Dec 8, 2013

வேகமெடுத்து,,,,,



அவள் பயணித்துக்கொண்டே இருக்கிறாள்.
தனது நெடிய கால்களில் உரமேற்றியபபடியும்
எங்காவது ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டுமாய்/
அவளது பயணங்களில் எதிர்படுகிற மனிதர்கள்
உறவினர்களாகவும்,அக்கம் பக்கத்து வீட்டுகார்களாகவும்,
பிள்ளைகளாவும் மட்டுமே இருக்கின்றனர்.
அவளது பயணம் மிகவும் குறுகியதாகவே/
காலையில் எழுந்ததும் தெரு முனை
காய்கறிக்கடைக்குப்போகிறாள்,
பின் பால் வாங்க,பின் மகன் வீட்டிற்கு,
பின் பேரக்குழந்தையை தூக்கிக்கொண்டு
திரும்பவுமாய் கடைக்கும்,உடல் நலமில்லாத கணவனுக்கு
மருந்து வாங்கவுமாய் சென்று வருகிறாள்.
எப்போதாவது தோன்றினால் மினி பஸ் ஏறி
 நகரத்திற்குள்ளாய் போய் வருவாள்.
கோயிலுக்கும்,பஜாருக்குமாய்/
குறிப்பிட்ட எல்லைகலைகளுக்குள் அடங்கி விடுகிற
வரை படம் போலான அவளது பயணம்
தினந்தோறுமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது
ஒரு குறிப்பிட தூரத்திற்குள்ளாகவும்.
சிறிய அளவிலான எல்லைக்குள்ளாகவும்
அவளது முதிய வயதில்/

12 comments:

  1. எத்தனை வயதிலும்
    வீடே உலகமென்றும்
    ,உலகம் சிறிய வீடெனவும்
    வாழும் மனுஷிகள் !!!!!!!!!!1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களே.
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  2. சிரமம் தான்... அவர்களுக்கில்லை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  3. பெரும்பாலான பெண்களின் நிலை இப்படித்தான் .இதற்கு மேல் எதிர்பார்ப்பும் இன்றி பழகி விட்டனர்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கீதா மேடம்.
      நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  4. வீடே உலகென்று
    வாழும்
    பெண்கள்
    இன்றும் இருக்கத்தான்
    செய்கிறார்கள்.
    இவர்கள்
    வணங்கத் தக்கவர்கள்,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  5. Replies
    1. நன்றி வாக்களிப்பிற்கு கரந்தை ஜெயக்குமார் சார்/

      Delete
  6. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள் விமலன் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சே குமார் சார்,
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete