ட சாலிகளா என்ன?அவர்களின் தினம் இனைமையாகாது என்கிற அர்த்தமில்ல ,சுற்றுச்சூழலைப்பொறுத்தே மனிதன் இங்கே எல்லாமுமாயும், எப்படி இருப்பது எனவுமாயும் முடிவாகிப் போகிறது.அவைகளை சொல்லிச் செல்கின்றன இலக்கியங்கள், பாடலகள்,,,இன்னும் பிறவைகள். அவைகளை கற்பது தினங்கலை இதப்படுத்தும்தானே?