பறந்து விரிந்த வெற்று வெளியெங்கும்
தனது ஒற்றைக்குரலால் கானம்மிசைக்கிற
குயில் என்ன சொல்லிவிட்டுப்போகிறது
எனத்தெரியவில்லை.
எதிர்ப்பாட்டோ,எசப்பாட்டோ இல்லை அது,
இரண்டு வேப்பமரங்கள்,மூன்றே பன்னீர் மரங்கள்
இலைகளும்,கிளைகளும் பூவும் பிஞ்சுமாய்
தன் ஆகுருதி காட்டி நின்ற அவைகளில்
கூடு கட்டி குஞ்சுகளுடன் வாழ்ந்த குயில்
இன்று மரங்கள் வெட்டப்பட்ட பின்பாயும்
அன்றாடம் கானமிசைத்து விட்டுச்செல்வதாக/
எதிர்ப்பாட்டோ எசப்பாட்டோ இல்லை அது,
சற்றே நிமிர்ந்து உற்றுக்கேட்கையில்தான் தெரிகிறது.
இருப்பு இழந்த அதன் எதிர்ப்புக்குரல் என/
10 comments:
வணக்கம்
பதிவை அருமையாக சொன்னீர்கள்
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வணக்கம் ரூபன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாய்/
மனிதனுக்கு கொடுக்கும் எச்சரிக்கை பாட்டு...!
அருமையாகச் சொன்னீர்கள்
இனிமையக அதன் குரல் இயற்கையில்
அமைந்து போனதால் அதன் எதிர்ப்புமனம்
நமக்குப்புரியவில்லை
அற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்ரி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாய்/
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சே குமார் சார்.நன்ரி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய்/
இருப்பு இழந்த அதன் எதிர்ப்புக்குரல் என/
மனிதனின் செயலுக்கு இசை பாட்டா பாடமுடியும்.
இருப்பு இழந்த அதன் எதிர்ப்புக்குரல் கேட்டாவது தன் தவறை உணரட்டும்.
கவிதையும், படமும் அருமை.
வணக்கம் கோமதி அரசு சார்.நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Post a Comment