பாண்டி மீனாவைப்பற்றிபேசுகையில்
முருகநாதனைபற்றியோ
காயதிரி அக்காவைப்பற்றி பேசுகையில்
பாலசுந்தரம் பற்றியோ
நினைக்காமல் இருக்க
முடியவில்லை.
பாண்டி மீனா முருக நாதனின் மகள்.
காயத்திரி அக்கா பாலசுந்தரின் மனைவி.
இருவருமே இப்போது உயிருடன் இல்லை.
பாண்டி மீனாவின் தந்தை முருகநாதன்
நோய்வாய்ப்பட்டு இறந்து போனான்.
காயத்திரி அக்காவின் கணவர்
பாலசுந்தரம் சாலை விபத்தொன்றில்
அகாலமரணமடைந்து போகிறார்.
முருகநாதன் இறந்து போகையில்
பாண்டி மீனா பத்து வயது குழந்தை.
பாலசுந்தரம் இறந்து போகையில்
காயத்திரி அக்கா முதல் குழந்தையை
வயிற்றில் சுமந்து கொண்டிருக் கிறாள்.
அடுத்தடுத்த வருடங்களில்
சடுதியில் நடந்து போன சம்பவங்களால்
அனாதரவாகிப்போன குடும்பங்கள்
இரண்டும் ஒரே ஊரில் அருகாமை தெருக்களில்/
4 comments:
வலி சுமக்கும் கவிதை...
வலி நிறைந்த கவிதை...
ஆனால் உறவு முறை கொஞ்சம் சுற்றுகிற மாதிரி உள்ளது...
வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் இரவின் புன்னகை சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment