10 Jan 2014

கனவு சுமந்த பொழுதுகள்,,,,,,

வடைகள்சுமந்ததினால்கைவலித்ததாகவோஅல்லதுகைபிசகிப்போனதாகவோ
ஏதேனுமாய் சரித்திரப் பதிவு இருந்ததாகஇதுநாள்வரைஅறிந்ததில்லை இவன்.

சிவகாசிரோட்டில்வரும்போதுதான்போன்பண்ணியிருந்தாள்மனைவி. இன்று  அனாவசியமாய் யாரிடமும்பேசவில்லைசெல் போனில். தெரியாத்தனமாக வும்  பழக்கதோசத்தின் காரணமாகவும் மணியண்ணனுடன் பேசிவிட்டான் நேற்று மாலை.

ஆறுஅல்லதுஆறுமுப்பதுஇருக்கலாம்என்கிறதானநினைவு.சின்னதும் பெரிய துமாய் வாட்சில்அடைபட்டுக்கிடந்தமுட்கள் இரண்டும் மிகச்சரியாக தன் நே ரம் அறிவித்து வெளி உலகைச்சொன்னநேரம். மாலைமயங்கிஇரவை எட்டித் தொட்டு கைபிடிக்கப்போகிற வேளை .வந்த மிஸ்டு காலை அட்டெண்ட் பண்ணியபோது அது மணியண்ணினின் அழைப்பாய் உருப்பெற்றுத்தெரிந்தது.

பேசி முடித்த பதினைந்து நிமிடங்கள் சில்லறைக்கு பதினைந்து ரூபாய் சில்ல றை என கண க்குச்சொன்னது செல்போனின் தொடுதிரை.

ஆகா,நாளைக்குபுத்தாண்டுக்குஅதிகரிக்கவேண்டியகால்ரேட்டைஇன்றே அதிகரித்து விட்டார்களா,,,,,,?கொஞ்சமாய் மனதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் இன்றிலிருந்து நாளை இரவு 12 மணிவரை எனநினைத்து மிகவும் அத்தியாவசியம் தவிர்த்து யாரிடமும் அனாவசியமாயும்,பழக்க தோசத்தினா லும் கூட யாரிடமும் பேசாமல் இருந்து விட்டான்,


இவனைப்போலத்தானே எல்லோரும்.வேறு யாரிடமிருந்தும் இவனுக்கும் போன் வரவில்லை இந்த மதியப்பொழுதுவரை/ இப்பொழுதான் வருகிறது அதுவும்மனைவியிடமிருந்து, மனைவியிடம்என்றால்பிரியமாய் பேசிக் கொள் ளலாம்.அரிசி,பருப்பு,காய்கறி,பட்ஜெட்,,,,,,,தவிர்த்து அன்பும் காதலுமாய் பேசிக் கொள்ள நிறையத்தான் இருக்கிறது.

பேசுவார்கள் சமயத்தில் ஊர் உறங்கிப்போன இரவு வேளையில் வீட்டின் நடையில்அமர்ந்து கொண்டு நேரம் போவது தெரியாமல். அப்படியான இனிக் கிற பேச்சுகள் எப்பொ ழுதும் இவன்மனம்நிறைந்தே இருந்திருக்கிற தாய். இருக்கட்டும்,இருக்கட்டும் வாழ்வின் இருப்புகளின் சிலகனமான நிமிடங் களைக் கடக்கையில் இம்மாதிரியான நினைவுகள் மனதுக்குவலு சேர்ப்பதாக/ நன்றாகவே இருக்கிறதுஇவன் கூட சொல்வதுண்டு அடிக்கடியாய் மனை வியிடம்.”அலுவலகத்தில்மனைவியிடம்பேசுவதற்குஎனதனியாகலீவு கொடு த்தால் தேவலாம் என .கூடவே காசுகொடுத்து எங்கேனுமாய் போய்விட்டு வரச்சொன்னால் இன்னும் தேவலாம்.அந்த தேவலாம்படி வருகிற போனா அல்லது எதுவும் தேவை நிமித்தமாய் இருக்குமா? தெரியவில்லை/

