13 Jan 2014

பொங்கச் சோறு,,,,,,,


தூக்கம் வந்து விடுகிறது அப்படிப்படுத்த போது கூட/கட்டம் போட்ட கைலியும், சரிந்து பருத்திருந்த தொந்தியின் மேல் போர்த்தியிருந்த ஊதாக் கலர் முண்டா பனியனுமாய் ஆரஞ்சு வர்ண வயரில் பின்னப் பட்ட கட்டிலில் வலதுபக்கமாய் ஒருக்களித்துப்படுத்திருந்த அவர் அந்தக்கடையின் சொந்தக்காரர் ஆகித் தெரி- -கிறார்.

முன்னால் தெரிந்த சாக்கடை அதன்இருப்பில் வீசிய துர்நாற்றம்,அதில் பறந்து திரிந்தகொசுக்கள், ஓடித்திரிந்த வண்டுகள்,தேங்கிநின்றநீர்,பக்கத்தில் இடமும், வலமுமாய் அடுக்கப்பட்டிருந்த கடைகளென இருந்ததையும் கணக்கில் கொள் -ளாத அவரது தூக்கம் வரம் வாய்க்கப்பெற்றதாய்/

நான்வந்து கொண்டிருந்தவேலை இரவு எட்டுமணியாய் இருக்கலாம். அல்லது அதைத்தாண்டிய அல்லது முந்தியஐந்து,பத்து நிமிடங்களுக்குள்ளாய் இருக்க லாம்.என்னஅதனால்இப்பொழுதுஎட்டுமணியாய்என்றுதானே சொன்னேன், எட்டு மணி என தீர்மானித்துச் சொல்லவில்லையே/

25வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நான் வேலைபார்க்கும்நிறுவனம் எனக்குத் தந்த பரிசுப்பொருள்.சின்னதும், பெரியதுமான முட்களுடன் வட்ட வடிவ  டயலுக்குள்ளாய் நொடிமுள்ளையும் கைபிடித்து ஒருங்கிணைத்துக் கொண்டு இன்றுவரை நிற்காமல் மணிகாட்டிக்கொண்டிருக்கிற வாட்சாய்இது.

”அது கண் பிடித்துக்காட்டும் மணிக்கொண்டுதான் தீர்மானிக்கிறேன் என் நகர்வைஎப்போதுமே/அன்றுகடிகாரம்கட்டியிருக்கவில்லை.மறந்துபோனேனா அல்லது மிதமிஞ்சிப்போன சோம்பலா தெரியவில்லை.

மனைவிகூடச் சொல்கிறாள் என்ன முன்ன மாதிரி வாட்ச் கட்ட மாட்டேங்கிறீ ங்க?  என/ அவளது சொல்லில் புதைந்திருந்த வாஸ்தவம் என்னை கவனப்படு த்திய போதும்கூட எதற்கு இது கையில் கசகசவென வியர்வை பிசுபிசுப்புடன்/ அதுதான் செல் போன்இருக்கிறதேஅதில்பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். 

இப்போதெல்லாம் செல்போன்களில் பேசுவதுடன்சேர்த்து மற்ற எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.(சமையல் செய்து சாப்பிடும் அளவு இன்னும் வசதி வரவில்லை.) என்ன அதில் உள்ள ஒரே அசௌகரியம் இருசக்கரவாகனத்தில் அல்லது சைக்கிளில்போகும்போது கையை திருப்பிமணி பார்த்துக் கொள்ள முடியவில்லை.சட்டைப்பையிலிருந்துசெல்லைஎடுத்து,,,,அடேயப்பா,,விடிந்து
தான் போகிறது,”

பாய் கடைக்கு மூன்று தடவைகளுக்கு மேலாய் ரிப்பேருக்குபோய் வந்து விட் டது.வாட்ச். பெரிதாக ஒன்றுமில்லை.பேட்டரி போட ,வாட்சின் வார் மாற்ற மற்றும் ஏதோ ஒன்றென நினைவு,,,,,,இதில் ஒரே ஒரு முறை மட்டுமாய் அவர் இல்லை என லட்சுமி நகரிலிருக்கிற ஒரு கடையில் கொடுதேன் வேலைக்கு, அவ்வளவுதிருப்தியில்லைஎன வைத்துக் கொள்ளுங்களேன். சொல்வார்கள் முடிவெட்டும் கடையும் டெயிலர் கடையையும் மாற்றக் கூடாது என/அந்த வகையில் வாட்ச் கடையையும் இப்பொழுது சேர்த்து விட்டார்கள் போலும். பாய் கடையில் இல்லாத ஒரு சௌகரியம் சேஷையா கடையிலும்,சேஷையா கடையில் இல்லாத ஒரு சௌகரியம் பாய் கடையிலுமாய் மாறி,மாறி புலப் பட்டுத்தெரிந்த பொழுதுகளில் ரிப்பேர்ப்பண்ணப்பட்ட வாட்சும் கையுமாய் திரிந்த தினங்களின் பதிவு இன்றுவரை தெரிவுபட்டுத் தெரிவதாக/

