4 Sept 2013

சுஷ்யத்தினுள்ளே,,,,,,,/

                             
 அன்று சனிக் கிழமை.சனிக் கிழமை என்றாலே சந்தோஷம் தொற்றிக் கொள்கிறது.

முதல் நாள் வெள்ளி இரவு அதிகம் கண் விழிக்கலாம்.டீ.வி பார்க்கலாம்,பிடித்தபுத்தகங்கள் படிக்கலாம்.இல்லையென்றால் ஆசை மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கலாம்.லேட்டாகத் தூங்கி மறுநாள் லேட்டாக எழுந்து (பிள்ளைகளுக்கு பள்ளிவிடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம்.)சாவகாசமாய் அலுவலகம் கிளம்பிமதியம் வீடுவந்து நேற்றிரவு விட்டுப் போன தூக்கத்தின் மிச்சம்,மீதியை தொடரலாம்.(சாப்பாட்டை ஃபுல்கட்டு கட்டிவிட்டு.)

 இது மாதிரியான செளகரியமான சனிக்கிழமைகளின் ஒரு நாளில் தான் நானும்எனதுநண்ப னும் வேலை முடிந்து வேளியே வருகிறோம்.

அவன் வெளியூர்நான் உள்ளூர் .அவனது வீட்டில் மனைவிமக்கள் ஊரில் இல்லைஎனவும் மாலை ஆறு மணிக்கு மேல் பஸ் ஏறினால் போதும் என்றும் கூறினான்சரி எனகிளம்பினோம்.

அப்போதுதான் சாப்பிட்டிருந்ததால் வயிறு தனி கனத்துடன்.கழட்டி கீழேவைப்பதென்பதெல்லாம் முடியாத காரியம்.தூக்கிக் கொண்டுதான் நடந்தோம்.

கடலை மிட்டாய் தின்பது,சிகரெட் பிடிப்பது என எல்லா படலங்களும் முடிந்தது.

பஜார் பக்கம் சென்றோம்மாரியம்மன் கோவில்தெப்பக் குளம்,காய்கறிமார்கெட்,தேசபந்து மைதானம் எல்லாம்  சுற்றி விட்டு மணியைப் பார்த்தால் ஆறரை.

இன்னும்பலமைல்போகவேண்டியிருக்கிறது.என்அருமைநண்பன்சொன்னான்.“சுஷ்யம்சாப்பிட வேண்டும் என.

நான்கைந்து டீக்கடைகளில் அலைந்து கேட்ட போது “அப்படீன்னா?” என்றார்கள்.

உருளைக்கிழங்கு சைஸில் உருண்டையாக சுடப் பட்ட அந்த பண்டத்தினுள்வேகவைக்கப்பட்ட பாசிப் பருப்பு,(அல்லது தட்டைப்பயராக இருக்கும்.) அதன்பூர்வீகம்அநேகமாய் கிரா மமாகத்தான் இருக்கும் என நாங்கள் கூறியதை கேட்டஒருவர்மீதிடீயையும்குடித்துவிட்டு சொன்னார்சுஷ்யம் சுடும் இடத்தின் அடையாளத்தை./

வேகு,வேகென சைக்கிள் மிதித்தோம்.அவர் சொன்ன இடம் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர்தூரத்தில் இருந்தது.

வாயிலிருந்து நீர் ஒழுகவெல்லாம் இல்லை.ஏதோ ஒரு வித ஆவலோடு சென்றோம்.அங்குசென்று பார்த்ததில் சுஷ்யம் மட்டும் என இல்லை.பணியாரம்,அதிரசம்,முறுக்கு,போளி,சுண்டல்,தட்டாம்பயறு,வடை,குழாய்ப் புட்டு ,,,,,,,ஒருசின்ன தொழிற்சாலையாய் சுறுசுறுப்புடன் அந்த இடம்.

இத்தனைகளையும் சுட்டு எடுக்க,விற்று வாங்க,,,,,,நான்கு பேர்  இருந்தார்கள் அங்கேயே.

வாங்கிய சுஷ்யத்தை அங்கேயே இரண்டுமூன்று என உள்ளே தள்ளிவிட்டு ஆளுக்கொருபார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

ஆத்ம திருப்தி என்பது இதுதானோ?அப்புறமென்ன சுஷ்யத்தைப் பற்றி மிகவும் கவலைதோய் ந்தமுகங்களுடன்பேசியவாறேவந்தோம்.“முன்னமாதிரிஇல்லைசுஷ்யம்.”,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,  என்பது போன்ற வார்த்தைகளை பகிர்ந்தவாறே.

அவன் வழியில் அவனும்,எனது வழியில் நானும் செவ்வனே பிரயாணித்தோம் அவரவர்வீடுக ளுக்கு.

