இம்மாதந்தோறுமாய் வெள்ளிக்கிழமைகளில்
திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது
எனச்சொன்ன பஸ் கண்டக்டரை ஏறிட்ட போது சொன்னார்.
பார்க்கிற வரன்கள் ஏதும் சரியாய் அமையமாட்டேன்கிறது.
வயது ஏறிக்கொண்டே போகிறது பிள்ளைக்கு.
கவலை கூடிக்கொண் டே போகிறது எங்களுக்கு.
முதல் பெண்ணுக்கு திருமணம் முடிந்தால் அல்லவா
இரண்டாம் பெண்ணுக்கு வழிகிடைக்கும்
என்கிற ஆதங்கத்துடனும் கவலையுடனுமாய்
திருமண மண்டபங்களில் மின்னுகிற விளக்குகளை பார்த்தவாறும்,
டிக்கட் கிழித்தவாறுமாய் பேருந்து ஏறி
பயணித்துக்கொண்டிருக்கிறேன் அன்றாடம்/
8 comments:
நல்ல வழி விரைவில் கிடைக்கட்டும்...
பெற்றவர்களின் ஏக்கங்கள் ஏராளம். அதிலும் பெண்களைப் பெற்றெடுத்து அவர்களை நல்ல வரன் அமைத்து கொடுக்கும் வரை அவர்கள் அனுபவிக்கும் ஏக்கங்கள் அவர்களுக்கு தான் தெரியும். அற்புதமான நடை. பகிர்வுக்கு நன்றி சகோதரர்..
வணக்கம்
அண்ணா
பெண்களைப் பெற்றறவர்களின் கவலை ஏராளம்...நாம் என்ன செய்வது படைத்தவன் ஒருவன் இருக்கிறான் எல்லாம் அவன் செயல்... விரைவில் நல்லது நடக்கட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாட்டுகின்ற கவலையும்
கூட்டுகின்ற ஏக்கமுமாய்
நாட்டினில் பல கன்னியரும் அவர் பெற்றோரும்...
வலிகளை வரிகளில் காட்டியவிதம் சிறப்பு
வாழ்த்துக்கள் விமலன்!
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ரூபன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி அ பாண்டியன் சார்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
வணக்கம் இளமதி மேடம்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment