2 Jan 2014

பந்தி,,,,,,,,



ஏன் அப்படியெல்லாம்வைத்திருக்கிறார்கள்
எனத் தான்கேட்கத் தோனுகிறது.
கைபிடியைத் திருகித் திறந்தவுடன்
மொத்தமாக விழாமல்நூல்,நூலாகப்பிரிந்து
நேர் கோடுகளாய் சீறிட்டு விழுந்தது.
வரிசையாக நின்றபண்ணிரெண்டு
 குழாய்களும்கலருக்கு ஒன்றாக.
நீள் பிறை வட்டமாய்அதன் கீழ்
வைக்கப்பட்டிருந்தசில்வர்த் தொட்டி.
கை கழுவிவிடும் தண்ணீரைத்
தாங்கி கடத்தியவாறே.
ஒரே சமயத்தில்இருநூறூக்கும்
மேற்பட்டவர்கள்அமர்ந்து சாப்பிடக்கூடிய
சாப்பாட்டு அறையில்நீள,நீளமாய் வகுந்து
போடப்பட்டிருந்தசாப்பாட்டு மேஜைகளும்,
அதன் முன்னாகஒரே கலரிலான
இரும்புச் சேர்களும்/
மேஜைமேல் விரிக்கப்பட்டிருந்த
டிசைன் பொரித்த டிஸ்யூபேப்பரில்
வாழை இலை விரித்துசாப்பிட்ட நூற்றுக்கும்
அதிகமானோரை கவர்ந்த பதார்த்தங்களும்,
பரிமாறியவர்களின் சீருடையும்,
அதில் பொரித்திருந்த அவர்களது சமையல்
குழுவின் பெயரும்.
கூட்டு,பொரியல்,சாம்பார்,ரசம்,
மோர்,பாயாசம், என வரிசைக் கிரமமாய்
சாப்பிட்டு முடித்துகை கழுவும் போதுதான்
தோனியது.
வீட்டில் மனைவியும் பிள்ளைகளுமாய்
புடை சூழ சாப்பிட்டு விட்டு பாத்ரூமிலுள்ள
ப்ளாஸ்டிக் வாளியில்தண்ணீர் மோந்து
கைகழுவியது போல் இல்லை.

10 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுபோன்ற பந்திகளில் வயிறு நிறையும்
ஆயினும் நிறைவு என்பது
ஒரு கறி குழம்புடன் வீட்டில்
"லாத்தலாக "அமர்ந்து உண்ணும்போதுதான்

சொன்னதும் சொல்லிப்போன விதமும்
மிக மிக அருமை

பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

வீடு வீடுதான்
அதற்கு இணை ஏது
அருமையாய் வார்த்தைகளில் செதுக்கியுள்ளீர்கள் நண்பரே
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தைஜெயக்குமார்சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...

கவிதை அருமை
எவ்வளவு தான் வெளியே சாப்பிட்டாலும்
வீட்டின் ருசி தனி ருசிதான்

vimalanperali said...

வணக்கம் வேல்முருகன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

MTM FAHATH said...

அருமை... உண்மை...

வாழ்த்துக்கள்...