 கையில் கொண்டுவந்திருந்த பார்சல்  பேப்பரை பிரித்துப் பார்த்த போதுதான் பார்த்தேன்அந்த விளம்பரத்தை “டீவியில்”./

 ஒருவர் வீட்டிலிருந்து போன் பண்ணுகிறார்.அரை மணி நேரத்தில் பீட்ஸா வருகிறது.அதை வட்டமான சுழல் கத்தி கொண்டு அறுக்கிறார்சாப்பிடுகிறார்.கையை துணியில்துடைத்து விட்டு மற்ற வேலைகளை பார்க்கப் போய்விடுகிறார்.

அன்று இரவே  பீட்ஸா தயாரிப்பை பற்றி பார்க்க நேர்கிறது ஒரு ஆங்கில சேனலில்.அதில் என் னென்னவோ அயிட்டங்களையெல்லாம் சேர்க்கிறார்கள்எல்லாம்புரதம்,முந்திரி,,,,,,,,இதுமாதிரிதான்.

இது போக ஒருகடல் வாழ் உயிரினத்தின் உடலில் உள்ள ஜெல்லியை மட்டும் எடுத்துஅதிலும்ஏதேதோ சேர்த்து அதை கலர்,கலராக்கி பீட்ஸாவில் சேர்க்கிறார்கள்.அது ஒரு ரகம்எனவும் சொல்கிறார்கள் .

பின்னர் அதை சைஸ் பண்ணி (மந்திரித்து?/,,,,,,,) தட்டில் வைத்து காண்பித்தார்கள்.

அப்புறம்சாண்ட்விச்அடைக்கப்பட்ட டின் உணவு இத்தியாதி,இத்தியாதிஅதன்செய்மு றை  என நிறைய காண்பித்தார்கள்.நிறையச் சொன்னார்கள்.   இதையெல்லாம்பார்த்துக் கொண்டிருந்த எனது உறவினன் சொன்னான்.

நமதுதாய்மார்களின்,பாட்டிகளின்,சகோதரிகளின்கைமணம்கமதயாராகும்நம்மண்ணின் வாசனைமிகுந்ததயாரிப்பானசுஷ்யம்,அதிரசம்,,,,,,,,,இத்தியாதி,இத்தியாதிகளை கிலோ மீட்டர் கணக் கில் பயணம் பண்ணி வாங்க வேண்டியுள்ளது.

ஆனால் பீட்ஸாக்களும் ,குடல் கெடுக்கும் பானங்களும் ,சாண்ட்விட்சுகளும் நமது கைக்குஎட்டும் தூரத்தில்.

 “இந்த நாகரீக நூற்றாண்டில் எதற்கு முதலிடம் கொடுக்கப் போகிறோம் நாம்?” எனவும்கேட்கிறான். பதில் சொல்லுங்களேன்.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதையும் கெடுத்து... உடலையும் கெடுத்து...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆத்ம திருப்தி என்பது இது தானோ...?

Unknown said...

உலக மயமாக்களில் காணாமல் போனது சுஸ்யம் மட்டுமல்ல ...ஆனால் வந்ததோ உடலைக் கெடுப்பவை மட்டுமல்ல ,மனதைக் கெடுப்பவைகளும்தான் !

சென்னை பித்தன் said...

பாரம்பரிய உணவு சுவையானது மட்டுமல்ல; அரோக்கியமானதும்;ஆனால் இன்றைய வேக உணவுகள்?!
நல்ல பகிர்வு

vimalanperali said...

வணக்கம் சென்னைப்பித்தன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/ஆரோக்கியங்கள் திட்டமிட்டு கெடுக்கப்படுகின்றன/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்கலதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/
உடல் கெடுத்து மனம் கெடுத்து என்பதற்கெல்லாம் அப்பாலாக நிதர்சனம் இன்று வேறுமாதிரியாய்/

vimalanperali said...

பாரம்பரியங்கள் இன்று திட்டமிட்டு காயடிக்கப்படுகின்றன,நன்றி பகவான் ஜி சார்.வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Tamizhmuhil Prakasam said...

சத்தான பாரம்பரிய உணவுகளை மறந்து துரித உணவுகளால் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

vimalanperali said...

வணக்கம் தமிழ்வாசிபிரகாசம் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சத்தான பாரம்பரிய உணவுகலை நாம் மறக்கவில்லை.மறக்கடிவைக்கப்பட்டுள்ளோம்.

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் அண்ணா...

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

நேரம் இருக்கும் போது சென்று பாருங்கள்...

அதற்கான இணைப்பு கீழே...

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4.html

நன்றி.

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.நன்றி தங்களின் அறிமுகத்திற்கு.கண்டிப்பாக சென்று பார்க்கிறேன்.