கருப்பு நிற நாய்க்குட்டியது.வாலாட்டியும் எக்குப்போட்டுமாய்
விளையாடிக் கொண்டிருந்தது பரந்து விரிந்த மண் நிறைந்த பூமியின் வெற்று மேனி மீது/
இவனும்மனைவியுமாகத்தான்அமர்ந்திருந்தார்கள்.பணிமுடிந்துவிட்டஇரவுவேளையின்ஓய்வுப் பொழுதது.சாப்பிட்டு முடித்துவிட்ட இரவு 9.30 மணி பொழுதிற்கு வீட்டினுள் அடைபட்டுக் கிடந்தபுழுக்கம் தாங்காமல் வெளியில்வந்துவிட்டிருந்த வேளை.
இளையவள் வீட்டினுள் டீ.விபார்த்துக்கொண்டிருந்தாள். எத்தனைமுறைசொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாள்தான்,படுத்துக்கொண்டே டீ.வி பார்ப்பதை விட
மாட்டேன் என்கிறாள்.
பழையசினிமாபாடல்ஒன்றைபி.பி சீனிவாசன்அவர்களும்,சுசிலாஅம்மாவுமாய்
இழைத்துக்கொ ண்டிருந்தார்கள்தங்களதுஇனிமையானகுரலால்/இந்தக்காலதலைமுறைக்கு அக்கால பாடல்
பிடித்துப்போனது மிகவும் ஆச்சரியமாகவே/
பொதுவாக வே டீவி சேனல்களில் பாடல் நிகழ்ச்சிகளில் 12,13 வயதுடைய
சிறுவர், சிறுமியர் கூட பழைய பாட்லை தேர்ந்தெடுத்து நேர்த்தியாகப்பாடுவது ஆச்சரியமாகவே/
ஊதாக்கலர்புடவைதன்மென்நிறம்காட்டிஅவள்உடல்போர்த்திஅமர்ந்திருந்தது.அதற்கு
மேட்ச் சிங்காய் சட்டை.அவளது வருத்தம் இவ்வளவு பெரிய ஏரியாவில் இன்னும் ஜாக்கெட்
தைக்க சரியான ஒரு ஆளில்லை என்பதே/ஊரில் இருந்த வரை கவலையில்லை. அய்யாக் காளை டெய்லர்
இவர்களின் மன நினைவை சட்டையாக உருமாற்றிக்கொடுத்தார். இப்போது திருமணமாகி இங்கு வந்த
நாளிலிருந்து ஒழுங்காக சட்டை தைக்கும் டெய்லரை தேடி அலை கிற பிழைப்பாய் போய்விட்டது.அளவெடுத்துதைக்க
ஆளில்லை.பழைய சட்டையை வாங்கி அதை புதுத்துணிமேல் வைத்து அப்படியே வெட்டித்தைத்துவிடுகிறார்கள்என்பதுவேஅவளில் உள்ள மிகப்பெரியமனக்குறையாக/
டவுனிற்குள்ளெல்லாம் போய்வந்துவிட்டாள் சட்டைதைக்க. ஊஹும் எந்தபிரயோஜனமும்இல்
லை. ஓன்று சரியாக இருந்தால் மற்றொன்று ஊடம்பில் உட்காராமல் போய்விடுகிறது. வேறு
வழியில்லாமல் இங்கேயே தைக்க ஆரம்பித்து விட்டாள்.
ஒரு முழத்திற்கும் குறைவாக அவள் வைத்திருந்த மல்லிகைப்பூ
இவன் நாசி துழைத்ததாய்/வாங்குகிற சம்பளத்தை எல்லாம் இப்படி பூவாக தலையில் மாற்றி வைத்துகொண்டால்எப்படி ? என்கிற இவனது கேலிப்பேச்சை அவள் பூவாங்குகிறநாட்களில் சந்திப்பதுண்டு.
பூத்துத்தெரிந்த மண்ணின் பரப்புஒற்றையாய்தெரியாமல்தன்மேல்
விழுந்து படர்ந்து பரவியிரு ந்ததூசிகளையும்,குப்பைகளையும்,குவிக்கப்பட்டுதெரிந்தமண்குவியல்களையும்
காட்சிப்படுத் தியதாய்/
இவைகளுக்குமத்தியில்மண்ணின்மலர்வுக்கும்அதன்தலையசைவிற்குமாய்இடம்கொடுத்து முளைத்திருந்தசீமைக்கருவேலைமுட்செடிகள்மற்றும்மற்றுமாய்எனகாட்சிப்பட்டஅவைகளின்ஊடும்பாவுமாய்ஓடித்திரிந்தும்எக்குப்போட்டும்விளையாடிக் கொண்டிருந்த அதை அவர்களது வீட்டி ன் முன் சற்றே தள்ளிபடுத்திருந்த
நாய் ஒன்று கண்டு கண் சிமிட்ட அதன் அருகில் வரவும் இது அதை நோக்கிச் செல்ல வுமான ஒரு
நேர்கோட்டு நிகழ்வு அந்த இரவின் தெரு விளக்கு ஒளியில் சட்டென நிகழ்ந்து விடுகிறதாய்/
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வீடுகள் பூத்துதெரிந்த புது ஏரியா அது.ஆனால் தார் ரோடு போட்டிருந்தார்கள்.அதுஇவரைக்கும்
பரவாயில்லை. அமைகிற வார்டு மெம்பரைப் பொறுத்து
தெருவுக்கு சிமிண்ட் ரோடோ,தார் ரோடோவந்துவிடுகிறது. சற்றெபுறமுதுகுகாட்டியும்
ரோட்டு க்கு வழிவிட்டுமாய் இருபக்கமும் தன் கலர் காட்டி அகலமாயும்,குறுகலாயும் வாசல்
திறந்திருந்த வீடுகள் காட்சிப்பட்ட வீதியில்
கடைசியாய் தெரிந்தவீட்டின்மாடிப்படிஓரத்தில் ஈன்ற குட்டிகளை விட்டுவிட்டு இரை தேடிப்போய்விட்ட
தாயின் துனை பிரிந்து வந்த குட்டிகளில் ஒன்றுதான் இப்படி விழிப்படலங்களில் பட்டு விரிகிறதாக.
வெக்கை தாங்காத வேனல் சூட்டின் நாளொன்றின் இரவுப்பொழுதில்
எந்நேரம் வந்ததென தெரியவில்லை,சூழ் கொண்ட வயிற்றை சுமந்து கொண்டு இடம் தேடி அலைந்து
கடைசியாய் வந்து தஞ்சம் கொண்ட இடம் இதுவாகவே இருக்கிறது. அப்படி வந்தன்று இரவே குட்டிகளை
ஈன்றெடுத்திருக்க வேண்டும் போலும்/ அது தெரியாமல் வழக்கம் போலவே அந்த வழியாக நியூஸ்
பேப்பர் போட வந்த பையனை தாய் நாய் உண்டு இல்லை என ஆக்கி விட்டது, அன்றி லிருந்து ஒரு
வாரம் வரை அவன் பேப்பர் போடவரவில்லை.அவனிடம் பேப்பர் வாங்குபவர்கள் வெளி உலகம் செய்திகளிலிருந்து
அன்னியப்பட்டவர்களாய் ஆகிப்போனார்கள் அந்த
நாட்க ளில் என செய்தி அறிந்த வட்டாரங்கள் கூறிச்சென்றன.
நன்றாகஇருந்தால் 15 அல்லது 20 நாட்கள் வளர்ச்சி இருக்கலாம்.அந்த
நாய்க்குட்டிக்கு/ நுனி வாயால் தரையை ஊதி,ஊதி புஸ்புஸ்ஸென்ற காற்றுடனும் பரபரப்பாயும்
எதையோ தேடித் தேடித்தின்கிறதாயும் தென்படுகிறது சமயா சமயஙகளில்/
எத்தனை மணி,எத்தனை நேரம் எந்த நாள்எனதுல்லியமாய்சொல்லிவிடமுடியவில்லை. போன வாரம் என்கிறதாய் நினைவு. தாய் நாய் தான் ஈன்ற குட்டிகளில் இரண்டை
காணாமல் இந்த வெற்று வெளி எங்குமாய் ஓடித்திரிந்தது.முள்ச்செடிகள் உடலில்உரவும்உரசிய முட்ச்செடிகள் அதன்
உடலைக்கீறி ரத்தம் வழியச்செய்யவுமாய் இருந்த நேரத்திலும் கூட விடாமல் ஓடிக் கொண்டும்,குறைத்துக்கொண்டும்
வெட்ட வெளியில் தன்னை ஊன்றியிருந்த வீடுகளின் முன்பாய் நின்றுவாறு.
சற்றுநேரம்அங்குநின்று குறைக்கிறது.அப்படியேதிரும்பிஓடிப்போய்களைத்துஓரிடத்தில் நிற்கி றது. அப்புறம் வேறோர் இடம் தேடிப்போய் நின்று குரைக்கிறது,மெல்ல
குறைப்பை நிறுத்தி களைத்துப்ப்போய் நிற்கிறது எங்காவது ஓரிடம்தேடிப்போய். மெலிந்து
எலும்பு தெரிந்த உடலுடனும், ஒட்டிப்போன வயிறுடனுமாய்/
தெரு முனை திருப்பத்திலிருந்த வலது பக்க வீட்டின் மாடியிலிருந்த
பாட்டிக்கு அப்போது தான் கடைக்குப்போக நேரம் வாய்த்திருக்கிறது போலும்.பெரும்பாலுமாய்
காலை வேலை யென்றால் ஐந்தரை மணியின் அதிகாலையின் இருள் பிரியா வேளை யிலும் இரவு வேளை
என்றால் இப்படித்தான் ஊர் உறங்கப்போகிற பொழுதிலுமாய் கடைக்குப் போய் வருகிறாள்.
மெலிந்துஒட்டியதேகம்அவளதுபுடவையைசுமந்துகொண்டுஇருப்பதேபெரியவிஷயமாக/
சென்ற மாதம்தான் அவளது மகளுக்குதிருமணம்முடிந்திருந்தது.புதுக்கருக்கு குலையாத மணப்ப்பெண்,விருந்துச்சாப்பாடு
,மறு வீடு எல்லாம் முடிந்த பின்பாக பிழைப்பை நிலையூன்ற தாய் வீட்டிற்கே வந்து விட்டாள்
கைபிடித்தவனை கூட்டிக் கொண்டு/
வேன் டிரைவராம்கணவன்.கொஞ்சவயதுக்காரனாகத்தான்தெரிந்தான்.
பிள்ளையின் வளர்த்தி கூடஇல்லை.கல்யாணத்திற்குமுன்புதீப்பெட்டிஆபீஸ்சம்பளம்எனஇருந்தவள்கல்யாணத்திற்கு பின்பாய் தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப்போவதை நிறுத்தி விட்டாள்.
தாயும் மகளும் ஏதேனும் முடிவு எடுத்து இருப்பர்களோ என்னவோ
தெரியவில்லை. போட்டி போட்டுக்கொண்டு உடல் மெலிந்து தெரிந்தார்கள்,அம்மையும்,புள்ளையும்இப்பிடியே இருந்தா ப்ல ஒங்க ரெண்டு பேரயும் பாத்து கௌவர்மெண்டு அரிசி வெலைய கொறச்சுப்புடுமா
என்ன?நல்லா சாப்புட்டு நல்லா இருங்க,,,, சொல்லாதா ஆளில்லை கேலியாகவும், உரிமையுடனுமாய். அதற்கெல்லாம்
பதிலாக பாட்டியின் வாய் அகன்ற சிரிப்பொன்றே இருந்திருக்கிறது/
ரொம்பவும்எளிமையானவள்தான்பாட்டியின்மகள்.அவள் தலையில் அன்றாடம்
வைக் கிற பூவைக்கூட அவள் காசு கொடுத்து வாங்குவதில்லை.பக்கத்து வீட்டு கொல் லையில்
பூத்து நிற்கிற மஞ்சள் அரளிப்பூவே அவளது தலையை அலங்கரித்திருக்கிறது அன்றாடம். அவளது வயதுப்பிள்ளைகள்தீப்பெட்டிஆபீஸில்சம்பளம்வாங்கிய
நாளன்றில் கவரிங் கடையை முற்று கை இடும் போது அவள் பலசரக்குக்கடை பாக்கியை கொடுத்துக்
கொண்டிருப்பளாக/
பாராட்டி சீராட்டி வளர்த்த தன் பிள்ளைக்கு இப்படி வயது பிராயத்தில் கூட நல்ல தனமாய் உடுத்த,கொள்ள
கொடுத்து வைக்கவில்லை என பாட்டி இவனிடம் சொல்லி
வருத்தப்படாத நாள் மிகவும் கம்மி.அப்படியெல்லாம் நிலை கொண்டிருந்த வருத்தம் பாட்டியிடம்
இப்பொழுது இல்லை.
