8 Jan 2014

சிதறல்,,,,,,


தரையில் சிதறியிருந்த
கடலை மிட்டாய் துகள்களின் மீது
அமர்ந்தவனை எப்படி எழுப்ப?
என்ன சொல்லி தள்ளிஅமரவைக்க?
கடலை மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
வந்திருந்தவனின் வருகை
தவிர்க்க இயலாததாகிப்
போகிறது.
கடிபட்டமிட்டாயின் துண்டை
தரையிலிருந்து
எடுத்தபோதுதான் கவனித்தேன்.
வந்திருந்தவன் கண்ணன்.
பலசரக்கு வியாபாரம் செய்பவன்.
மாதம் முழுவதற்குமாக
முதல் மூன்று தேதிகளுக்குள்ளாய்
சரக்குப் போடுபவன்.
வரும்பொழுதே தாமத்திற்க்கு
வருந்திக் கொண்டேதான் வந்தான்.
சரக்குகளை இறக்கி வைத்து விட்டு
சிட்டை வாசித்து சரிபார்த்து விட்டு
கிளம்புகையில்தான் சொன்னான்.
"இனிமேல் நீங்கள் கடலைமிட்டாய் சாப்பிட்டுக்
கொண்டிருக்கையில் வரமாட்டேன்" என.

8 comments:

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

"இனிமேல் நீங்கள் கடலைமிட்டாய் சாப்பிட்டுக்
கொண்டிருக்கையில் வரமாட்டேன்" என.
கவிதை மிக நன்றாக உள்ளது..வாழ்த்துக்கள் இறுதியில் சொன்னது அருமை...
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

கண்ணனுக்கு அருமை தெரிகிறது...

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்.
நன்றி தங்களதுவருகைக்கும்கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

கடலைமிட்டாய்
அந்தக் கால நினைவுகளை மீண்டும் ஞாபயகப் படுத்திவிட்டீர்கள்
நன்றி நண்பரே
த.ம.4

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
குறிப்பாக முடித்தவிதம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/