18 Dec 2013

ஹைக்கூப்பூக்களாய்,,,,,,

 
அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது

அதிகாலை எழுந்து விட்ட மனைவி.
            
             #####

காத்திருக்கும் காதலன்.

அவனை கடக்கும் பட்டாம் பூச்சி

           #####

உடல் நனைத்த வேர்வை.

வண்டி நிறைந்த பூமூட்டைகள்.

          #####
ரத்தம் உறிஞ்சிகிற மூட்டை பூச்சி.

தொழிற்சாலையில் தொழிலாளி.

         #####
பாட்டி காது குடைகிறாள்

இறகுதிர்கும் கோழி.

         #####
வரிசைதப்பி மேயும் பன்றிகள்.

பசியுடன் பேப்பர் பொறுக்கும் சிறுவன்.

        #####

வெள்ளிக்கிழமைபிச்சைக்காரர்கள்.

சாலையோரத்தில் டீக்கடை.

         #####
ஆதரவற்ற தாய்

.பிச்சைக்காரர்கள் வரிசையில்.

கோவிலுக்குள் காவல் தெய்வம்.

        #####
கூடி விளையாடும் குழந்தை

வாசலில் எட்டுப்புள்ளிக்கோலம்,
              #####
மரத்தடியில் இலைகள்.

வேர்கள் விசாரிக்கின்றன.

       #####
சிரித்து விளையாடும் சிறுவர்கள்
பக்கத்தில் கட்டப்பட்டிருக்கிற ஆட்டுக்குட்டிகள்.

         #####
சாலையோரத்தில் செருப்புக்கடை.

சுட்டெரிக்கும் வெயில்.

வெற்றுக்கால்களுடன் பாதசாரி.

     #####

புரியவில்லை பாஷை.

புடிபடுகிறாது மொழி.

வேற்று மாநிலத்தவர்களுடன்

பேசிக்கொண்டிருக்கிறேன்.

     #####
சிதறிக்கிடந்த பேப்பர்கள்.

முளைத்துதெரிந்த கவிதைகள். 

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

வாழ்த்துக்கள்...

இளமதி said...

துகிலினைத் தூக்கிச் சுருக்கிய ஹைக்கூ!
முகிழ்த்த நறுமண மொட்டு!

அத்தனையும் அருமை!...

வாழ்த்துக்கள் சகோ!

த ம.2

மகிழ்நிறை said...

குட்டி குட்டியை கவிதைகள்
சில புகைப்படங்கள் கவிதை போல் இருக்கும்
இங்கு கவிதைகள் புகைப்படங்களாய் !!
click !click
திரையரங்கில் ஸ்லைடு பார்த்தது போல் இருந்தது !!!!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல்தனபாலன்சார்.
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சகோதரி இளமதி அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம்மைதிலிகஸ்தூரி ரங்கன்அவர்களே/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விமலன்(அண்ணா)
வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உஷா அன்பரசு said...

அழகாய் தொடுத்த ஹைக்கூப்பூக்கள் .. மனதை கவரவே செய்கிறது!

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/