8 Oct 2013

பரப்பு,,,,

                 சாலையின் நடுவில் கிடந்த
சிவப்புத்துணி மீது
கார் ஒன்று ஏறிச்சென்றது.
ஒன்றிரண்டு லாரிகளும்,
பேருந்துகளும் கூட அப்படியே/
இருசக்கர வாகனங்களும்,
மிதி வண்டிகளும்
அதற்கு விதிவிலக்கில்லாமலும்,
அதை பின் பற்றியுமாய்/
காலில் சிக்கினால் தடுக்கிவிடக்கூடும்
என்றஞ்சி ஒதுங்கி நடந்த பாதசாரிகள்/
இவை எல்லாவற்றையும்
பார்த்தவாறு துள்ளித்திரிந்தவாறுமாய்
சாலையோரம் விளையாடியவாறுமாய்
இருந்த சிறுபிள்ளைகள்துணியை
எடுக்க கைநீட்டி விரைந்த போது
காற்றில்மேலெழுந்துவிரிந்துநின்றதுணி
அங்குள்ளஅனைவருக்கும் நிழலளித்ததாய்/

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் என்னாச்சி...? Template மாற்றுனீர்களா...?

திண்டுக்கல் தனபாலன் said...

துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

ஒரு வேளை டெம்ப்ளேட் மாற்றியதால் உண்டான பிரச்சனையோ?