28 Aug 2013

குமிழ்,,,,,


சூடேறி குமிழ் விட்ட எண்ணெய்ச் சட்டியிலிருந்து அப்பளம் வறுத்தெடுத்துக் கொண்டிருந்த அவளின் முகம் முட்டி சமையலறை ஜன்னல் வழியாக வெளி யேறுக்கிறது புகை.

டானா வடிவ கடப்பக்கல் மேடை.அதன் மூலையில் பாத்திரம் கழுவும் ஸிங்க். மேடை அடியில் தண்ணீர்க் குடங்கள்,ஷெல்பில் மளிகைச் சாமான்கள். கேஸ் ஸ்டவ் ,சிலிண்டர்,கிரைண்டர், மிக்ஸி,குக்கர்,பத்திரங்கள் இத்தியாதிகளுடன் அவளும். 

அப்போதுதான் பிரஷர் வந்து கொண்டிருந்த குக்கரின் தலையில் விசிலை மாட்டி விட்டு வியர்வை பிசுபிசுத்த உடலுடன் குழம்பு வைத்திருந்த பாத்திரத் தைதிறந்து கிண்டி விடுகிறாள்.கையோடு நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை  எ டுத்து சட்டியில் போடுகிறாள் வதக்குவதற்காக.

அதற்குள்ளாக தாமதமாக எழுந்திருந்த கணவனுக்கு டீப் போடுவதில்,அல்லது போட்டிருந்த டீயை சூடு பண்ணிக் கொடுப்பதில் முனைகிறாள்.இதற்குஊடாக  அவளும் ஒரு டம்ளர் டீயை சாப்பிட்டுக்கொள்கிறாள்.

அறைத்து வைத்திருந்த மாவை எடுத்து தோசை கேட்கும் கணவனுக்கு தோ சையும்,இட்லி கேட்கும் பிள்ளைகளுக்கு இட்லியுமாக ஊற்றி வைத்து விட்டு........................,,,,,,,,,,,,,,,,,,,,,

பொடியாய் நறுக்கிய தேங்காய்ச் சில்லுகளையும், பொரிகடலையையும் மிக்சியில் போட்டு விட்டு......,,,,,

இட்லி சட்டியை திறந்து பார்க்கும் அவளின் முகத்திற்கெதிரே இருந்த சமைய லறை ஜன்னலிருந்து வந்த காலை நேரவெயில்அவளின்மேல் பட்டுஅவ ளின் இருபுறமும் விலகி பிரிந்து வீட்டினுள் பிரவேசிக்கிறது. 

ஜன்னல்கம்பிகளின்ஊடாகவந்தவெயில்கற்றைகளில்,புகைகலந்துஆவி பறந் து அவள் முகம் முட்டும் அந்த சமயங்களில் அந்த சமைலறையே ஒரு சின் ன தொழிற்சாலையாகவும்,அவள் அந்த தொழிற் சாலையின் இயந்திரம் போல வும் தெரிகிறாள்.

அரிசிபருப்பு,அரசலவு,உப்பு,புளி,மிளகாய்எனஒருகையிலும்,பாத்திரங்கள்,கரண்டிகள்,தோசைச் சட்டி,இட்லிக் குக்கர் என மறு கையிலுமாய் பகிர்ந்து கொ ண் டு உழலும் அவளுக்கு காலை எழுந்தவுடன் உடலின் இரண்டு பக்கங்க ளும் நான்கைந்து கைகளும்,இறக்கைகளும்முளைத்துவிடுகிறதோ.....எனசந்தேகம் கொள்கிற அளவுக்கு விரைவாக உழைக்கிறாள்.

அந்த இறக்கைகளையும்,கைகளையும்,அவளின் வேலை வேகத்தையும் பார் த்த அவளின் மகன் சின்னவன் "அய்,அம்மா மிசின் வேகத்துல வேலைசெய்யு றாங்க" என்கிறான்.அவனது கணவன் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து பேப்பர் படிக்கிறான். 

இதில் அவள் என்பதும்,சின்னவன் என்பதும் ,கணவன் என்பதுவும் யார்,யாராக இருக்கிறார்கள்,?யார்யாராகஉருவகப்படுத்தப்படுகிறார்கள்?வேறுயார்?நம்மை யும், நம்மைசுற்றியுள்ளகுடும்பங்கள்அனைத்திலும்உள்ளவர்களையும்தானே?

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

காலை எழுந்தவுடன் உடலின் இரண்டு பக்கங்க ளும் நான்கைந்து கைகளும்,இறக்கைகளும்முளைத்துவிடுகிறதோ.....எனசந்தேகம் கொள்கிற அளவுக்கு விரைவாக உழைக்கிறாள்.

அழகான குமிழ்களாய் நினைவ்லைகள்..!

vimalanperali said...

வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

நினைவுகள் சுகமானவை...
குமிழ்கள் அழகாய்...

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்டுரைக்குமாக/

Tamizhmuhil Prakasam said...

அன்றாடம் காலை வேளைகளில் அடுப்படியில் பம்பரமாய் சுழலும் குடும்பத் தலைவிகளை அழகாய் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்....நினைவுகள் - அழகான நீர்க்குமிழ்களாய் !!!

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்ரி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/