தாயும் பிள்ளையுமாய் வீடு பார்ப்பதில் மும்பரமாய் இருந்தார்கள்.MPCC
நகரில் ஒரு வீடு இருப்பதாகவும் வாடகையில் 100 ஐக்குறைத்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு
வந்து விட்டால் அடுத்து வருகிற நல்ல நாளாய்ப்பார்த்து பால் காய்ச்சி குடி போய் விடலாம்
என்கிறாள் பாட்டி/
எதைத்தின்றதுஎனத்தெரியவில்லை.வாந்திஎடுக்கிறது.நாய்,மனைவிதான்சொன்னாள் நான்கு நாட்களுக்கு முன்பாய் குட்டிகளை தூக்கிப்போக வந்திருந்த சிறுவர்கள் இரண்டு பேர் எல் லாம் பொட்டக்குட்டிகளாஇருக்குடா,வேண்டாண்டாஎனச்சொன்னார்களாம்.
ஆனாலும் ஈன்ற நான்கில் இரண்டை பறிகொடுத்துவிட்டு இரண்டை மட்டுமே தக்கவைத்துகொண்டு/
அந்த இரண்டில் கரு நிறம் காட்டுகிற குட்டிதான்வெளி அளந்து
திரிகிறதாய்.இவன் கூட சொன்னான் மனைவியிடம்.வீட்டில் ஏதாவது சாப்பாடு இருந்தால் எடுத்து
வை என/
”இல்லை வேண்டாம்,பிஸ்கட் தவிர எது போட்டாலும்திங்கமாட்டேன்என்கிறது.அதுனால தான்போடலதவிரஇப்பிடியெல்லாம்போட்டுப்பழகவேணாம்.அப்புறம்இங்கேயேதங்கீரும்,முடக்கமாயிரும்என்றாள்.
அவன்மனைவிசொன்னதுநாய்க்குட்டிக்கு கேட்டிருக்குமோ என்னவோ தெரியவில்லை.மேல் நோக்கி மடங்காத வாலுடன் தரையில் கிடந்த
பழந்துணி ஒன்றை வாயில் கவ்விக்கொண்டு பெரிய நாயுடன் எக்குப்போட்டுகொண்டும்,அதைச்சுற்றி
வாலாட்டிக்கொண்டுமாய்/
6 comments:
படம் பிடித்தாற்போல எழுத்து மடை திறந்த வெள்ளமாய்...
அருமை.
வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/தங்க்கலது பிளாக் முகவரியை சொல்லுங்களேன்.பார்த்து மகிழ்ந்து கொள்கிறேன்.
நிச்சயமாக நாய் அதைக் கேட்டிருக்கும்
நம் வார்த்தைகளை விட நம் செயல்கள் மூலம்
நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி
மனிதர்களைவிட மிருகங்க்களுக்கு
நிச்சயம் அதிகமே
மனம் கவர்ந்த சொற்சித்திரம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 1
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/த.ம வாக்களிப்பிற்கும் நன்றி/
விலங்குகள் நம் முகபாவங்களை நன்கு ரசிக்கும்...
அதற்கேற்றார் போல செயலும் காட்டும்...
அருமையான கதை நண்பரே...
Post a Comment