16 Jan 2014

படிக்கட்டு,,,,எட்டாவதைபடிஎன்று சொல்லமுடியவில்லை.மேல் விளிம்பு மடக்கப்பட்டு முடிந்தஇடத்திலிருந்து மூன்றை அடி நீளத்திற்கு தன் இருப்பு காட்டி மென் பரப்பாய்அழுக்காயும் பாசமாயும் தூசிகளுடன் காட்டிய பரப்பு முடிந்த இடத் திலிருந்துஆரம்பித்துவளர்ந்தமூன்றுபடிகளைச்சேர்த்து பதினென்றாய் கணக்
காகிறது.

முதல்ப்படியில் கால்வைக்கையில் மஞ்சளாய் தெரிந்த துணி மடக்கப்பட்டு தெரிந்ததாய்/கர்ச்சிப்போல்மடித்துக்காணப்பட்டஅதுவீட்டில்எதற்காய்பயனான துஎனஞாபகம் இல்லை.இப்படியாய்ஞாபமற்ற விஷயங்கள் மஞ்சள் துணி போல நிறைய சேர்ந்து போகிறதுதான் அன்றாடங்களின் நகர்வுகளில்/ 

இரண்டாவதுபடியில்தூசிதவிரவேறொன்றும்இல்லை.மூன்றாவதுநான்காவது படிகளில்ஆரம்பித்துஉதிர்ந்துகிடந்தபுங்கமரத்துஇலைகள்படிகள்நெடுகிலுமாய்/

மடக்கிவைக்கப்பட்டிருந்தசாக்கு ஒன்று இல்லை சொல்லமுடியாத படியின் ஒரமாய்காணப்படுகிறது.

இவை கடந்து மேலேறிச்செல்கையில் படியின் கைபிடிகாண்பித்த பிங்க் கலர் நன்றாகவேஇருக்கிறது கண்ணுக்கு குளுமையாயும் மிக சாந்தமாயும்
ஆன்பண்ணப்பட்டமோட்டார்மாடியில்இருக்கிறபிளாஸ்டிக்டேங்கில் தண்ணீர் நிரப்புகிறதாஎனப்பார்க்கப்போனஅந்தஅதிகாலையில் ரைஸ் மில் ஓடிகொண்  டிருக்கிற சப்தம் காதில் இரைவதாக/ 

இந்நேரம் ஓடிகொண்டிருக்கிற ரைஸ் மில் எதை அரைத்துக் கொண்டிருக் கிறது எனத்தெரியவில்லையானாலும் கூட அதன் அதிர்வு செவிதாக்கி யும் பறப்பனவையும்,ஊர்வனைவையும் இடைஞ்சல் பண்ணுவதாக/

இந்த இடைஞ்சல் சமயத்தில் ரைஸ்மில் இருக்கிற பக்கம் நாய்களைக்கூட நடமாடவிடாததாய்/

பதினோராவது படி ஏறி வலப்பக்கம் திரும்பினால் காட்சிப்படுகிற மாடிப் பரப்பின் கைபிடிச்சுவர் தாண்டி விரிகிற பார்வை அன்றாடம் ஆயிரங்களை கண்டு வருகிறது,இந்த உழவர் திருநாளில்/

.அதில்ஒன்றாய் இவ்வருடம் தன் வயலில் குறைந்து போன நெல் விளைச் சலைப் பற்றி நேற்று பேசிகொண்டிருந்த கிட்ண்ணன்னின் நினைவு வந்து போகிறது. அந்த நினைவின் கைபிடித்து பதினோராவது படியில் பதித்த கால்முதல்படியில்வந்துநின்ற கணம் படிகளை மேல்நோக்கி ஏறிட்டபோது தெரிகிறது மேலேறிச்செல்லும் படிகளின் முன்பக்க விளிம்பில் பூசப் பட்டிருந்த பிங்க் வர்ணம் விழி நிரப்பிச்செல்வது/

பூசப்பட்டிருந்த பிங்கிலும்,உதிர்ந்து கிடந்த இலைகளின் மீதும், மடித்துக் கிடந்தசாக்கின்மீதும்மிகமுக்கியமாய் மஞ்சதுணியின் அடியிலுமாய் ஊர்ந்து திரிந்தஎறும்புகளும்,பூச்சிகளுமாய்தென்படுகின்றன.கிட்ணணன்னின்நினைவைப் போலவும்,பேச்சைப்போலவுமாய்/

4 comments:

 1. வணக்கம்
  நல்ல கருத்தாடல்....மிக்க பதிவு
  வாழ்த்துக்கள்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்.
   நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்சுரேஷ் சார்.நன்றி வருகைக்கு/

   Delete