14 Jan 2014

பிறிதொன்று,,,,,,,

                               
ஒரு வாரம் முழுவதுமாகிப்போகிறது.வீட்டில் பெயிண்ட் அடித்து முடிக்க.வீடு இப்போது புது பொலிவு கொள்கிறது.
 பச்சை,சிவப்பு,மஞ்சள்,ஆரஞ்சு,ஊதா இன்னும் இன்னுமான பல நிறங்களில் யோசித்தபோதும் ,பார்த்த போதும் வீட்டார் அனைவருக்கும்,சின்ன மகன் உட்பட பிடித்த கலர் அதுவேயாகிப் போனது.
 ஐஸ் க்ரீம் நிறத்தில்இருந்த லைட்கலர் மெல்லிய உடை உடுத்தியதுபோலநன்றாக இருக்கும்  பெயிண்ட் அடித்து முடித்த பின்பு என பேசிக்கொண்டோம் .
 வீட்டில் எல்லோருடைய விருப்பமும் எனது விருப்பமும் அதுவேயாகிப்போனபின் அந்தக் கல ரை யேதேர்ந்தெடுத்துவாங்குவதென முடிவாகிப்போகிறது.
 சிலநேரங்களில்முடிவுகளேவிருப்பங்களாயும்,விருப்பங்களே முடிவுகளாயும்ஆகிப்போகிற அல் லது ஆக்கி வைக்கப்படுகிற கொடுமை நிகழ்ந்து விடுவதும் உண்டு.
 அது  காலம் காலமாக இருக்கிற நீள் நிகழ்வின் இயல்பாக/
 நாங்கள் கஷ்டப்பட்டு மூளையை கசக்கிப் பிழிந்து(?) யோசித்த கலரையே வாங்கி வந்தேன். ஷேட் கார்டில் அதற்குப்பெயர் என்னவோ போட்டிருந்தது.இப்பொழுது ஞாபகமில்லை.
 அந்த கலரை தேர்ந்தெடுக்கும் போது  அது மாதிரியே தோற்றமளிக்கக்கூடிய இன்னொன் றும் இருக்க இரண்டில் எதை எடுப்பது என்கிற உயர் குழப்பத்திலும்,எதன் பக்கம் சாய்வது என்கிற முடிவெடுக்க முடியா தன்மையினாலும் இரண்டு கலரிலும் ஒவ்வொரு கிலோ என சாம்பிளுக்கொன்றாய் வாங்கி வந்தேன்.
 வாங்கி வந்த கையோடு வீட்டின் வராண்டா சுவரிலும்,ஹால் சுவரிலுமாய் அடித்துப் பார்க் கிறேன்.நான் அடித்துக்கொண்டிருக்கையிலேயே பிரஸ்ஸை இடையில் வாங்கி சின்ன மகன் அடிக்கிறான்.
 அவன்அடித்ததும்நன்றாகவேஇருந்தது.பூவொன்று நகர்ந்து,நகர்ந்து,,,,,,,,,,,,நர்த்தனமாடினால் 
எப்படி இருக்கும்?அது போலிருந்தது அவனது அங்க அசைவுகள்.
மேலிருந்து,கீழும்,கீழிருந்துமேலுமாகவும்,பக்கவாட்டிலுமய்தீற்றிய பட்டை பிரஷ்ஷின் வர்ணம் நன்றாகயிருந்தது.
பார்க்க ஆ,,,,சூப்பர்.பிரஸிலிருந்து வழிந்த வர்ணத்தை வைத்து ஒரு உருவம் வரைந்து விட் டான்.
 அவன் ஒரு உருவனாகவே பல நேரங்களில் காணப்படுகிறான்.கை,கால் முளைத்த மென் சிற் பம் ஒன்று அசைந்து,அசைந்து நடம் புரிந்தால் எப்படியிருக்கும் என்பது போலிருந்த அவனது அசைவை தாண்டி முடித்து விட்ட அன்றைய நாளின் நகர்விலிருந்து சரியாக ஆறு மாதங்கள் கழித்து பெயிண்ட் அடிக்க அரம்பித்தோம்.
 வீட்டின் உள்ளே மட்டும் போதும் என முடிவெடுத்து ஆரம்பித்த வேலை  திருவாளர் பெயி ண்டரின் வற்புறுத்துத்தலால்  வீட்டிற்கு வெளியிலும் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்க் குட்பட்டுப்போனது.
 நகரின் பெரிய கடை ஒன்றில் வாங்கிய பெயிண்ட்,பிரஷ் இத்தியாதி,இத்தியாதியான சமாச் சாரங்களுடன் ஆரம்பித்த வேலை முடிய ஒரு வாரம் ஆகிப்போகிறது.
 உள்ளேயும்,வெளியேயும் கலர், வெள்ளை,பார்டர் என மாற்றி,மாற்றி அடிக்கப்பட்டிருந்த கலரையும் புதுக்கோலம் பூண்டிருந்த வீட்டையும் பார்த்த ஓரிவர் “நன்றாகயிருத்தது கலர், கலர் கண்னை உறுத்தாமல்இப்படித்தான் இருக்கவேண்டும்”  எனவும் மாறி,மாறி சொன்னார்கள்.
 அந்த புகழின் மயக்கத்திலும்,வீடு புது பொலிவு பெற்று விட்ட திருப்தியிலும் இன்னும் நான் கைந்து வருடங்களுக்கு கவலையில்லை எனகிற மனோநிலையிலுமாய் இருக்கும் போதுதான் அந்த வழியாக வீட்டை அண்ணாந்து பார்த்தவாறேசென்ற பக்கத்துத்தெரு பெண் ஒருவர் ரொம்ப நேரம் பேசிவிட்டு செல்லும் போது கூறினார்.
 “வீட்டுக்குள்ளவேலைக்கு ஆட்களவுடும்போது யாரு என்னன்னு பாத்துவுடனும்க்கா,நம்ம  என்னத்தக்கண்டோம் என்ன ஜாதி ஆட்களோ என்னன்னு,என/
 அவர் போன பிறகுதான் நினைக்கிறேன் புதுக்கோலம் பூண்டிருந்த வீட்டை அண்ணாந்து பார்த்தவாறு/
வீட்டிற்கு பெயிண்ட் அடிக்காமலேயே விட்டிருக்கலாம் எனவும், இந்தமாதிரி புகழின் மயக்கத்திலுமாய் இருந்திருக்க வேண்டாம் என/  

18 comments:


 1. வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்
  திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

  பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!

  பொங்கல் திருநாள் புகுத்தட்டும் வாய்மறையில்
  தங்கும் புவியைத் தழைத்து

  பொங்கல் திருநாள் புசிக்கட்டும் சீா்கம்பன்
  செங்கனித் தோப்பில் திரிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கி பாரதிதாசன் சார்,
   இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

   Delete
 2. //நான் அடித்துக்கொண்டிருக்கையிலேயே பிரஸ்ஸை இடையில் வாங்கி சின்ன மகன் அடிக்கிறான்.
  அவன்அடித்ததும்நன்றாகவேஇருந்தது.பூவொன்று நகர்ந்து,நகர்ந்து,,,,,,,,,,,,நர்த்தனமாடினால்
  எப்படி இருக்கும்?அது போலிருந்தது அவனது அங்க அசைவுகள்.///
  இதற்காகவே இன்னுமொரு முறை பெயிண்ட் அடிக்கலாம் நண்பரே
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
   அடிக்கிற பெயிண்ட்கள் சுவற்றை
   பளிச்சிடச்செய்கையில் நம்மையும்,,,,,,,,

   Delete
 3. படித்து முடித்ததும்
  அவர்கள் திருந்த என்றாவது இன்னொருமுறை
  பெயிண்ட் அடிக்கலாம் எனத் தோன்றியது எனக்கு
  அருமையான சொற்சித்திரம்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரமணி சார்.
   நன்றி தங்களது வருகைக்கும்,
   கருத்துரைக்குமாக/அடிக்கிறபெயிண்ட்கள்
   சுவற்றை மட்டுமே பளிச்சிடச்செய்கின்றன/

   Delete
 4. Replies
  1. நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.

   Delete
 5. இனியா பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனியா மேடம்.
   இனிய பொங்கல்நல் வாழ்த்துக்கள்.

   Delete
 6. நம் சந்தோசம் நமக்கே...! மனம் புதுப் பொலிவு பெற்று விட்டால் சரி...

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
   நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

   Delete
 7. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் விமலன் சார்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆர்.வீ சரவணன் சார்,
   இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

   Delete
 8. மிக அருமையான கதை! சிலர் திருந்த மாட்டார்கள்! விடுங்கள்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. வணக்கம் எஸ் சுரேஸ் சார்
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 10. எத்தனை பெரியார்கள் இன்னம் வேண்டுமோ தெரியவில்லை இந்த மாதிரி மனிதர்களின் மனதிற்கு வெள்ளையடிக்க....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் எழில் மேடம் ,
   வெள்ளையடித்தாலும்
   மறையாத அழுக்கு அது
   நன்றி வருகைக்கும்,கருத்துரைகுமாக/

   Delete