மதியம் இந்த ஒண்ணரை மணிப்பொழுதில் என்ன பேசிவிடப் போகிறாள். இவனுக்குப் பின்னால் லாரியும்பஸ்ஸீமாய்வந்துகொண்டிருந்தது தெரிகிறது. வெண் மேகங்கள் இரண்டு காற் றில் அலைபாய்ந்து பறந்து திரிந்து கொண்டி ருக்கின்றன.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவிப்போகிற மேகக் கூட்டம். ஒன்று மனித உருவம் காட்டிச்செல்கிறது.அதன் கீழாய் பறந்த பறவைகள் நான்குமாய்வெண்மைகாட்டிதெரிந்தமனிதஉருவைசிறகுபிடித்துக்கூட்டிச்செல்
வது போல இருந்தது.இதில் யார் யாரைக்கூப்பிட்டுப்போகிறார்கள் என்கிற மென் குழப்பமெல்லாம் அனாவசியம் என்கிற எண்ணத்துடனும், உயரிய நோக்குடனுமாய் மேகத்தை விட்டு பார்வையை மேகத்திலிருந்து கழட்டி தரையில் பதித்து சைக்கிளை ஓரம் கட்டுகிற போது டவுன் பஸ்ஸும் லாரியும் இவனை கடந்து செல்கிறதாய்/

மேலே மிதந்து செல்கிற மேக மனிதனை டவுன்பஸ்ஸில்அனுப்பி வைக்க லா மோ,,,?அது பாட்டுக்கு பஸ்ஸின் நெரிசலில் மனிதக்கூட்டங்களின் மீது படர் ந்து பாவி பயணிக்கும். குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிற்கிற பஸ்சிலிருந்து இறங் கி இவன் போன்றோர் உதவியுடன் பிறிதொரு பஸ்சில் பயணிக்கலாம்.அது டவுன் பஸ்ஸாய் அன்றி மொபஸலாக இருந் தால் பாட்டுக் கேட்டுக் கொண்டும் தூங்கியவாறுமாய் பயணிக்கலாம்.இப்படி டவுன் பஸ்சிலும் மொப ஸலிலுமாய் மாறி,மாறி பயணிக்கிற அதை கைபிடித்து ஏற்றி விட இவன் போன்று மென் மனது படைத்தவர்கள் யாராவது இருக்கக்கூடும்.

ப்ரௌஸிங் சென்டர் வாசலில் தலை நிறைந்த மல்லிகையும்,ஸ்டிக்கர்ப் பொட்டுமாய் நின்றசுடிதார் பெண்ணுக்கு20க்குள்ளாய் இருக்கலாம் வயது. அவள் அணிந்திருந்த மென் கலர் சுடிதார் அவளுக்கு நன்றாகவே இருந்தது. செல்லில்பேசிக்கொண்டிருந்தாள்.அதேவரிசையில் நான்கு கடை தள்ளியி ருந்த வொர்க ஷாப்பில் இரு சக்கரவாகனம் ஒன்றை பழுது பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.சாலையை விட்டு இருபுறமுமாய் பரவித்தெரிந்த மண்வெளி கடைகளையும்,வலது ஓரம் வீடங்கிய தெருக்களையுமாய் காட்சிப்படுத்தி யது. தெருக்களைக் காட்சிப்படுத்திய வரிசையில் பின்னோக்கிச்சென்றால் பத்தாவது கட்டிடம் இவன் படித்த பள்ளியாக தெரிந்தது.

சமீபகாலமாகஎன்றெல்லாம்இல்லை,அப்படியொருபழக்கம்வேர்விட்டிருந்தது.
பஜாருக்குச்சென்றால்அப்படியேநூல்ப்பிடித்துஇருந்துவிடுவான்.சைக்கிள்
மிதிப்பதில்இருக்கிறபிரியம் தாண்டிபடித்தபள்ளியைபார்க்கிறஆசை இவனுக் குள்ளாய் குடிகொண்டிருந்தது ம்  அதற்கு  ஒரு காரணமாய் இருந்தது.

நல்லவிஷயம்தான்என்றார்நண்பரும்தோழருமானஅவர்.அவர்பார்ப்பதற்கு
என்.சி.சிவாத்தியார் கார்மேகத்தைப்போலவேஇருப்பார். என்.சி,சி வாத்தியார் தான் இவனைப் பார்க்கிறபோதெல்லாம் சொல்வார்.என்சி,சியில்இருந்த நாட் களில்/

“இவன்போலீஸ்செலசனுக்கெல்லாம்போனாகண்டிப்பாஎடுத்துக்குருவாங்க,
என/எப்பொழுது மேஒருதனிகண் வைத்திருப்பார் இவன் மீது/மதிப்புகலந்த பார்வையுடன்./ அப்படிப்பட்டவர் ஒரு பள்ளி நாளின் மாலை வேலையில் பஜார் வழி சென்ற பள்ளி ஊர்வலத்தின் போது இவன் ஒரு வாத்தியாரின் பெய ரைக்குறிப்பிட்டு திட்டிக்கொண்டே வந்தான் என நொந்து கொண்டார் மறுநாள்/

இவன்ட்யூசன்படிக்கிறஹசீனாபேகம்டீச்சர்தான்கேட்டார்கள்.இப்படியாம்லஎன.
டீயூசன் முடிந்து அனைத்துபிள்ளைகளையும் அனுப்பி வைத்து விட்டு/அவர் எடுக்கிறவரலாற்றுப் பாடத்தை விட அவர் சொல்லிக்கொடுத்த நடை முறை ரீதியிலான விஷயங்களே அவரிடம் இவனும் இவன்போன்றமனம் பிடித்துப் போனமாணவமாணவிகளும்டியூசன்சேரகாரணமாகிப்போகிறது.

வருடங்களையும்,மன்னர்களையும்,போர்களையும்அவர்விளக்கிச்சொல்கிற விதமும், பாங்கும் இவனைக்கவர்ந்ததுண்டு. எப்போதுமே/அவ்வளவு எளிமை யாக வீட்டில் பாடம் எடுக் கும் அவர் ட்யூசனில் மிகவும் கறார் காட்டியே இருப் பார்/ அவரது வீட்டின் வாசலில்தான் ட்யூசன்நடக்கும். இவனுடன் சேர்த்து பண்ணிரெண்டுபேர்வரை படித்தார்கள். அப்போதெல்லாம் சைக்கிள் வைத்திரு க்கிற அளவுக்கு யாருக்கும் வசதி இருந்திருக்கவில்லை. எல் லோரும் நடந்து தான் வருவார்கள். கை,கால் முளைத்தபூக்குட்டி களாயும், பள்ளிச் சீருடை யுடனுமாய்/

வராண்டாதாண்டிமுன்வாசலில்உள்வாங்கிப்பொடப்பட்டிருந்தகீற்றுகொட்ட
கையில்தான் பாடம்நடத்துவார்.முன்வாசல்நடையோடு போடப்பட்டிருந்த மரநாற்காலியில்தான் அமர்ந் திருப்பார்.பள்ளிக்கு வருகிற டீச்சராக அவர் வீட்டில் காணப்படமாட்டார்.ஒரு சாதாரண நைலெக்ஸ்ச்சேலையும் மேலே போர்த்தியிருக்கிற துண்டுமாய்தான் இருப்பார்,உடல் கனத்து இருக்கும் அவருக்கு அது நன்றாகத்தான் இருந்ததாய் அவர் நினைத்தார். தப்பித் தவறிக் கூடவீட்டின்நடைவாசல் தாண்டி யாரையும் உள்ளே போக அனுமதிக்க மாட்டார். உள்ளே போய் பிள்ளைகள் எதையும் உழப்பி விடுவார்கள் என்பதற் காக அல்ல,உள்ளே படுத்திருக்கிறகுடிகாரக்கணவன்யாரையும் எதுவும் சொல்லி விடக்கூடாது என்கிற நட்பா சையிலும்,ஜாக்கிரதை உணர்விலுமாய் தான் அப்படிச்சொன்னார் என பிற்பாடாய்த்தான் தெரிந்தது.

