28 Aug 2013

கத்திரிப்பான்,,,,,,,


                     
வெட்ட வெட்ட குறைகிறது முடி.அது கையின் விரைவா அல்லது கத்திரியின் 
விரைவா எனப் புரியவில்லை,மாறாக அது சொல்லிச்சென்றசெய்திகை,மற்றும் கத்திக்கோல் ,சீப்பு இவைகளின் கூட்டு உழைப்பே சிலும்பிக் கிடந்த முடிகளை வெட்டி அழகு படுத்திக் கொண்டிருக்கிறது என/

காலையில்எழுந்ததுமேநினைவுக்குவந்தது,இன்றுமுடிவெட்டிவிடவேண்டும்,
என/

என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு ஐந்து மணிக்கெல்லாம்எழுந்து விட்டான். இந்நேரம்தாத்தாடீக்கடை திறந்திருப்பார்.முகம் கழுவி தலை சீவுகையில்  திரும் பவும் ஒருமுறை வந்த நினைவுஇன்றைக்கு எப்படியேனுமாவதுமுடிவெட்டி விட  வேண்டும் என்பதே/

என்றுமே சீக்கிரம் கடை திறாந்து விடுகிறா தாத்தா இன்று லேட்டாக திறந்து விட்டார் என சொன்னார். கடையில் டீ சாப்பிட உட்கார்ந்திருந்த எலெக்ட்ரீசிய ன்  மாடசாமி அண்ணன்.

என்னுடன் சேர்ந்து மூன்று பேர் அமர்ந்திருந்தோம் அந்நேரமே.வேகமாக வந்த ஒருவருக்கு எலெக்ட்ரீசியன் அண்ணன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆமா அண்ணே,காலையில் நான் வந்துதான் எழுப்பி விட்டேன் அப்புறமா மனசில்லாம கடைபோட்டாரு பாத்துக்கங்க,வயசாச்சில்ல, முன்ன மாதிரி நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சி கடை போட முடியல ,என்னமோ ஒரு வைராக்கி யத்துல வண்டிய ஓட்றாருண்ணெ,ஆமாம் என்றார்.

அந்த ஐந்து மணியின் அதிகாலை புலர்வுக்குரோட்டில்இன்னும் நடமாட்டம் ஆரம்பிக்கவில்லை.மனிதர்களைச்சுமக்காமல்தன்னைத்தானேச்சுமந்துகொண்டு வெற்றுருவாய் காட்சியளித்தது கருநிற சாலை.அந்த மோனம், ,அமைதி .மென் சலனம்எல்லாமுமாய்தவம்புரிகிற முனியின் நீண்டதாடியாய்நீண்டு விரிந்து கிடக்கிறதாய்.

டீசாப்பிட்டுவிட்டுவருகிறேன்வீட்டிற்குள்  நுழைகையில் வழியெங்குமாய் காண் பித்து வந்த டார்ச் லைட்டை அணைக்க மறந்தவனாய் திரும்பவும் ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வந்து அமர்கிறேன்.

அந்த அமர்வு புத்தகம் படிக்கலாமா,கம்யூட்டர் பார்க்கலாமா என அலை பாய்ந்த மனதுக்குள்ளாய் புத்தகமும் அல்லாமல் கம்யூட்டரும் அல்லாமல் வீட்டின் பக்க வாட்டுவெளியை பெருக்குவது என்கிற முடிவு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளச் செய்து விடுகிறது.

காலைச்சாப்பாட்டை முடித்த பொழுது மணி பத்து இருக்கலாம்.இந்நேரம் போ னால் கடையும்திறந்திருக்கும்,கூட்டமும்  இல்லாமல் இருக்கும் என்கிற நினை வு தலைதூக்கிய போது ஏதோ ஒரு வேலையோ,அல்லது மிதமிஞ்சி ப் போன் சோம்போறித்தனமா தெரியவில்லைபோகவில்லை.அப்படியே சாப்பிட்டு விட்டு குளிக்கஆரம்பித்துவிட்டேன்.

காலைச்சாப்பாடு கொஞ்சம் வேலை,பஜார்ப் பக்கம்  போய்வந்தது. மதியச் சாப்பாடு,அது முடிந்து ஒரு மென் பகல் தூக்கம் என எல்லாம் முடிந்து எழு ந்தமாலையின் 4மணிக்கு,இரண்டு மணிக்குபோய்விட்டுதிரும்பவுமாய் வந் து விட்ட மின்சாரத்தின் துணையுடன் முகம் கழுவி சட்டை அணிந்து கொண்டு நான் சென்ற இடம்காலையில் சென்ற அதேடீக்கடையாய்   இருக்கிறது.

அப்படியேமுடிவெட்டிவிட்டு சென்று விடலாம்.வீட்டிற்குப்போய்திரும்புவதென் றால் சொம்பேறித்தனம் அல்லது வேறு ஏதாவது தடுத்து விடும். வேண்டாம். சட்டைப் பையைப் பார்கிறேன்.பணம் இருந்தது.

டீக்கடையிலிருந்து சலூன் வாசல் கண் படும் தூரத்திலேயேதான் இருந் தது. நாகர் கோவிலார் காய்கறிக்கடை ,அதன் பக்கத்தில் இருந்த பலசரக்குக்கடை மற்றும் பூக்கடை,,,,என அடுக்கியிருந்த வரிசையில் சலூன்.

வாசலில்ஒரு ஜோடி செருப்புக்கிடந்தது. அதுசலூன்உரிமையாளர்செருப்பாகத் தான்இருக்கவேண்டும்.மோல்டெட் செருப்பு.150ரூபாய்க்குக்குறையாமல் இருக் கலாம்.

பாலவனத்தத்தில்செருப்புத்தைக்கிறகாளியுடன்பேசிக்கொண்டிருந்தபோது எங் கனஅண்ணாச்சிலெதர்வெலையெல்லாம்கூடிப்போச்சி,முன்னமாதிரி வேலையு ம் இல்ல இப்ப,அதான் போயி வேலைகள ஆர்டர் எடுத்துட்டுவர்றேன் என்றார் இதுபூராம்பள்ளிக்கூடபுள்ளைகளோடபைக.கிழிஞ்சதுபோனதுவந்தது.எல்லாம் கைபாத்துக் குடுக்குறதுக்காக வாங்கீட்டுப் போறேன் என்றார்.

கடையின் வாசலில் செருப்பைப் பார்த்ததும் காளி சொன்ன வார்த்தைகள் ஞாப கத்துக்கு வந்தது.

சென்ற முறை முடி வெட்டிக் கொண்டிருக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த வர் ”என்ன கடைக்காரரே,நல்லாயில்ல இதுசொன்னா சொன்னபடி நடந்துக் கங்க,அப்பத்தான் நல்லாயிரூக்கும்,ஆமாம்” என வண்டியிலிருந்து இறங்கா மலே யே பேசியவரிடம் ”இல்லண்ணே,வீட்டுக்காரம் மாவுக்கு ஒடம்பு சரியில் ல, ரெண்டு நாளா கட தெறக்கல,இன்னைக்கு வெள்ளிக் கெழம வேற, தொழில் சுமாராத்தான்நடக்கும்,குடுத்துர்ரேன்கூடிய சீக்கிரம். தொழில் நல்லா ஓடுனா ஒங்களுக்கு குடுக்காம எங்க போகப் போறேண் ணே”,என வண்டியிலிருந்து இறங்காமல் கெத்தாகபேசியவரிடம்பணிவாக சொன்ன சலூன் கடைக்காரர் அவர் போனதும் சொன்னார்.

“இனிமே செத்தாலும்தவணைக்குவாங்கக்கூடாதுசார்.நானும்ஒரு பெரட்டு பெரட்டீறலாம்ன்னுதான் இவர்கிட்ட கடனுக்கு காசு வாங்குனேன். வார வட்டி சார்.வாங்குன பணத்தோட வட்டியையும் சேத்து வாராவாரம் குடுத் துரணும் கரெக்டா,இல்லாட்டி இப்பிடித்தான் வந்து தெருவுல நின்னு மானத்த வாங்கு வாங்க. நாய் பொழப்பா போச்சு சார்.நம்ம பொழப்பு சமய த்துல சீன்னு ஆயிரும் சார்.ஒழுங்கா தொழில் ஓடுனா ஒண்ணும் தெரியாது சார்.கடைக்கு எதுவும் லீவு போட்டுறக்கூடாது.அப்பிடி இருந்தா பொழப்பு நகந்து போறது தெரியாது சார். இல்லைண்ணா,இப்பிடித்தான்அசிங்கப்பட வேண்டியிருக்கும் சார்.

”பையனுக்கு படிப்பு வரல சார்.அங்கிட்டு இங்கிட்டுன்னு ஆடி ஓய்ஞ்சி போயி இப்பத்தான் நெலைக்கு வந்துருக்கான் . ஒரு வருசமா,அவனும் குடி கூத்துன்னு ரொம்ப கெட்டு தூந்துபோனான் சார்,இப்பத்தான்கையக்கால  புடிச்சி ஒங்கள மாதிரி ரெண்டு பேர விட்டு பேசவுட்டுசம்மதிக்க வச்சிருக்கு சார்,கேரளாவுக்கு எங்க வேலைக்கு போறேன்னு ஒதுக்கிட்டான்,சாப்பாடு தங்குறயெடமெல்லாம் அவுங்களே குடுத்துறம்ன்றாங்க.சரின்னு அனுப்பிவச்சிருக்கு,பாப்போம், அவன் மூலமாவது குடும்பத்துக்கு ஒரு விடிவு வருமான்னு/ இங்கயே இருந்து ஏங்கூட நின்னு தொழில் கத்துக்கடான்னு சொன்னாலும் கேக்குற வழியக் காணோம். அதுவும் ஒரு வகைக்கு நல்லது தான் சார்.வெளிய போனா பயம் இருக்கும்,தொ ழில்ல ஒழுக்கம் கெடைக்கும், இதுன்னா தகப்பன் கடைதானேன்னு ஆகிப் 
போகும்.அப்புறம்பழைய படியும் ஆரம்பிச்சிட்டான்னா நிப்பாட்றதுசெரமம் சார். அங்கிட்டுப்போயி கண்ணுக்குதெரியாம  என்னத்தையோ ரெண்டு பண்ணீட்டா லும்துட்டுசம்பாதிக்கணும்ங்குறஅக்கறைவந்துரும்சார்”.எனநிறையபேசிக் கொண்டவாறே இருந்தார் முடி வெட்டிய பின்னுமாய்/ நான் தான் நேரமாகிறது என வந்து விட்டேன்.

அன்றைக்குஅப்புறம்இன்றைக்குத்தான்அவரதுகடைக்குச்செல்வபனாக/வெட்ட,வெட்டகுறைகிறதுமுடிஅதுகைமற்றும்கத்திரி,சீப்புஆகியமூன்றின்கூட்டு  உழைப்பும் இயக்குபவரது மன நிலையையும் விரைவையும் காட்டி/ 

8 comments:

Yaathoramani.blogspot.com said...

அன்றாட நிகழ்வுகளையும்
சந்திக்கும் மனிதர்களையும்
அவர்தம் உணர்வுகளையும்
அருமையாகச் சொல்லிப்போகும்
தங்கள் பதிவுகள் அருமை
வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/உணர்வுர்வுகள் பேச எழுந்து நடமாடுகிற மனிதம் என்னவெல்லாம் செய்கிறது, எதையெல்லாம் சந்திக்கிறது தங்களின் பிழைப்பிற்காக,என்பதுதும் இங்கு பேசபடவேண்டியதுதானே/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா. அன்றாட நிகழ்வுகளை அப்படியே, சற்றும் கலப்பின்றி படம் பிடிக்கின்றீர்கள்

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

ராஜி said...

அடிக்கடி சந்தித்தாலும் மறந்து போற ஒரு மனிதரை பத்தின ஒரு கதை படைத்து அசத்தி விட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி!

vimalanperali said...

வணக்கம் ராஜி அவர்களே/இவர்கள்தான் நம் எழுத்தின் மைந்தர்கள்.இவர்களை விளிம்பு நிலை மக்கள் என்கிறார்கள். இவர்களைப்பற்றி கூறாமல் வேறு யார் பற்றி கூறட்டும் சொல்லுங்கள்?நன்றி வருகைக்கு/

மகேந்திரன் said...

காலையில் எழுந்து..
கடையோரங்களில் பார்த்த நிகழ்வுகளை
அருமையாக கதையில் பிணைத்து இருக்கிறீர்கள்...
அருமை அருமை..

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்.இவர்களை எழுத்தில் பிணைக்காமல் வேறு யாரைப்பிணைக்க?நன்றி வருகைக்கு/