13 Sept 2013

பந்தக்காலு,,,,,,


அன்பு நண்பருக்கு வணக்கம்.ரொம்பவுதான் நாளாகிப்போனது உங்களுக்கு கடிதம் எழுதி.

ஆமாம்,,,,,,பெண்குழந்தை பிறந்திருக்கிறதாமே,சந்தோசம், வாழ்த்துக்கள். தங்களுக்குதிருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து பிறந்த  குழந்தை. மனைவி கருவுற்றவுடன் ஸ்கேன் பார்த்து பெண் குழந்தை என்றவுடன் கலைத்து ,,,,,, “இனியும் கலைத்தால் மனிவியின் உயிருக்கு ஆபத்து” என்கிற டாக்டரின் எச்சரிக்கையினால் கலைக்காமல் விட்டு பிறந்த பெண் குழந்தை.
உங்கள் கூற்றுப்படி உங்களை தட்டுக்கேட்க ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை பொய்யாக்கப்பிறந்த குழந்தை.இனி அடுத்ததாய் ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு திரிவீர் கள் அப்படித்தானே நண்பரே.?

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?பணியில் சேர்ந்த முதல்நாள் “சார் ப்யூன் போஸ்ட்” என உங்களிடம் தானே “அப்பாயிண்மெண்ட் ஆர்டரை” கொடுத் தேன்.

பின் வந்த நாட்களில் நமது ரூம் வாசப் பேச்சுகளில் இதெல்லாம் கேலியும், கிண்டலுமாக இடம் பெறுமே,

“டேய் கொரங்குப்பயலே,ப்யூன் போஸ்ட்டுன்னு வந்த பைய இப்ப இவ்வளவு பேச்சு பேசுறயேடா” “டேய் பகலிலேயே பசுமாடு தெரியாத பையன் நீயீ,,,” ஆரம்ப நாட்களில் நமது பேச்சும், பழக்கமும் இப்படித்தான் இருந்தது.அப்புறம் போகப்போக எல்லா விஷயங்களுக்குள்ளும் சென்றோம்.பகிர்ந்து கொண் டோம்.

அலுவலகம்,ரூம் என வித்தியாசமில்லை.இடத்தை விட்டு விட்டு பொருள், ஏவல்அடிப்படையில்எல்லாம்பேசினோம்.எங்கெங்கோ கிடந்த இரு விதைகள் காற்றில் இழுத்து வரப்பட்டு ஓரிடத்தில் விழுந்து மண்பிளந்து, துளிர்த்து, முளை விட்டு ,கிளை பரப்பி நின்றது போல் நம் நட்பும்,நட்பின் ஊடாக வந்த அந்தஉறுத்தலானவிஷயமும்தான் நம்மை பிளவு படுத்திவிட்டது என நினைக் கிறேன்.

அது ஒரு பெண்.முப்பது வயதில் புது நிறத்தில் இருந்தாள்.அவள் கட்டுகிற அடர் நிற சேலை,ரவுக்கையை போல் அவளது மனமும் இருந்ததாக அறிகிறேன்.கணவனை விட்டு பிரிந்து பிறந்த வீட்டில் இருந்தவளை நீங்கள் ஆள ஆரம்பித்துவிட்டீர்கள்.

அவளும் உடன்பட்டாள்.காரணம் கேட்டபோது சொன்னீர்கள்”எனக்கு தினமும் ஒரு பெண் வேண்டும் என.ஆடு வேண்டும்,கோழி வேண்டும் என சாமி வந்தவர்கள் சொல்வது போல நீங்கள் சாதாரணமாகவே சொன்னீர்கள்.சரி போகட்டும் என விட்டு விடவோ,ஒத்துக்கொள்ளவோ முடியவில்லை.

“நான் அந்த பெண்ணிடம் பேசட்டுமா?,உங்களை தின்று தீர்க்க வேண்டாம்”என கேட்டேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள்.அப்புறம்தான் ஒரு விஷயத்தை தெளிவு செய்தீர்கள் என்னிடம். “இங்கு மட்டுமல்ல,நான் வேலை செய்கிற ஊர்களி லெல் லாம் ஒவ்வொரு பெண்ணை வைத்திருந்தேன்,கிட்டத்தட்ட குடும்பமே நடத்தினேன்”என்றீர்கள்.

அதெப்படி இருந்திருக்க முடியும்?எந்த நேரம் எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிபோவீர்கள்,எந்த நேரம்,எந்த ரூபத்தில் ஊர்க்காரர்களால் பிரச்சனை வரும் என்கிற எதிர்பார்ப்புடனும்,கவலையுடனும் இருப்பவள் எப்படி மனம் ஒன்றி உங்களுடன் குடும்பம் நடத்தி இருப்பாள்.உங்களது செயலை ஞாயப்படுத்த உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்ட சமாதானம்.அப்படித்தானே?

நாம் இருவரும் வேலை பார்த்த ஊரிலும் அதே மாதிரியான உங்களின் பழக்கம் தொடர்ந்தது.உங்களின் அவள் வந்து போக வசதியாய் நம் ரூம் பக்கத்திலேயே ஒரு ரூமைப் பிடித்தீர்கள்.ரூம் என்ன ரூம் வீட்டைத்தானே அப்படி சொல்லிக்கொண்டீர்கள்.

அந்த ரூம் கிடைக்கும் முன் பத்துக்கும்,நாலுக்குமாய் உள்ள ஒரு செவ்வக டைப் வீடு.சமையலறையிலிருந்து, குளியல்ரூம்வரை அதற்குள்ளாகவே எல்லாமும் அடங்கிவிட்ட அதன் மாடியில் தட்டு,முட்டு  சாமான்கள் போடுவ தற்காகவே கட்டியது போல் ஒர் அறை.அதில்தான் நான் தினமும் படுத்துக் கிடப்பேன்.தட்டுமுட்டு சாமன்களோடு சாமான்களாய் அதன் தூசியை சுவாசி த்துக் கொண்டு கிடப்பேன்.

டேய் முன்ன மாதிரி இல்லடா,இப்பயெல்லாம் அவ டெய்லி வர்றேங்குறா, கொஞ்சம் அட்ஜஸ்ட்பண்ணிக்கோடா”என்றீர்கள்.இரண்டு பேரும் ஒன்றாய் தங்கியிருந்த ரூமில் உங்களதுதாகத்திற்காய்அவளைபலிகடா ஆக்கிக் கொண் டு “அட்ஜஸ்ட்” என்கிற பெயரில் ஏதாவது செய் என்றீர்கள்.

விளைவு மாடி ரூம் உறக்கம்.ஒன்னுக்குகூட கீழே இறங்கி வர முடியாமல் சங்கடப்பட்டு,,,,சங்கடப்பட்டு,,,,,,,,,,,,மனம்வெம்பிஅவஸ்தையோடு படுத்துக் கிடப்பேன்.

ஒரு நாள் என்னை தேள் கடித்து விட்டது.பொறுத்துப்பார்த்தேன்.வலிதாங்க முடியவில்லை.கீழே இறங்கி வந்து விட்டேன்.முதலில் சப்தம் போட்டு விட்டு அப்புறம்தான் கேட்டீர்கள்.என்ன என.அவளும் வெறித்தாள்.ஒன்றும் சொல்ல வில்லை.டாக்டரிடம் போய்விட்டு வந்து சொன்னேன்.” ரொம்ப வலிக்குதா” அவள் கேட்டாள்.என் பார்வையின் நெருப்பு அவளை சுட்டிருக்க வேண்டும். போய்விட்டாள்.

அதன் பிறகு நண்பா,நீங்கள் என்னை மாடிக்கு போகவிடவில்லை.கீழேயே படுத்துக்கொண்டோம். இருவரின் நீண்ட மெளனத்திற்க்குப்பிறகு விடிய விடிய பேசினோம்.உங்களது செயலுக்கு ஞாயம் கற்பித்து வந்த வாதங்கள் எனது பேச்சை அமுங்கச் செய்து விட்டது.பின் என்ன செய்ய?விடிந்தும் விட்டது.

அவளின் ஆளுமையோ,உங்களின் ஆளுமையோ,அல்லது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுமை செலுத்தினீர்களோ தெரியவில்லை.”அவள்தான் எனது வாழ்க்கை”என்றீர்கள்.

அது எப்படி சரியாகும் என நான் கேட்ட கேள்வி இருவருக்குமிடையே பெரிய வாக்கு வாதமாகி “அது என் சொந்த விஷயம் நீ தலையிடாதே” என சொல்ல வைத்தது.விலகிக்கொண்டேன்மனமில்லாமல்.நம்இருவருக்குமிடையில் மனக்கசப்பு,பேச்சின்மை,பிரிவுதொடர்ந்தது.அவளுக்கும்,உங்களுக்கும்உறவுவலுத்ததுமுன்பைவிட/

உங்களுக்கு சந்தோசம்,எனக்கு வருத்தம்,ஊருக்கு பொறாமை.”அரசு உத்தியோ கிஸ்தன்“பணம்”அவளே சம்மதிச்சிப்போறா”,,,,,,என்கிற பிரச்சனைகள் இவைக ளை காட்டி நீர்த்துப்போகும்.அப்புறம் என்ன?இம்மாதிரியான ஓர் நாளில் எனக்கு ட்ரான்ஸ்பர் வந்தது.அடுத்த சில மாதங்களில் உங்களுக்கும் ட்ரான்பர் வந்ததாய் அறிந்தேன்.

அவளை என்ன செய்தீர்கள் தெரியவில்லை.இப்பொழுது மனைவி,குடும்பம் என செட்டில் ஆகி விட்டீர்கள்.பெண்குழந்தையும் பிறந்தாகி விட்டது.அடுத்த ஓரிரு வருடங்களில் இன்னொரு குழந்தை.அது ஆணோ,பெண்ணோ பெற்றுக் கொண்டு நாமிருவர் நமக்கிருவர் என வாழ்வை கழிப்பீர்கள்.அப்படித்தானே நண்பா?

ஆனால் நண்பா,இப்பொழுது அந்த பெண்ணை நினைவில் வைத்திரு ப்பீர்க ளோ இல்லையோ தெரியாது.அலுவலக வேலை நிமித்தமாய் மதுரை சென்ற போது அவளை பார்க்கிறேன். கையில் அழகான குழந்தை.

நண்பா உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, “நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணுமணிகளா ரெண்டு குழந்தைகள பெத்துக்கிட்டனும்”
நண்பா நீங்களும் அந்த பெண்ணும் பேசிக்கொண்டதை அசந்தர்ப்பவிதமாக கேட்டுள்ளேன்.ஏனோ நண்பா அந்த பெண்ணை பார்த்ததும் மின் வெட்டாய் இந்த வார்த்தைகள் வந்து போனது எனக்குள்.

பார்க்காதது போல் போன என்னை அவள்தான் கூப்பிட்டு நிறுத்தினாள்.கோவி லுக்கு வந்ததாயும்,செளகரியமாய் இருப்பதாயும் சொன்னாள்.

இந்த பையன் அவருக்கு பொறந்ததுதான்”என்றாள்.வேறென்ன முடிக்கிறேன் நண்பா/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்...

Unknown said...

#அபார்ஷன் ரகசியம் புருஷனுக்குத் தெரிந்தால் ...'ப்பூ ..உனக்கு அபார்ஷன்தானே ஆயிருக்கு ?எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்கு 'ன்னு சின்ன வீட்டு ரகசியமும் வெளிவரலாம்!ஏன்னா ,நம்ம பெருமைமிகு புண்ணிய பாரத நாட்டில் இப்படிப்பட்ட கலாச்சாரப் புரட்சி நடந்துகிட்டு இருக்கு !#
இன்று காலையில் என் வலைப்பதிவில் நான் எழுதியது ..உங்களின் பதிவுக்கும் பொருந்துகிறதே ...என்ன பொருத்தம் .நமக்குள் இந்த பொருத்தம்!
http://jokkaali.blogspot.com/2013/09/blog-post_9024.html

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பகவான்ஜீ சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/