அன்றுதாமதமாய்ட்யூசன் சென்றஇவன்எப்போதும்அமர்கிறபணப்பாண்டியின் பக்கத்தில் அமர்ந்து புத்தகத்தை எடுத்து விரித்த இரண்டாவதுநிமிடத்தில் வீட்டிற்குள்ளிருந்துகனத்தசப்தமாய்டீச்சரின்கணவரதுஅழைப்பு.முதல் சப்தத் தையும், இரண்டாவது சப்தத்தை யும் தவிர்த்த டீச்சர் மூன்றாம் சப்தம் வந்த சில நொடிகளில் எழுந்திருக்கவும் டீச்சரின் கணவர் கோபத்துடன் வந்து டீச் சரை சேருடன் எட்டி மிதிக்கவுமாய் சரியாய் இருந்தது.

டீச்சர்கீழே விழுந்து விட்டார்கள்.விழுந்த வேகத்தில் பிள்ளைகள் மீதுதான் சரிந்தார்கள்.சரிந்தவேகத்தில்எழுந்துகண்ணீரும்,கலந்ததோற்றமுமாய்நடுங்கி நின்றபிள்ளைகளைவெளி யேஅனுப்பி விட்டார்கள்.பதட்டத்தில் இவன் புத்தகத்தை அங்கேயே போட்டுவிட்டு வந்து விட்டான்.

ட்யூசன் சேர்ந்த நாளிலிருண்டு டீச்சர் இவ்வளவு அழுதும் ,டீச்சரின் கணவர் இவ்வளவு கோபப்பட்டும்இவன்பார்த்ததில்லை.டீச்சர்குடியிருக்கிற தெருவிற் கு அடுத்ததெருவிலிருந்த என்.சி.சி வாத்தியாரை இவனும் பணப்பாண்டியும் தான் போய் கூட்டி வந்தார்கள். மற்ற பிள்ளைகளில் சிலர்டீச்சரின் வீட்டுவாச லிலும்டீச்சரின்அருகிலுமாய்நின்றிருந்தார்கள்.அவர்களின் கையை பிடித்த வாறும் சுற்றி நின்றவாறுமாய்/

பூட்டப்பட்டிருந்தகதவிற்குவெளியேநின்றிருந்தடீச்சர்உள்ளே அழுது கொண்டி ருந்தபிள்ளை களை சப்தமிட்டும்,அழுத குரலிலுமாய் சமாதான வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தார் கள்.தெருமுழுக்க இல்லையென்றாலும் கூட எதிர்த்த வீட்டார்களும், அருகாமை வீட்டார்களும் வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்த வேலையில் என்.சி.சி சாருடன் இவனும் பணப் பாண்டியுமாய் வந்து விட்டார்கள்.

ஏற்கனவே குண்டாயிருந்த டீச்சரின் முகம் அழுதழுது வீங்கியிருந்தது. எவ் வளவு சொல்லியும் கதவைத்திறக்காத டீச்சரின் கணவர் போலீசை கூப்பிட வேண்டி வரும் என சார் அதட்டவும்கதவைதிறந்துவிட்டார் கோபத்துடனும், கெட்டவார்த்தையால் வைதவாறுமாய்/ எவ்வளவு சமாதானப் படுத்த முயன்றும் தோற்றுப்போன என்.சி.சி சார் டீச்சரின் கணவர் கேட்ட “அவ மேல ஒனக்கு என்ன இவ்வளவு அக்கறை”என்ற ஒற்றை பழிச்சொல் தாங்கி டீச்ச ரையும் பிள்ளைகளையும் அவரது வீட்டுக்குக்கூட்டிப்போய்விட்டார்.

