16 Jan 2014

அத்துவானம்,,,,,,

பறந்துவந்தசிட்டுக்குருவிஅமர்ந்துகொண்டிருந்ததின்மீதுஇறகுரசிஅமர்கிறது சிறியகூட்டின்குச்சிகள் பக்கவாட்டில்சிலும்புகாட்டிகுத்துகிறது.பறந்து வந்த  மர்ந்த குருவியின் மீது/

மேலுரசிய குச்சியின்  சிலும்புகளை தன் இறகால் தள்ளி விட்டு விட்டு கூட் டினுள் மென்மை காட்டிய இடத்தில் அமர்கிறது,மென் பஞ்சு போல் இருந்த  கூட்டினுள்தன்இருப்புகாட்டி இடப்பக்கமாய் அமர்ந்திருந்த குருவியின் அரு கில் பறந்து வந்த குருவி அமரவும் அமர்ந்திருந்த சிட்டுக்குருவி தன்
இன்மை காட்டி மேலேறிப் பறக்கிறது.

மேக வெளியெங்கிலுமாய் தன் இருப்புகாட்டி பறந்து சென்ற அதை வந்த மர்ந்த சிட்டுக்குருவி தொடர்கிறது.பறந்து சென்ற  மேகக்கூட்டம் இரண்டு  வெண்பஞ்சுப் பொதியாய் பேசிச்செல்கின்றன.அன்பும்,பிரியமுமாய்/

அன்பு என்ன,பிரியம் என்ன உயிரற்றமேகத்திற்கு எனஅறுதியிட்டுச்சொல்ல முடியா விட முடியவில்லை இவ்வேளையில்/

காற்றின் திசையில் நகர்ந்து சென்ற வெண்பஞ்சுக்கூட்டங்கள் இரண்டு ஒன்றைஒன்றுஉரசியவாறும் ஒன்றின் மீது ஒன்று படர்ந்தவாறுமாய் அவசரம் காட்டிசெல்கிறது.

கால்களற்ற அதன் பயணங்கள் எதை நோக்கி இருக்கும் எனதெரியாவிட்டா லும் கூட அதன் பயணம் தொடர்கிறதாகவே இருக்கிறது எவ்வித தடங்கலு மற்று/ 

எட்டு ரூபாய்,பத்து ரூபாய், பதினோரு ரூபாய்,,,,,,,,என்கிற கட்டண விகிதங்க ளில் இருக்கிற பயணச்சீட்டெல்லாம் வாங்காமல் கண்டக்டரிடம் சில்லறை பாக்கிக் கேட்காமல் எந்த வித கூட்ட நெரிசலுமற்று போக்குவரத்து விதிக ளும் ,போக்குவரத்துகாவலர்களும் அல்லாமல் கடந்து போகிற அதன் இருப்பு நன்றாகத்தான் இருக்கிறது.அதுவும் ஒன்றன் பின் ஒன்றாய் பரந்து சிட்டுக் குருவியின் கைபிடித்தவாறே/

கண்களும் வாயும் மட்டுமே உருவமாய் தெரிந்த ஒற்றை மேகம் ஒரு குருவி யையும், காதுகளும் வாயுமாய் உருபட்டுத்தெரிந்த இன்னொரு மேகம் இன் னொரு குருவியையும் கைபிடித்துச்சென்றாவாய்/

இப்படி கைபிடித்துச்செல்கிற மேகங்கள் மேலேயே அப்படியே வானத்திலே யே கரைந்து போகக்கூடும். அப்படி கரைந்து விடுகிற அல்லது மறைந்து போகிற மேகங்கள்குருவிகளை எங்கே விட்டுவிட்டுச்செல்லும்?என்பது மிகப் பெரிய கேள்வியாய் எழுந்து நிற்க விலை நிலங்களாகிப்போன விளைச்சலற்ற விளைநிலங்களின் கரட்டுப்பரப்பின் மீது  ஒட்டிய வயிறுடனும்,தாகம் எடுத்த தொண்டையுடனுமாய் பறந்து திரிந்து இரை தேடுகிற அவலத்தைச்செய்யும் என்பதே பதிலாய் உருவெடுத்து நிற்கிறது இங்கு/

கொட்டுகிற மழையிலும்,வெயிலிலும்,பனியிலும்,காற்றிலுமாய் காய்ந்து உருத் தேய்ந்து போன விவசாயி தன் பிள்ளைகளை நேசிப்பது போல் வயலையும் தோட்டம்,காடுகளையும் நேசித்து உழுது விதைத்து,தண்ணீர் பாய்ச்சி,களை எடுத்து அவற்றை பாதுகாத்து அறுவடை செய்து களத்தில் கொணர்ந்து சேர்த்து பலன் எடுக்கையில் விளைவித்தபொருளுக்கு விலை கிடைக்காது போகிற அவலத்தை சந்திக்க நேரிடுகிற விவசாயி தன் விலை நிலத்தை
விளைநிலமாக்கிஅதற்கே காவலாய் அமர்ந்து விடுகிற கொடுமை நாட்களின் நகர்வுகளில் காண நேர்கிறதுதானே?,,,,,,,,என்கிற அவலம் நிறைந்த சிந்த னையும் அவலமும் மேலிட தன் இன்மை காட்டி பறந்து சென்ற சிட்டுக் குரு வியை பின் தொடர்ந்த மற்றொரு குருவியும் அதை நெருக்கி இறகுரசிப் பறக்கிறது. அத்துவான மேகவெளியில்/

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விவசாயி நிலை என்று தான் மாறுமோ...? எல்லாவிதத்திலும் துன்பம் தான்...

விளைநிலம் விலைநிலமாக மாறிக் கொண்டிருப்பதும் வேதனை...

Yaathoramani.blogspot.com said...

குருவி பார்த்ததும் அதன் தொடர்ச்சியாய்த்
தொடர்ந்த சிந்தனைகளை அதன் போக்கிலேயே
போகவிட்டு அதைப் பதிவு செய்த விதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி ரமணி சார்.வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைகும்,கருத்ததுரைக்குமாக/
விளை நிலங்களை விளை நிலங்களாய்
மாற்ற சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும்,
பருவமழை பொய்த்துப்போவது மட்டுமே
காரணமில்லை.
அது ஒரு காரணம் .அவ்வளவே/

கரந்தை ஜெயக்குமார் said...

சிந்தனைகளை அதன் போக்கிலேயே விட்டு பதிவு செய்த விதம் அருமை நண்பரே
த.ம.4

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/