இல்லாத சிகரெட்டை
சட்டைப்பையிலும்,கால்சராய் பையிலுமாய்
தேடி அலுத்துப்போன அவர்
அருகிலிருந்தவரிடம் பீடி வாங்குகிறார்.
அவர் லுங்கி தூக்கி அண்டர்வேர்பையிலிருந்து
எடுத்துக்கொடுத்த பீடி
கொஞ்சமாய் நனைந்திருக்கிறது.
முயற்சி செய்து,முயற்சி செய்து
பற்றவைக்க முடியாமல்
மென்சோகத்துடன்
பீடியை தூக்கி எறிய ஓங்கியகையை
பீடி கொடுத்தவர் பிடித்துக்கொண்டு
தூக்கி எறியாதீர்கள் தயவு செய்து,
அடுத்த மழைநாளொன்றில்
யாருக்காவது கொடுக்கவோ
எனக்கோ உதவக்கூடும்.
6 comments:
நல்ல தலைப்பு...
கவிதை நல்லாயிருக்கு...
தலைப்பு அருமை....
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சே குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ம்.. வித்தியாசமான கற்பனை!..
அருமை! வாழ்த்துக்கள் சகோ!
வணக்கம் இளமதி அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக
Post a Comment