மறுநாளிலிருந்து ஒருவாரம் டீச்சர் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. பிள் ளைகளைக் கூட்டிக் கொண்டுஅவரது சொந்தகாரர் வீட்டுக்குப் போய் விட்டார்.ட்யூசன் கிடையாது டீச்சர் வருகிற வரை எனச்சொல்லி விட்டா ர்கள்.அன்று மாலை பள்ளி முடிந்த பிறகு ஹெட் மாஸ்டர் ரூமில் மீட்டிங் நடந்தது.அனேகமாய் எல்லா சாரும்,டீச்சரும் வந்து விட்டிருந் தார்கள். ஏ.ஹெச்,எம் தர்மலிங்கம் சார்தான் அன்று இன்சார்ஜ்.அவர் மிகவும் கோபமாக பேசியது ஹெ,ச் ரூமின் பின்னால் நெட்லிங்கம் மரத்தின் மறைவில் நின்றிருந்த எங்களுக்குக் கேட்டது.”டீச்சர் புருசன கூப்புட்டனுப்பி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது. இந்தாஅரைபர்லாங்தூரத்துலஇருக்குற வீட்ல யிருந்து அவனால வர முடியல இன்னும்,,,,/ வாங்க எல்லாருமா சேந்து அவன் வீட்டுக்கே போயிட்டுவருவோம்.இனிமே இந்த மாதிரி செஞ்சிட்டுட்டு திரிஞ் சான்ன போலீஸ்ல கொண்டோயி நிறுத்திருவோம்ன்னு சொல்லீட்டு வந்துரு வோம்/அதயும் மீறி ஏதாவது செஞ்சான்னா,நம்ம என்,சி,சி சாரையும்,பி.டீ மாஸ் டரையும்,தமிழ்சாரையும்விட்டுருவோம்.இப்பிடியாபட்டவனுக்கெல்லா கொஞ்சம் ஒத்தடம் குடுத்தாதான் சரியா வரும்.என்றவாராய் எழுந்த அவரும் மற்ற சார்,டீச்சர்களுமாய் போய் நின்ற இடம் டீச்சரின் வீடாகத்தான் இருந்தது.


அன்றைக்கு என்ன நடந்தது எனத்தெரியவில்லை.வேறொரு டீச்சரின் வீட்டு ட்யூசனுக்கு அனுப்பி வைக்கபட்டார்கள் இவனும் மற்ற பிள்ளைகளும்/ என்.சி.சி சாரும்,பி.டீ வாத்தி யாரும் தமிழ் சாரும் டீச்சரின் சொந்தக்காரர் வீட்டிற்கும்,கணவரிடமுமாய் நடை யாய் நடந்தார்கள்.ஒருவாரம் கழித்து டீச்சர் வேலைக்குவந்துவிட்டார்கள்.அதேகலகலப்பு,அதே பாடம்எடுக்கும் முறை ,அதே ,,,,,,,என்கிற முத்திரையுடனுமாய் இருந்த அவர்களின் முகத்தி ற்கு பின்னால் இறுக்கப்பட்ட சோகம் ஒரு மாதத்தில் அவிழ்ந்து மென்மை பூத்த மலராக/

வாரத்தின் அடுத்தடுத்த நாட்களில் டீச்சர் ட்யூசன் நடத்த ஆரம்பித்து விட்டி ருந்தார்கள் பழையபடியுமாய்/ஆனால் முன்பு போல் இல்லை. பள்ளியின் வகுப்பறையை இங்கே இடம் பெயர்த்து கொணர்ந்திருந்தார்.

டீச்சரின் கணவர் டீச்சரின் அருகிலேயே சேர் போட்டு அமர்ந்து கொண்டார். சமயத்தில் தூக்கு வாளியை எடுத்துக்கொண்டு போய் டீச்சருக்கும் அவருக் குமாய் டீயும்,எங்களுக்கு கடலை மிட்டாய்,முறுக்கு எனஏதாவது வாங்கி வருவார்.காலையில்பள்ளிக்குநேரமாகிற பொழுதுகளிளெல்லாம் டீச்சரை அவர்தான் பள்ளியில் கொண்டுவண்டு விட்டுவிட்டுப் போவார்.

பள்ளியின் கேட்டில் எளந்தப்பழம் விற்கிற பாட்டியும், ஐஸ்க்கார அண்ணா ச்சியும்டீச்சரின் கணவரைப்பார்த்து வணக்கம் சொல்லி நலம் விசாரிக்கி றார்கள்அந்த நாட்களில்.டீச்சரின் கணவர்வேலைபார்க்கிற பருப்புமில் பள்ளிக் கூடம்தாண்டித்தான் இருக்கிறது. கணக்கெழுதுகிற வேலை.காலை ஒன்பது மணியிலிருந்துஇரவுஎட்டுமணிவரை.முதல்.வேலைக்குப் போக முதலில் சுனங்கியவரை ஹெ.ச்.எம்மும்,பி.டீ சாரும்,என்.சி.சி மாஸ்டரும் சேர்ந்து தான் சிக்கெடுத்து அனுப்பிவைத்தார்கள்.