பாய் கடைக்குப்போனவுடன் கேட்டு விட்டார்,என்ன சார் ஆளே தட்டுப் படல என/நான் குடியிருக்கும் ஏரியாவில்தான் பாயின் வீடு.வாட்ச் கடைக் கார பாய்வீடுஎன்றால் மிகவும் பிரசித்தம்.இப்போது வீட்டை ஒட்டியே வாட்ச் கடை ஒன்று போட்டிருக்கிறார் சிறியதாய்.வீட்டின் பக்கவாட்டு ரூம் சும்மா கிடந்த தென அதற்கு முன் பக்கமாய் வாசல் வைத்து கண்ணாடி போட்ட மரக்கதவுட னாய் கடையை ஆரம்பித்து விட்டார் ஒரு சுப முகூர்த்த மற்றதினத்தன்று/ காலையில் கடைதிறந்து வைத்துஒருமணிநேரம்இருப்பார். அப்புறமாய் மாமி யை கடையில்அமரவைத்துவிட்டுசென்றுவிடுவார். பைபாஸ் ரோட்டிலிருக் கிற கடைக்கு/

25 வருடங்களுக்கு முன்பான ஸ்தாபிதமது. இப்பொழுது போல:யூஸ்அண்ட் துரோ:மனோ நிலை இல்லாதிருந்த காலமது. எதுவானாலும் சரி,கடைசிவரை ரிப்பேர் பார்த்து ஓட்டிவிட வேண்டும் எப்படியாவது என பெரும் பிரயத்த னங்கள் பட்ட நேரம்.அந்த பிரயத்தங்கள் எல்லாவற்றிலுமாய் மிகுந்து காணப் பட்ட பொழுதுகளில் வாட்ச் கடையும் அதில் ஒன்றாய் காட்சிப்பட்டு/

பாய்போனபின்பாய் கடையிலிருக்கிற மாமி வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு கடையையும் பாத்துக்கொள்வார்.மாமி ரிப்பேர் என வருகிறவற்றை வாங்கி வைத்துக்கொள்வார்.அவ்வளவே/பாய் இரவு அந்தக் கடையை முடித் து விட்டு வந்து வேலை பார்ப்பார்.ஆனால் அந்தக்கடை போல சௌகரியம் இதில் இருந்து காணப்பட்டதில்லை.

ஒரு முறை நண்பரது மகள் திருமணத்திற்கு பரிசளிக்க அங்குதான் வாட்ச் வாங்கினேன்.கடைநடை ஏறியதும் சொல்லி விட்டேன் பாயிடம்,இது பரிசளிப் புக்காகவென.அவரே இதற்குள் ”என்ன விலை இருந்தால் உங்களுக்கு சௌகரியப்படும், டிசைனை மட்டுமாய் முடிவு செய்யுங்கள் நீங்கள், விலை யை நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் காண்பித்த வாட்சுகளில் ஒன்று தான் இன்றுவரை நண்பரின் மகளது கையை அலங்கரித்துக் கொண்டி ருப்பதாவும் அவளுக்கு பிடித்துப்போன ஒன்றாகவும்/அது வெறும் வாட்ச் மட்டும் இல்லை.அன்பும் வாஞ்சையும் அடைபட்டுத் தெரிகிற ஒரு காலக் கண்ணாடி என்கிறார் அவர்.

விளைகிறபிரியங்களில்செய்கிற விஷயங்கள் இதுபோலஉருபட்டுத் தெரிவது இயற்கைதானே என்கிறார் நண்பர்.

பாயைப்போலவே டீக்கடைகாரரும் உருப்பட்டுத்தெரிகிறார்.டீக்கடை இருந்த வரிசையிலேதான்பாயின் வீடும் இருந்தது.முத்தாரம்மன்கோயிலைத்தாண்டி/

முத்தாரம்மன்கோயில்பொங்கல் மூன்று நாட்களுக்கு நடக்கும்.பொங்கல் நடக்கிற மூன்று தினங்களுமாய் ஏரியா அல்லோகல்லப்பட்டுப் போகும், பந்தல் ,சீரியல் செட்,ரேடியோ, அலங்காரம், மேளம் சாமி அலங்காரம்,,,,,,,,,, என்பதைத்தாண்டி அந்ததெருவில் குடி கொண்டிருக்கிற வீடுகளில் தலைக் கட்டு வரி வாங்குவதில் விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு முனைப்பு இருந்த துண்டு எப்பொழுதுமே/.

மனம் பூத்துத் திரிவார்கள் கோயிலுக்காய் வேலை செய்கிற இளவட்டங்கள். குறிப்பிடவர்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட கோயில் விழாவில் அந்தக் கோயிலைச் சுற்றி யிருக்கிறஐந்துதெருக்காரர்களின் மனதும், கையும் கலந்தி ருக்கும்,அவர்களதுவீட்டின்தலைக்கட்டுவரியும்அவர்கள்வீட்டுபெண்கள்பொங்
கலன்றும் மற்ற நாட்களிலுமாய் போடுகிற கோலம் கோயில் வாசலை அலங்கரிக்கும். இது போன்ற ஈவுகளேகோயில்விழாவின்போதுஏற்படுகிறச் சின்னச் சின்ன சச்சரவுகளைசரி பண்ணிக் கொண்டுபோகும்.

சின்ன தாய் ஒருபீடம்வைத்து தெருவோரமாய் கேட் போட்டுபூட்டப்படிருந்த கோயிலிருந்து சரியாக22ஆவதுநடைவாசலாக பாயின் வீடு. சுற்றிலும் தெரு வின் இருமருங்கிலுமாய் இருக்கிற வீட்டின் வாசல்களில் புள்ளி வைத்து சிரித்த கோலங்கள் கலர்க்கலராயும், வெள்ளையாயும் தென்பட்ட பொழுது களில் அவரதுவீட்டின்வாசல்மட்டும் வெறுமையாய்எந்தஅடையாளமும் சுமக் காமல்/

முதல் நாள் பொங்கல்,இரண்டாம் நாள் நாடகம் அல்லது ஆடலும், பாடலும், மூன்றாம் நாள் விளையாட்டு போட்டி என நடக்கும் பொங்கலில் பாயின் வீட்டில் மட்டும் தலைக்கட்டு வரிவாங்கமாட்டார்கள்.”அப்ப வாட்ச் கட பாயின் வீடு” என்கிற சொல்லுடனும் சிலரின் மனத்தயக்கத்துடனான பேச்சுக்களுட னுடனுமாய் பாயின் வீட்டுப்பக்கம் விழாக்கமிட்டியினர் வர தயங்கிய தினங் களின் நகர்வில் பாய் தானாகவே வந்து வரிதந்து விட்டுப் போனார். ”ஏங்கிட்ட பணம் கேக்க ஒங்களுக்கு என்ன தயக்கம், வரின்னு இல்லாட்டிக் கூட ஏங்பங்கு நன்கொடையா வச்சிக்கங்க,எங்க வீட்டுப் புள்ளைங்களும் நீங்க வைக்கிறபொங்கல விரும்பிச்சாப்புங்க,,,,என்கிற சொல்லு டன்வரி கொடுத்து விட்டு வந்த நாளன்று முத்தாரம்மன் கோயிலில் கிண்டப் பட்டபொங்கல் பாயின் வீட்டிற்குமாய்அனுப்பிவைக்கப்பட்டது.என்பது ஒவ்வொரு வருடமும் பொங்கல்நடக்கிறதினத்தன்றுபேசப்படுகிற பேச்சாய் இன்று வரைஇருக்கிறது.

அன்று பொங்கலை பாயின் வீட்டிற்கு கொண்டுவந்து கொடுத்தவர் டீக் கடைக் காரையும்,வாங்கியவர் பாயின்மனைவியுமாய்இருந்தார்.

”எண்ணண்ணே இந்த வயசான காலத்துல இந்த நீர்க்கட்டுக்காலோட நீங்க அலையாட்டி என்ன?நீங்கஒக்காந்துக்கிட்டு இந்தா இந்த மாதிரி யெள வட்ட ங்கள அனுப்பி வைக்க வேண்டியதுதான?என்றாள்.சங்கடம் என்னம்மா, சங்கடம்என்னைக்குஅவ என்னய விட்டுப் போனாளோ அன்னையிலிருந்து ஆரம்பிச்ச சங்கடம் இப்பவரைக்கும் விட்ட பாடில்ல,அவ என்னைய ஒரு கொழந்தையப்போல பாத்துக்கிட்டா,இப்ப ஆண் ஒண்ணு,பொண் ஒண்ணுமா உள்ளூர்ல இருந்தப்பக் கூட பாக்கமாட்டேங்கிறாங்க.அவுங்க குடும்பம், அவுங்க பாடு ,புள்ள குட்டின்னு ஆயிப்போனபிறகு நான் இத்போயி எதிர் பாக்குறதும் தப்புத்தான்.சரி அதனால என்ன இப்ப ஆணடவன் விட்ட வழிம்மா. சரி வர்ரேம்மா,அப்பிடியே இந்ததெரு முழுக்க எல்லா வீட்டுக்கும் குடுத்துட்டு வரும் போது ராத்திரி பத்து மணிக்கு மேல ஆயிடும். இன்னும் கோயில் பக்கத்துல ஒருத்தன் தண்ணியப் போட்டுட்டு சலம்பீட்டு இருக்கான்றாங்க, நாங்க வரும் போது ஆரம்பிச்ச வந்தான்,இன்னும் ஓஞ்சபாடில்ல, நான்போயி சொன்னாகேப்பான்,.மரியாதைக்காக இல்லாட்டிக் கூட நாளப் பின்னகடைக்கு டீக் குடிக்க வரணுமில்ல, அதுக்கு பயந்துட்டாவது கேட்டுக் குருவான். அதுக்காகத்தான்என்னைய மாதிரி ஆள்களையும் வச்சிருக்காங்க. என்றார்/

அன்று அவர் சொன்ன சத்தியமான வார்த்தைகளை உள்பொதித்தவாறாய் தூக்கம் வந்து விடுகிறது அவருக்கு அப்படிப்படுத்தும் கூட/

21 comments:

மகிழ்நிறை said...


#(சமையல் செய்து சாப்பிடும் அளவு இன்னும் வசதி வரவில்லை.)#
ஹ ,,ஹ
இப்போதெல்லாம் செல்போன்களில் பேசுவதுடன்சேர்த்து மற்ற எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.(சமையல் செய்து சாப்பிடும் அளவு இன்னும் வசதி வரவில்லை.) என்ன அதில் உள்ள ஒரே அசௌகரியம் இருசக்கரவாகனத்தில் அல்லது சைக்கிளில்போகும்போது கையை திருப்பிமணி பார்த்துக் கொள்ள முடியவில்லை.சட்டைப்பையிலிருந்துசெல்லைஎடுத்து,,,,அடேயப்பா,,விடிந்து
தான் போகிறது,”எதார்த்தம்
பாய் போன்ற மனிதர்கள் அதிகம் சிந்திக்க வைக்கிறார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்தமான உண்மை...

தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

நலம் said...

மிக அருமை சார். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இதயப்பூர்வ மான தைத்திருநாள்,, உழவர் திருநாள்..வாழ்த்துக்கள்.....

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வணக்கம் நண்பர் விமலன் அவர்களே, தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

ஹிஷாலி said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

Anonymous said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ!

vimalanperali said...

வணக்கம் கஸ்தூரிரெங்கன் அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் கஸ்தூரிரெங்கன் அவர்களே/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்/

vimalanperali said...

வணக்கம் வெள்ளைச்சாமி ஹோமியோ சார்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் நா,முத்து நிலவன் சார்.
இனிக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் ஹீஷாலி சார். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் பாண்டியன் அய்யா,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் ரவி கிருஷ்ணா சார்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/

'பரிவை' சே.குமார் said...

யதார்த்தம்....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Tamizhmuhil Prakasam said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா !!!

அம்பாளடியாள் said...

தித்திக்கும் தமிழர் புத்தாண்டு தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சகோதரரே தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இவ்வாண்டு சிறப்பான நற் பலன்களை அள்ளி வழங்க வாழ்த்துகின்றேன் !

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/

vimalanperali said...

வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/

vimalanperali said...

வணக்கம் அம்பாளடியாள் மேடம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/