தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து பெரிதாக என்ன செய்து விட்டோம் அவை களுக்கு?
கூடவேகொஞ்சம்பிரியமும்,பாசமும் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
நான் ஒரு குடம்,எனது மனைவி ஒரு குடம்,மூத்த மகன் ஒரு குடம்,இளைய மகள்
இரண்டு குடங்கள் எனமாற்றி, மாற்றி ஊற்றிய தண்ணீர் மண் பிளந்து,
துளிர்த்துநெடித் தோங்கி, உயர்ந்துகிளைபரப்பி,பூவும்,பிஞ்சும்,இலைகளும்,காய்களுமாய் நிற்கிறது.
அதென்ன அவள் மட்டும் இரண்டு குடம்?ஆமாம் அவளுக்கு மரங்களின் மீது அலாதிபிரியம் உண்டு.மனிதர்களீன்மீதும்தான்/
வேப்பமரங்கள் இரண்டு+ஒன்று=மூன்று,பன்னீர் மரங்கள் இரண்டு,அதோ நீங்கள்
பார்க்கிற அந்த சிறு வெற்றிடத்தில் நின்ற நெல்லிக்காய் மரம்
நிலைக்கவில்லை.பூச்சி விழுந்து இறந்து போனது.அது தவிர நீங்கள் நிற்கிற
இடத்திலும், மூலைக்கொன்றாயும்,வரிசை தப்பியுமாய் ஊன்றி வைத்திருந்த நெட்லிங்கம் மரங்கள் வேர் புழு வந்து இறந்து போனது.
மனிதர்களுக்குமட்டும்தானா,மரங்களுக்கும்,தாவரங்களுக்கும்நோய்வந்து விடுகிறதுதானே?
நட்டு முளை விடுக்கிற நேரத்தில், பயிர்விளைந்து முழுதாகபலன்தருகிற நேரத்தில்,இவை
இரண்டும் இல்லையென்றாலும் கூட இடையில் வந்து விழுந்து விடுகிற நோயில்
கருகிப் போ கிற அல்லது மடிந்து விடுகிற நோய் தாக்கிய பயிர்களையும்,இது
மாதிரியான மரங்களை யும் நட்ட விவசாயிநிலத்தில்விதைத்ததைகையில்அள்ளிபலனாய்
பார்க்கிற வரைமனதில் ஈரத் துணியைசுற்றிக்கொண்டுதான் திரியவேண்டியிருக்கிறது.
எங்களைப்போலவீட்டைசுற்றியிருக்கிறபக்கவாட்டுவெளிகளில்மரம்,செடி நடுகிறவர்களின்
கவலைமனதரிக்கிறஅளவிற்குஇல்லாவிட்டாலும்கூடமனமரிக்கிறவர்களின்கவலையை தன் னில் தாங்கப்பழகிக் கொண்டவர்களாகவும், மரங்களின் மீதுதனி காதல் கொண்டு இப்படி இரண்டு குடங்கள் தண்ணீரை மொண்டு கொண்டு ஊற்றுவாள்.
அதிலும் அந்த பன்னீர் மரங்கள் மீது அவளுக்கு தனிபிரியம் உண்டு.அதுதானே
பூக்களை ச் செரிகிறது.இலைகள் உதிர காய்கள் விழ,பிஞ்சுகள் கிடக்க
மரங்களிலிருந்து செரிந் த பூக்களை பூ ஒன்று நடமாடி பெறக்கி எடுத்த காட்சியை
காண கண் கோடி வேண்டும் போலிருக்கிறது.
பன்னீர மரப்பூக்களை பொறுக்கி நீட்டிய உள்ளங்கையில் வரிசையாக வைத்து
பார்ப்பாள். வலது கையால் எடுத்து இடது கையில் அடுக்கி வைத்து இரண்டு
கைகளாலும் தொடுத்து தலையில் சொருகிக்கொண்டு வளைந்த நாணலாய் நடந்து வருவாள்.
அவளது ஆசைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.ஆனாலும் அணையிட்டு விடவும்
முடிய வில்லை.செய்யட்டுமே இதுமாதிரியானவைகளை அவள் மனலயங்களிலிருந்து
மீட்டெடுத்த வாறு/
“ஏன் இப்படியெல்லாம் செய்யிற அசிங்கமா” எனச்சொல்லும் அவளது அண்ணனின்
காதில் இரண்டு பூக்களை சொருகிவிட்டு நாக்கை சுழற்றிக்கொண்டு முன்
வரிசைபற்கள் தெரிய வாய் கொள்ளாமல் சிரிப்பாள்.
“போ அங்கிட்டு” என அந்த சப்ததை பார்த்து அதட்டும் அவளது அப்பாவிடம் “ஊம்
அவன் மட்டும் நேத்து ஏன் ஜாமெண்ட்ரிபாக்ஸ தூக்கீவச்சிக்கிட்டான்”.என
முகப்பலிப்புக்காட்டி அப்பாவின் கழுத்தை கட்டிக்கொள்ளுகிற அவளைப்போல் உள்ள
பிள்ளைகளின், பையன்க ளின் பேனா, ஜாமெண்ட்ரி பாக்ஸ் வரை மறைந்து போகிறதாய்
சொல்லப்படுகிற புகார்கள் வீடுகளெங்கும் நிறைந்து போய்த்தான் உள்ளது.
“ஏன்அப்படி”? அவைகளைமட்டுப்படுத்த வேண்டியதுதானே?என்கிற கேள்விகளுக்கு
“விடுங் கள் அதெல்லாம் வேண்டாம்,நடந்து விட்டுப்போகட்டும இது
மாதிரியானநி கழ்வுகள்எ ன்பதே பதிலாய்இருக்கிறது.
அடித்துக்கொள்கிறசகோதர,சகோதரிகளும்காணாமல் போகிறஅவர்களது பேனா, பென்சில் களும்,ஜாமென்ட்ரிபாக்ஸீகளும்தொடுத்துச்சொல்லப்படுகிறஅவர்களதுபுகார்களும் இருக்கிற வரை வீடுகள் நிறைந்தே காட்சியளிக்கிறது.
அந்தகாட்சிகளின்வெளிப்படுதலில்அன்பும்,கோபமும்,கண்டிப்பும்மனலயங்கலிருந்துமீட்டெடு க்கப் படுகிறநெகிழ்தலும்நடந்துபோய்விடுகிறதுதான்.
அப்படியானநடப்புகளும்,பிள்ளைகளின் அசைவுகளும், பூப்பெறக்கல்களும்,பூத் தொடுத்தல் களும் நன்றாகவேயிருக்கிறது பார்ப்பதற்கு. மனம்லயிக்கவும்,ரசிக்கவும்முடிகிறது.
வாய்கொள்ளாஅவளதுசிரிப்பிலும்,கைவிரித்து மலர்ந்த அவளது மென்ஸ்பரிசத்திலும் மனம் அவிழச்செய்து விடுகிறாள்.
தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து என்ன செய்தோம் அவைகளுக்கு?கூடவே கொஞ்சம்,பிரியமும் பாசமும்/
23 comments:
வாழ்க்கை நிகழ்வுகளைக் கூட அழகான பதிவாக தர முடியும் என்பது தங்களால் உணர்ந்து கொண்டேன். அருமையான பாசத்தை படிப்பவர்களும் உணர முடிகிறது. மரம் வளர்க்க சிறு குழந்தையிலேயே பழக்கி விடுவது சிறப்பு அய்யா. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோததரே...
ஆகா... மிகவும் ரசித்துப் படித்தேன்... ரசனையான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். - கவிஞர் இராய செல்லப்பா(இமயத்தலைவன்), சென்னை
மரத்துக்காக ஆகட்டும்...மனிதனுக்காகட்டும் நாம் செய்வது இதைத்தான்...
அன்பும் கொஞசம் பாரசமும்....
நல்லதொரு பதிவு...
பன்னீர்ப் பூக்களென மனதில் சில்லிட்டன உங்கள் கற்பனை!
அற்புதம்!...
கூறிச்செல்லும் யதார்த்தம் கண்ணிலே படமாக விரிகிறது.
இன்றும்! இங்கும்!
ஒவ்வொரு வரிகளிகளிலும் காட்சிகளைக் கூடவே இணைக்கின்ற
எழுத்துதிறமை உங்களிடம் மட்டுமே காண்கிறேன்...
அசாத்தியமான கற்பனையும் எழுத்துக்களும் சகோ!
மனம் கவர்ந்த படைப்பு! தொடருங்கள்...
உளமார வாழ்த்துகிறேன் சகோ!
த ம.4
வணக்கம் பாண்டியன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றிதங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் செல்லப்ப யோகசாமி சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்க்கம் கவைதை வீதி சௌந்தர் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் இளமதி மேடம் நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
விமலன்(அண்ணா)
மனதை கவர்ந்த பதிவு... அருமையான கதைக்களம்.. தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்துப் படித்தேன்...
நிகழ்வுகளைப் பகிர்வது
அனைவருக்கும் முடியக் கூடியதுதான்
இதுபோல் மெல்லிய மன உணர்வுகளை
பகிர்வது அதுவும் படிப்பவர்கள் அனைவரும்
அந்த உணர்வினை உணரும்படி பதிவு செய்வதற்கு
தனித் திறன் வேண்டும்
மனம் கவர்ந்த பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 5
வணக்கம் பாண்டியன் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணகம் செல்லப்ப்பா யோகசாம்ய் சார்.நன்றி வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் கவிதை வீதி சௌந்தர் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் இளமதி மேடம் நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் ரூபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சேக்குமார் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ரமணி சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/
Post a Comment