27 Aug 2013

நாணல் கம்பு,,,,,,


அந்த மெல்லிய கம்பு அவளது உடல் எடையை எப்படித்தாங்கும் எனத்தெரிய வில்லை. மாதவன் டீக்கடை வாசலது.இவன் தெற்குப்பார்த்து நிற்கி றான். மேற்குப்பார்த்து கடையின் நடை.

அப்படியானால் கடையின் டீப்பட்டரையும் அப்படித்தானே காட்சிப்பட வேண் டும் அதுதானே நடை முறை விதி. நீங்கள் நினைப்பது சரிதான்.அப்படித்தான் இருந்தது.ஒன்றல்ல,இரண்டல்ல தட்டு நிறைந்த வடைகளும்,பஜ்ஜிகளும் அருகே சட்னி நிரம்பிய வாளியுடன் வைக்கப்பட்டிரு ந்த இடத்தினருகில் நின்றான்.

அது எங்கேவைகப்பட்டிருக்கும்என்கிறகேள்வியெல்லாம்இங்குஅனாவசியம். வழக்கமாக டீக்கடைகளில் பஜ்ஜிகளும், வடைகளும் அதன் அருகே தென்படு கிற சட்னி வாளியும் டீப்பட் டரையில்தானே அமர்ந்திருக்கும்.

அப்படியாய் பலவகைப்பட்டு அமர்ந்து தெரிந்தஅவைகளின்மேல்பட்டபார்வை மெல்ல, மெல்ல நகன்று டீ மாஸ்டரின் மேல் பதிந்த போது மாலை வெயில் மெல்ல மெல்ல இறங்கித் தெரிவதாக/

வடையில் முழித்துதெரிந்த பருப்பும்,பஜ்ஜ்யின் லேசானகருகலுமாய் எதை எடுப்பது,எதை தின் பது முதலில் என யோசிக்க வைத்து விடுகிறது. காலையி லிருந்து மாலைவரைஅமர்ந்த இடத் தை விட்டு நகராமல் ஒன்னுக்குக்கூட எந்திரிக்க யோசிக்கிறவனாய் கம்ப்யூட்டரையே உற்றுப் பார்த்துக்கொண்டு அமர்ந்த படி வேலை பார்ப்பதில் இப்படி ஆகிபோகிறது.

காய்ந்து போன மூளையும் உலர்ந்து போன வாயுமாய் ஏதாவது சாப்பிட்டால் தேவலாம் என யோசிக்க வைத்து விடுகிறது என்கிற நினைப்பிலும் ஆசை யிலுமாய்ஏதாவதுஒருடீக்கடையில்நிற்பதை விடுத்து மாதவன் டீக்கடையில்  நிற்கிறான்.

மிகச்சரியாக அதன் எதிர் வரிசையில் நான்கு கடை தள்ளி டாஸ்மாக். சமயத் தில் அந்தக் கடையின் வாடையும் போதையும்இங்கு வந்து தாக்க தலைகிர் ரிட்டு விடும்.குடிக்கிற திக்கான டீ கிக்காக இருக்கும்.

தினசரிகாலைமாலைஇருவேலையிலுமாய்அங்குடீக்காய்நிற்கிறபோதுகிடைக்கிற தட்டுப்படு கிற கடையின் அடையாளத்தையும்,வாசனையையும் தவிர் த்து காணமுடிகிற ஒன்றாய் அந்தப் பாட்டி காட்சிப்பட்டுத்தெரிகிறாள்.

ஒரு கனத்த சுட்டு விரலின் பருமனே இருக்கும் மெல்லியநாணல் கம்பு. அது வும்அவளதுஇடுப்பு அளவே இருக்கிறது.80 ற்கும் மேற்பட்ட வயதில் அவளது உடலைபோர்த்திதெரிந்த புடவை உடலுடன் ஒட்டிப்போயும்,நகர்வற்றுமாய்/புடவையை உடுத்தியிருக்கிறாளா அல்லது அள்ளி போர்த்தியிருக்கிறாளா என்கிற சந்தேகம் அவளைப்பார்க்கிற போதெல்லாம் வராமல் இருந்த தில்லை.அவள் வருகை டீக்கடை நடையை தொட்டு விட்டாலோ அல்லது தூரவருகையில்அவளைஎட்டிப்பிடித்துவிட்டாலோபோதும்.மாதவன்ரெடியாக இரண்டுபஜ்ஜிகளைபிய்த்துப் போட்டு சட்னி ஊற்றி வைத்து விடுவார் ஒரு மெல்லிய ப்ளாஸ்டிக் தட்டில்/

அவளும் கடைக்குள் நுழைந்ததும் அதை வாங்கிக்கொண்டு கையினுள் இருக் கிற இரு பெஞ்சில் அமர்ந்து விடுவாள்.பெரும்பாலான நாட்களில் கையில் வாங்கிய பஜ்ஜித்தட்டுடன் அவள் சென்று அமர்கிற இடம் கடையின் பின்னா லேயே இருக்கும்சமையலறையாகத்தான் இருக்கி றது. அங்குதான் அவளுக்கு சௌகரியம் எனச்சொல்கிறார் கடையின் உரிமையாளர் மாதவன்.

அன்றாட நகர்வுகளில் காலையிலும்,மாலையிலும்நிகழ்ந்தேறுகிற இந்த சௌ கரியம் அவளது எண்பதிற்கும் தாண்டிய வயதில் அவளை எங்கு நிலை நிறுத் தி வைத்திருக்கிறதெனத்தெரியவில்லை.

6 comments:

 1. அன்றாட வாழ்வில் கண்ணில் காண்கிற காட்சிகளை எல்லாம், எழுத்தாக்கி, படிப்போர் மனங்களில் தொடர் காட்சிகளாய் திரைப்படம் பார்ப்பதுபோல் ஓடவிடுகிறீர்கள் ஐயா. அருமை நன்றி

  ReplyDelete
 2. காட்சி என்னுள்ளும் படமாய் விரிய
  அந்தக் கடைசிக் கேள்வியும்
  நெஞ்சைக் குடையத் துவங்கிவிட்டது
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும் , கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/

  ReplyDelete