16 Nov 2013

ரயிலுவண்டி,,,,,,,,

சுற்றுலா செல்வதென்பது எல்லோருக்கும் பிடித்தமானதாகவே. / அதுவும் மிகவும் பிடித்த இடங்களுக்கு பிடித்த மனிதர்களுடன் செல்வதென்பது மனஇசைவுடன் நடைபெறும் குதூ கல விசயமாகவே.
 
 பெற்றோர்களுடனும் சுற்றத்தார்களுடனும் சூழ கோவில், குளம் என போய்வந்தகாலங்கள் போய்அவரவர்களின் பணிநிமித்தமாயும் பிழைப்பு கருதியும் வெளியூர்களில்தனித்தனி குடும் பங்களாய் தங்கிவிட நேர்ந்த பிறகு எங்கும் எதற்கும் தனியாகவேசென்று வரும் நிலையும் அவசியமும் உருவாகிப்போகிறது. அந்த உருவாக்கம் தமிழ்நாட்டில் இருக்கிற ஆயிரக்கண க்கான கூலி வேலைக்காரர்களின் அன்றாடப் பாடுகளில் இல்லாமல் இல்லை. அவர்களுக்கெ ல்லாம்  " ப்ளாக்இயர்கிடையாது. "லீவ் சரண்டர், ட்ரிப் ஷீட், பெட்ரோல்பில் , ரூட் மேப்"
இத்தியாதி, இத்தியாதி
என்கிற எந்த வரையரையும் நியதியும் கிடையாது.

 அதையெல்லாம் தாண்டியவர்களாகவும், அதற்கு அப்பாற்ப்ட்டவர்களாகவுமேஇருந்துள்ளார் கள் எப்பொழுதும். அதையும் மீறி அவர்கள் மேற்ச் சொன்னவற்றிக்கெல்லாம்பிரியப்பட்டா லோ ஆசைப்பட்டாலோ நஷ்டமேஏற்படும்.அதனால்அந்தபிளானிங்க்கி ற்குள்ளாகவெல்லாம் வரமாட்டார்கள் அவர்கள். ஆனால் அவர்களதுபிளானிங்குகளின் முன் எப்போதுமே தோற்றுப் போகிறவகளாகநாம்.

 ஒரு வீட்டில் கணவன், மனைவி, பிள்ளைகள் இரண்டு பேர் அல்லது ஒருவர் எனவைத்துக்  கொண்டாலும் அவர்கள் மூவருமாக அல்லது நால்வருமாக வேலைக்குச்சென்று சம்பாதித்து வருவதில் ஒரு பகுதியை சேமிப்ப்புக்கென ஒதுக்கி விடுகிறார்கள்.தீப்பெட்டி ஆபீஸ், பயர் பீஸ்,கட்டிட வேலை என பலதரப்பட்டவேலைக்குசென்று வாரச் சம்பளம்வாங்கும் அவர்கள் சேமிப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, சென்செக்ஸ் புள்ளிகளை அறிவிக்கும் தனியார் நிறுவனங்களிலோ இல்லை.பெரிய கம்புகொண்டுஓடிவந்துமூச்சடக்கி"ஹைஜம்ப்தாவி வங்கிக்குள்நுழைந்து , அங்கிருக்கிற தடைகளையும் பார்மாலிட்டிகளையும் உடுருவிச் சென்றுகணக்கு ஆரமிப்பதற்குள்அலுத்துப் போகிறார்கள்பாவம். அதுவும் பேங்க் ஸ்டாப் என்றாலேகெத்தாக இருக்க வேண்டும் என்கிற மனோநிலையுடன் வேலை பார்ப்பவர்கள் முன் போய்நிற்பதற்கு அய்யரவுப் பட்டுக் கொண்டே ஒதுங்கி விடுகிறார்கள். பின் எப்படி அவர்களது
சேமிப்பும், சுற்றுலாவும்?
 
 கணவன், மனைவி, பிள்ளைகள் எனத் தனியே வேலை கிடைத்து சம்பாதிக்கும் சராசரியான சம்பளமான 3500ரூபாயில் (25நாட்கள் வீதம் ரூ.100)வாரம்ஒருமுறை குடும்பச்  செல விற்கெனஒருசீட்டும், பலகாரச்சீட்டு, ஜவுளிச்சீட்டு, பாத்திரச்சீட்டு என்கிற வரிசையில் சுற்று லாச்சீட்டும் கட்த் தவறுவதில்லை. அதுவும்தனித்தனி நபர்களின்பெயரில். அம்மாதிரியான தனித்தனி சீட்டுகளில் இடம் பெறுகிற ஜவுளியும், பலகாரமும்அவர்களது பண்டிகை நாட்க ளை ஈடு செய்து விடுகிறது.   மற்றவைகள் அவர்களது குடும்பத்தேவைகளையும் இப்படியான சுற்றுலா ஆசையையும்போக்கவல்ல நிவாரணியாக அமைந்து போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லைதான். 
  
 என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர் கூடச் சொல்வார் அவர்களைக் கண்டவுடன் . "இது லேபர் ஏரியா,".......... ன்கிற முகச் சுளிப்புடன். லேபர் எனச் சொல்லும் போதேவருகிற முகச் சுளிப்பு அவருடைய " உயர்ந்த மனோநிலையை"...,,,?/ காட்டும்.லேபர் என்றவுடன் தெரிகிற சக மனித உருவமும், நேயமும் மறைந்து முகச் சுளிப்புமட்டுமே ஏற்படுகிறதாயின் அவரு டைய உயரிய எண்ணங்கள் லேபரைப் பற்றி என்னவாகஇருக்கும் ? அந்த உயரிய எண்ணமே முடை நாற்றமெடுத்துப் போய் அவர்களின்பெண்டு, பிள்ளைகள், குடும்பம் பற்றியதான தவ றான கண்ணோட்டத்தில் பார்க்கவைப்பதில்கொண்டு போய் விட்டு விடுகிறது.

அப்படியெல்லாம் ஏளனமாக நினைப்பவர்களையும், முகம்  சுளிப்பவர்களையும் செ.......................தான்.   எனவும் தோன்றுகிற அதே நேரத்தில் அந்த லேபர் ஏரியாவிலும், அதை ஒட்டிய நிலையில் இருக்கும் மிகப் பெரிய மக்கள் திரளினது கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என சகலத்தையும் யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதைப்பற்றி சரியா ன நிலைபாடு எடுக்கும் போது "லேபர் ஏரியா " முன்னேறிய ஏரியாவாக இருக்கும்என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அங்கிருந்த இளைய தலைமுறையினரும் முன்னேறி வருவார்கள் என்பது திண்ணம். இப்போதைக்கு தடைபட்டு நிற்கிற அவர்களின் முன்னேற்றத்தைப்  பற்றி சிந்திக்கவும்முடிவெடுக்கவுமான நிலையில் உள்ளவர்கள் அவர்களின் வோட்டுக்களைப் பற்றிமட்டுமேயோசிக்கிற அவலநிலையில் .

 எந்தவிதமானமிடில்க் கிளாஸ்த் தனத்துடனும் மிகை கொண்டுவாழாமல் வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி,அரை வயிறு, கால் வயிறாயும், நல்லதாக உடுத்தியும்உடுத்தாமலும் தன் வாழ்க்கை, தன் சம்பளம் தன் சேமிப்பு என வாழ்கிற அவர்களுக்குசுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்தமான விஷயமாகவும், மிகப் பெரியரிலாக்ஸாகவும்  இருக்கிறது. 

அப்படியான ரிலாக்ஸ் "லேபர்" என்றதும் முகம் சுளிப்பவரிடம்உள்ளதா?இல்லையா ?என்ப தே இந்த நேரத்து கேள்வியாகவும்,தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகவும் உள்ளது.

15 comments:

Yaathoramani.blogspot.com said...

இந்த மனோபாவம் உயர்தட்டு மக்களைப்போல்
(பொருளாதாரத்தில் )தற்போதுதான்
கீழ் நிலையில் இருந்து
நடு நிலக்கு மாறியவர்களிடமும் இருப்பதுதான்
வெட்கக் கேடான விஷயம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

vimalanperali said...

வாக்களிப்பிற்கு நன்றி ரமணி சார்.

கவியாழி said...

சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்தமான விஷயமாகவும், மிகப் பெரியரிலாக்ஸாகவும் இருக்கிறது.
உண்மைதான்.///சந்தோசமாகவும் இருக்கும்

கரந்தை ஜெயக்குமார் said...

சுற்றுலா என்பது, அலைபேசிக்கு ஜார்ஜ் ஏற்றுவது போல, நமக்கும் ஜார்ஜ் ஏற்றிக் கொள்ளும் ஒரு செயலே. வழக்கமான தொடர் பணியில் இருந்து விடுபட்டு, இரண்டு நாட்களேனும், வேறொரு புதிய இடத்திற்கு பணிக் கவலைகள் ஏதுமின்றி செலவிட முடியுமானால் அதுதான் சொர்க்கம்.
அதே வேளையில் தாங்கள் சொல்லும் உழைப்பை நம்பியே, ஒவ்வொரு நாளையும் கழிக்கும் மக்களுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்குமா என்றால் சந்தேகமே. இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம். என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அவ்வப்போது சுற்றுலா மகிழ்ச்சியே...

இளமதி said...

உண்மைதான்.. மிடில் கிளாஸ் என்றால்
அவர்களுக்கு உணர்வு, ஆசை இல்லையா..

மனந்தொட்ட பதிவு! வாழ்த்துக்கள் சகோ!

த ம.5

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதி மேடம்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி இளமதி மேடம் வாக்களிப்பிற்கு/

இளமதி said...

விமலன்... ஒரு வேண்டுகோள்!....
என்னை இளமதின்னு மட்டும் கூப்பிட்டா போதுமே...
இந்த மேடம்லாம் வேணாம் சகோ!

நானும் ரொம்ப சாதாரணமானவதான்...:)

மிக்க நன்றி!

'பரிவை' சே.குமார் said...

எப்போதும் சுற்றுலா என்பதே சந்தோஷமான விஷயம்தான்...
அது ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும்...

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

சரி அப்படியே அழைக்க முயற்ச்சிக்கிறேன்,
என்னை மீறி மேடம் என்கிற வார்த்தை
வந்து விழுந்துவிட்டால் கோபம் கொள்ளவேண்டாம்.