7 Dec 2013

லால்சலாமிலிருந்து,,,,,,,,,




கக்கஷ்கினோகிராமத்தில்பனிக்காலம் கடும் குளிரும் புயலுமாக இருந்தது. தாங் கள் இருந்த சிறு வீடு அற்றலைந்தது.

அதற்குள் எல்லாப்பக்கமும் இருந்து காற்று வீசியது.புகை போக்கி குழாய் வழி யே சூறாவளி சீழ்கை அடித்தது.வெண்பனிக்குவியல் ஜன்னல் வரை மேடிட்டி ருந்தது.

பனிக்காலகக்கஷ்கினோ கிராமம் ஏக்கமும் தனிமையும் நிறைந்ததாய் கழிந் தது. அப்படியானால்அந்தப்பனிக்காலம்முழுவதையுமானதனிமையைஎதைக் கொண் டு விரட்டியடித்தீர்கள். எதைக்கொண்டுதூற்றினீர்கள்? எப்படிஅதன் முகத்தில் காறி உமிழ்ந்துவிரட்டியடித்தீர்கள்?

வேறெப்படிபடிப்பதன் மூலமாகத்தான்.பனிக்காலம் முழுவதும் உங்களை ப்பிடித்திருந்ததனிமையைபடித்தீர்கள்.படித்தீர்கள்,படித்தீர்கள்.அதுவே
உங்களது சிந்தனையும், செயலையும் கூர்மையாக்குகிறது.புத்தகங்களின் பக்கங்களைபுரட்டப் புரட்ட தாங்களும் புத்தகங்களல் புரட்டப்படுகிறீர் கள்.ஆகர்சிக்கப்படுகிறீர்கள்.சிந்தனைத்தெளிவுபெறுகிறீர்கள்.உங்களுக்கு ப் பிடித்த ருஷ்ய எழுத்தாளர் செர்னிஷேங்கிஸ்கி அவருடைய புரட்சிகர மான எழுத்தே உங்களது எண்ணங்களுக்கு உரமிடுகிறது.

ருஷ்ய சமூகத்தில் ஜார் மன்னரது ஆட்சியைச் சொல்லும் அவர் அதிகார வர்க்க மும்,தொழிலதிபர்களும்,நிலபிரபுக்களும்தான்ருஷ்யாவைஆள்கிறார்கள். குடியா னவர்கள் பாடு மிகவும் சகிக்கமுடியாததாக இருக்கிறது. எனக்கூறும் அவர் ருஷ்ய வாழ்க்கையின் ஒழுங்கீனம் முழுவதையும் கூறி போராட அழைக் கிறார். புரட்சிக்கு அறை கூவல் விடுக்கிறார்.அப்படியானஅழைப்பும்,வேண்டுகோளும் அடங்கிய புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொருமுறைபடிக்கும் போதும் ஒவ்வொரு புது விஷயத்தைதங்களுக்குள் விதை த்து நிறையகருத்து களையும், கனவுகளை யும்,திட்டங்களையும்,வாழ்க்கைக் குறிக்கோள்களையும் உருவாக்கு கிறது.

ஆமாம்உங்களதுவாழ்க்கை குறிக்கோள்களாகஎதைதெரிவுசெய்தீர்கள். புரட்சிப் போராட்டத்தை ஜார்மன்னனுக்கும்,பணக்கார வர்க்கத்திற்கும் எதிராக போராடு வதற்கேதங்களதுவாழ்நாள்முழுவதையும்,ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணிக் க விரும்புகிறீர்கள்.மக்களின் இன்பத்திற்காகவும், விடுதலையின் பொருட்டும்/

அன்றிலிருந்துபுரட்சிப்போராட்டமேதங்களின்முக்கியகுறிக்கோளாகிறது. ஆனால் வாழ்க்கை நடத்த உழைத்துப்பொருள் ஈட்ட வேண்டும்.அதற்கு பல்க லைக் கழகப்படிப்பை முடித்துஏதேனும்துறையில்தனிதேர்ச்சி அடைய வேண் டும் என நினைக்கிறீர்கள். 

வசந்த காலம் வந்ததும் மீண்டும் கஸான் பல்கலைக்கழகத்தில் மனுப் போ டுகிறீர்கள். ஆனால் மனு நிராகரிக்கப்படுகிறது.அதானால் என்ன ?தங்க ளது உறுதி தளரா மனதின் முன் இதெல்லாம்,,,,,,,,,,,நான்கு வருட பட்டப் படிப்பை ஒன்றரை ஆண்டுகளில் கற்று தேர்ந்து பரிட்சை எழுத பீட்டர் ஸ்பர்க்கு போனீ ர்கள்.நரைத்த தலையும் பெருமித தோற்றமும் கொண்ட பேராசிரியர்கள் கேட்ட கடினமான கேள்விகளுக்கு சற்றே அகன்ற தாடை யும்,ஒளிவீசும் கண்களும் கொண்ட நீங்கள் சரளமாக விடையளிக்கிறீர்கள்.நீங்கள் பல்க லை க் கழக சேர்க்கைக்கு பரிட்சை எழுத தயாராகி விட்டீர்கள்.

பரிட்சை எழுதி முடித்து விட்ட சந்தோஷத்தில் விரவில் பீட்டர்ஸ்பர்க்கில் நிலையாக குடியேறி தமது புரட்சிகர நடவடிக்களை தொடங்கவேண்டும் என்கிற திட்டமிடலுமாய் இருந்த அந்த 1891 மே தங்களது தங்கை ஓல்கா உடல்நலமின்றி இறந்து போகிறார்கள்.

                    (மாமேதை லெனின் அவர்களின் வாழ்க்கை பற்றிய ”லால்சலாம்” பிரசுரத்திலிருந்து,,,,,,,,)

11 comments:

'பரிவை' சே.குமார் said...

ஒரு மாவீரனின் வரலாற்றில் கொஞ்சம் படிக்கத் தந்தமைக்கு நன்றி விமலன் அண்ணா....

இளமதி said...

லெனினின் வரலாறில் உங்கள் மூலம் சிறிது அறியக் கிடைத்தது சகோ!
பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

அருமையான வரலாற்றுப்பதிவு.. அருமை வாழ்த்துக்கள்

எனது புதிய வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

லெனின் மாவீரன். அற்புத மனிதர்.
பகிர்விற்கு நன்றி நண்பரே

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
http://tamilkkavitaikalcom.blogspot.com வளர வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு கரந்தை ஜெயக்குமார் சார்/

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புத மனிதரின் சிறப்புகளுக்கு நன்றி...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/