23 Sept 2013

தூவானம்,,,,,,,,,,


மழைநின்ற பின்னும் இலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீர் துளிக ளைப்போல கடை விட்டு வந்த பின்பும் அகலாதனைவுகளில் இருந்த அவரிடம்இப்பொழுதுதான் பார்த்தேன்,உங்களை இடது கையில் சிக ரெட்டுடன்போய்க்கொண்டிருந்தீர்கள்அதனால்தான்கூப்பிடவில்லை,  நானும் வரவில்லை முடி வெட்டிக்கொள்ள/என நான் சொன்ன சலூன்கடைக்காரர் தெளிந்து காணப்பட்டார்.
வெள்ளை வேஷ்டி ,வெள்ளை சட்டை,கையில் வாட்ச்,காலில் புது செருப்புஎனஅணிந்திருந்தஅவர் மெலிதாய் சிரித்தார்,முன்புபோல் வாங்க,,, உக்காருங்க,,,நல்லா இருக்கீங்களா,,,,,,? என்கிற நல விசாரி ப்புகளெல்லாம் இல்லை இப்போது அவரிடம். பார்வையில் விட்டே த்திபேச்சுஒட்டுதலற்றதன்மைநடவடிக்கை யில்  இறுக்கம்.
அவரையும்கடையையும்மாறி,மாறிப்பார்க்கிறேன்.முடிவெட்டிக்கொள்ள ஆட்கள்உட்காரும் நாற்காலி மாறியிருந்தது.
நாற்காலியின்முன்பிருந்தகண்ணாடியில் எந்தமாற்றமும் இல்லை. ஆனால் கண்ணாடியைச்சுற்றிஅலங்காரவேலைப்பாடுகள்நிறைந்து தெரிந்தது.
கண்ணாடிக்கு முன் உள்ள மைக்கா ஒட்டப்பட்டிருந்த மேடையில் லோசன்,பவுடர்,சேவிங்க்ரீம்,சீப்புஎனநிறைந்துகாணப்பட்டது.  
நாற்காலிக்கும்,கண்ணாடிக்கும் இடையிலிருந்த இடைவெளியிலும் சுற்றிலும் தரைநிறைந்து முடிசிதறிக்கிடந்தது. 
கடையின் இடது மூலையில் இருந்த அட்டைபெட்டியில் கூட்டி அள்ளிய முடி நிறைந்து காணப்பட்டது. 
நான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து திரும்பிப்பார்க்கிறேன் கடைக்காரரை.இப்பொழுது வலது கையில்வைத்திருந்தசிகரெட்டின் நுனியில் நின்றிருந்த சாம்பலை தட்டி விட்டுக்கொண்டிருந்தார். எதிர் த்தாற்ப்போல் இருந்த டீக்கடையில் டீக்கு ஆர்டர் செய்து விட்டு கடையின் கதவில் ஒற்றை கால் தாங்கி தோள் சாய்த்து நின்றார். 
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரத்திற்கும் அதிகமாய் உட்கார்ந்திருந்த நான் “நேரமாகும்ன்னா,அப்பறம் வேணா வரட்டுமா”என கேட்ட நேரத்தில் எனசட்டென பதில் வருகிறது. “அது உங்களது இஷ்டம்” என/ 
எழுந்து போய் விடலாமா என யோசித்த நேரத்தில் கடை வைத்த புதிதில் அவர் ஆட்களைப் பிடிக்க அவர் அலைந்த அலைச்சல் நினைவுக்கு வர அப்படியே அமர்ந்து விடுகிறேன்.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

ஒட்டு மொத்த மனித இயல்பினை ஒரு சிறு
நிகழ்வின் மூலம் சொல்லிப்போனவிதம் அருமை
குறிப்பாக வெளியேறாத நம் நிலை குறித்தும்...
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

vimalanperali said...

நன்றி ரமணி சார்.வருகைக்கும், கருத்துரைக்குமாக/

Anonymous said...

வழமை மனித நடவடிக்கை விரித்துக் கூறிய விதம் நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.