அந்த சரி செய்தல் இவன் பள்ளியிலிருந்து படிப்பு முடிந்து வெளியேறும் நாள்வரை தொடர்ந்தது.இப்பொழுதுடீச்சரும்அவரதுகணவரும் பிள்ளைகளும் எங்கிருக்கிறாரகள் எனத் தெரியவில்லை.பிள்ளைகள் அனேகமாய் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டிருக்கக் கூடும். என்.சி.சி வாத்தியாரையும்,தமிழ் சாரை யும் அவ்வப்பொழுது பார்த்திருக்கிறான், பேசியிருக்கிறான். இப்போ தெல்லம் அவர்களியும் பார்க்கமுடிவதில்லை.டீச்சர் இருந்த வீதியும் மாறிப்போய் தெரிந்தது.

பள்ளியில்ஏதோஒருவிழாபோலும்சாமியானாகட்டியிருந்தார்கள்.கலர்க்கலராய்ஷாமியானாதுணிகளின் டிசைன்களைப்போல கனவுகளையும், நனவுகளையும்சுமந்தவனாய்வந்து கொண்டிருந்த பொழுதில்தான் போன் பண்ணினாள் மனைவி/

மதியச்சாப்பாட்டிற்குகாய்கறி எதுவும் செய்யவில்லை. வரும்போது வடை வாங்கி வந்து விடுங்கள் என/பேசி முடித்துவிட்டு கைபேசியை பைக்குள்ளாய் வைத்துவிட்ட பின்பும் கைபேசியின் திரையில் மனைவியின் முகம் இருப்ப தாய் நினைவு இவனுக்குள்ளாய்/

12 comments:

 1. டீச்சர் நிலைமை வருத்தப்பட வைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. வடையில் ஆரம்பித்து வடையில் முடிந்தாலும் அடுத்தடுத்த பத்திகள் ஆயிரம் பேசுகின்றன. டீச்சரின் நிலை மிகவும் வருத்தப்பட வைத்தாலும் மனம் மாறிய கணவர் அப்படியே இருப்பார் என நம்புவோம்... மனைவியுடன் பேசிவதில் இருக்கும் அலாதி பிரியம் எழுத்தில் தெரிகிறது,,,,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சேக்குமார் சார்,
   நன்றி தங்களது வருகைக்கும்,
   கருத்துரைக்குமாக/

   Delete
 3. அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் எஸ் சுரேஷ் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. ஆசிரியைக்கு நேர்ந்த துன்பம் மனதை வாட்டிவிட்டது நண்பரே.
  தங்களின் எழுத்து வழக்கம் போலவே , டீச்சரின் வீட்டிற்கே எங்களையும் அழைத்துச் சென்று விட்டது.
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
   நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   பள்ளி ஆசிரியரான உங்களுக்கு
   இது போன்ற அனுபவங்கள்
   நிறைய பார்க்கக்கிடைத்திருக்கும்தான்.

   Delete
 5. Replies
  1. நன்றி வாக்களிப்பிற்கு சார்/

   Delete
 6. மிகவும் நன்றாக இருக்கிறது, சார்,இருந்த போதிலும் சில இடங்களில் சின்ன,சின்ன திருத்தம் தேவைப்படுகிறது. தனது குழந்தை யை கூட்டிக்கொண்டு சொந்தக்காரர் வீட்டுக்கு போய் விட்டார் எனவும்....ப்ரவுசிங் செண்டர் என துவங்குமிடத்தில் பஜார் அல்லது கடைவீதி என அந்த காட்சியை விள்க்கியிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். நண்றி....

  ReplyDelete
 7. வணக்கம் வெள்ளைச்சாமி ஹோமியோஅவர்களே/
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete