லாரிகள் நிரம்பித்தெரிகிற வடக்கு ரத வீதியின்
வழியாகத்தான் தினசரியான எனது பயணம்.
மாதத்தின் பாதிநாட்கள் அந்த வீதி லாரிகள் சுமந்தும்,
அதன் ஓட்டுனர்,கிளினர்களை காட்சிப்படுத்தியுமாய்/
மஞ்சளும்,பச்சையும்,இன்னும்,இன்னமுமான
பிறவர்ணங்களைக் காட்டிய லாரிகளின் டிரைவர்கள்
உயரமாயும்,குள்ளமாயும், குண்டாகவும்,ஒல்லியாகவும்.
பேண்ட் சர்ட்டில் சிலர்,கைலி சட்டையில் சிலர்
எனகாட்சிப்பட்ட அவர்கள்
முரட்டு உருவம் காட்டியும்,மென்மை தரித்துமாய்/
அவர்கள் அணிந்திருந்த உடைகளும்,பேச்சுமாய்
அவர்களது வாழ்வின் பகுதியை
சொல்லிச்செல்கிறது மென்மையாக/
குண்டும் குழியுமாய்ப்புகை வண்டி நிலையத்தை
எதிர் நோக்கியுள்ள அந்த வீதியில்
அரசின் உணவு இருப்புக்கிட்டங்கி ஒன்று இருந்தது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல் உழைப்பாளர்களாய்
பணிபுரிகிற அந்தக்கிட்டங்கியில் புகை வண்டி நிலையத்திலிருந்து
சரக்கு ரயில் மூலமாக வருகிற சரக்குகள்
சேமித்து வைக்கப்படும்.
பெரிது பெரிதாய் உயரம் காட்டி நிற்கிற
கட்டிடங்களுக்குள் இருக்கிற சரக்குகளை
மாதத்தின் பாதி நாட்கள் தங்கள்
தோள்களிலும்,முதுகிலுமாய் தூக்கிச்சுமக்கிற
தொழிலாளி கிட்டங்கியின் வாசலிலிருந்து
அன்றாடம் இடம் பெயர்கிறார் அவர்
கடன் சொல்லி சரக்கு வாங்குகிற பலசரக்குக்கடைக்கு/
2 comments:
வாழ்வின் முரண்நகை!
முரண்நகை முற்றிச்சிரிக்க முரண்நகை ஆகிப்போனது.நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment