21 Feb 2014

வெளிச்சக்கோடு,,,,இடுப்பும், தலையும் அவளது. குடங்கள் யாரது எனத் தெரியவில்லை
தண்ணீருடன் தலையில்ஒன்றும், இடுப்பில்ஒன்றுமாய் தூக்கி வைத்துக்கொண்டுஅவள்எட்டெடுத்துவைக்கிறஒவ்வொருஅடிக்குமாய்
குடத்திலிருந்து அலம்பி,அலம்பி சிதறித்தெரிக்கிற தண்ணீர் துளிகள் மென்மழை தூரல்போல்அவள்மீதும்அவளதுபுடவை மீதுமாக பட்டுத் தெரித்துதரைதொடுகிறது.
தரை தொட்ட தண்ணீரை உள்வாங்கி உறிஞ்சிக்கொண்டமண்ணுக்கு
எவ்வளவு தாகம் என தெரியவில்லை, பார்த்தகனத்தில்தண்ணீராய் இருந்தது மண்குடிக்க உள் போனது எப்படி என எண்ணத் தோணுகிற வாஸ்தவத்தைசற்றேதள்ளிவைத்துவிட்டுபார்த்தால்வழிந்ததண்ணீ ரில்பட்டுமின்னியவெயில்ஏதோசொல்லிப்போவதாகவும்,அழகுகாட் டி நிற்பதாகவும்தெரிகிறது.
முனிசிபல்தண்ணீர் வருகிற தினங்களில் அவளுக்கு பிரச்சனையில் லை.
அது அல்லாத நாட்களில் குடங்களை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இட மாக அலையவேண்டியிருக்கும்.
சுப்புலட்சுமியக்கா வீட்டுக்கு சரசக்கா வீட்டுக்கு,மல்லிகா டீச்சர் வீட் டுக்கு,போலீஸ்க்காரர்வீட்டுக்கு,நடராஜன்சார்வீட்டுக்கு,சுந்தர்ராஜ் சார் வீட்டுக்கு, தங்கம் மேடம் வீட்டுக்கு,,,,,,என அவள் அன்றாடம் தூக்கி சுமக்கிற தண்ணீரின் வரிகள் அவளது உடலில்வழித்து கோடு வரைகிற நேரம் அவளது எண்ணம் வேறொன்றாய் இருக்கிறது.
லாட்ஜ் அய்யாகிட்ட கேட்டு பத்துக்கொடம், ரயில்வே கேட்டுக்கிட்ட இருக்குற ஆஸ்பத்திரியில சொல்லி பத்து கொடம்,அப்புறம் வாட்டர் டேங்குலபோனஒருபத்துகொடம்,மத்தாயுபங்களாவுலபத்துகொடம்,,,,
,,,,எனஅன்றாடம்அவள் நாற்பது குடங்கள்வரைதண்ணீர்சுமக்கிறாள். அனைவரது வீட்டுக்குமாக சேர்த்து.
குடத்துக்கு இவ்வளவு என பேச்சு, அல்லது கணக்கு.பிளாஸ்டிக் குடம்தான்.அதுஇருக்கும்முப்பதுகுடங்களுக்கும் மேலாக/
வீட்டுக்காரர்கள் கொடுக்கிற காசில்தான் இவள் தண்ணீருக்கும் காசு கொடுத்து விட்டு தனக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் பிடிக்கிற சில இடங்களில் கரிசனப்பட்டு காசு வாங்க மாட் டார்கள் சமயத்தில்/
இதைவீட்டுக்கார்கள்கேள்விப்பட்டோமோப்பம்பிடித்தோவிட்டால் போதும்,மறுநாள்அவள்குற்றவாளிக்கூண்டில்நிறுத்தப்பட்டுவிசாரி
க்கப்படுவாள்.

"அதான்ஓசியாதண்ணிகுடுத்தாங்களாம்லஅந்தயெடத்டுலஅப்புறம் என்னடிஎங்ககிட்டகாசுவேண்டிக்கெடக்குகொடத்துக்குஇவ்வளவுன்னு" எனவாய்க்கு வந்த படி பேசுவார்கள்.
“இதுகஇப்பிடித்தான்க்காஎவ்வளவுசெஞ்சாலும்நன்றிவிசுவாசம்இருக்  காது.
இதுலசெலவுக்கில்ல,வீட்லகஷ்டம் உதவி செய்யிங்கண்ணு பொல ம்பல் வேற,
“இவ மினுக்கிக்கிட்டு,மினிக்கிக்கிட்டு அந்த லாட்ஜ்ப் பக்கம் போகும் போதேதெரியும்க்கா.இந்தமாதிரிஏதாவதுஏடாகூடமாசெய்வான்னு.இப்ப
அது சரியாப்போச்சுஎனவரம்பு மீறிய வார்த்தைகளும், செல்லரித்து புழுப்பூத்துப்போனசொற்களுமாய் வந்து காதில் நாராசமாய் துளைக் கிற வேளைகளில்மனம்பொறுக்கமாட்டாமல் சம்பந்தப்பட்டவர்களு டன் சண்டைபோட்டிருக்கிறாள்.
சண்டைபோட்டமறுநாளிலிருந்துதண்ணீர்குடங்கள்அவர்களது வீட்டுக்குசுமக்கவேண்டிய வேலையிருக்காது அவர்களது வீட்டி லிருந்து வருகிற காசு நின்று விடும் என்கிற போதும் கூட/
பின்னே எவ்வளவுதான் பொறுப்பது இவர்களது பேச்சை,அவள் முன் பே சொல்லியிருக்கிறாள் மிகவும்நாகரீகமாகவும்,நாசுக்காகவும்.
“அம்மா நான் ஒங்க வீடுகளெல்யெல்லாம் தண்ணியெடுத்து வைக்கி றது சரிதாம்மா,ஒங்கக்கிட்ட கைநீட்டி அதுக்காக காசு வாங்கு றேங் குறதும் நிஜம்தாம்மா,அதுக்காகஎன்னையஏளனமா பேசிப்புடாதிங்க ம்மா,மனசு தாங்காதும்மா எனக்கு.தாயில்லாம வளந்த புள்ள நானு. எனக்குகூடப்பொறந்தவுன்னுஅக்கா,தங்கச்சிங்கயாரும்கெடையாது. இந்த வீடுகள்ல ஏன் அம்மா வயசுல இருக்குறவுங்களும்,ஏங்கூடப் பொறந்த பொறப்புகளா நான் நெனைக்கிறவுங்களும் இருக்காங்க, பாத்து கொஞ்சம்சூதானமாபேசிங்கன்னால்லேநான் புரிஞ்க்கிருவே ம்மா”என/
ஆனால்அதையும்மீறிஇப்படிபேச்சுகள்சாக்கடையாய்வந்து வழிந்
தோடுகிறநேரங்களில்வேறுவழிதெரியாமல்சிலிர்த்தெழுந்துவிடுகி
றாள்.
அந்தமாதிரிசமயங்களில்காம்பவுண்டேவந்துஅவளைசமாதானம் பண் ணும், பாதி முறைப்புடன்,மீதி முனைப்புடனுமாய்/
அவளுக்குத்தான்தெரியும்இந்தவீடுகளுக்கெல்லாம்தண்ணீர்பிடித்து
கொண்டு வந்து சேர்ப்பதற்கு அவள் படுகிற பாடு.
எத்தனை  பேச்சு,எத்தனைஏளனம்,எத்தனை இழிவு உடம்பை கிழித்து ஊடுருவுகிற எத்தனை பார்வைகள்,,,,,,,,,,,,,,என இன்னும் இன்னுமான அத்தனையையும்மீறி அவள்அங்கு நிலை கொண்டு பார்க்கிற வேலைஅவ்வளவு சுலபமானதாய் அவளுக்கு இருந்ததில்லை.
ராமசாமிரோட்டின்முக்கிலிருக்கிறடீக்கடையிலிருந்துராதாகிருஷ்ணன்
காம்பவுண்டில்இருக்கிறவரிசைவீடுகள்வரைஅவள்தான் குத்தகை.
டீக்கடைகளுக்குதண்ணீர்சுமப்பதில் ஒருசின்னசௌகரியம்.ஓசியில் வடை வாங்கிக்கொ ள்ளலாம்,வீட்டில் பிள்ளைகளுக்கு ஆகிக் கொள்  ளும்,சாப்பாட்டுக்கும் ஆகிப்போகும்.ஓசியாக கிடைக்கும் டீயில் சமயத்தில் பசியாறிக்கொள்ளலாம்.
காலையில்இரண்டுகுடங்கள்.தேவையேற்படுகிறநேரங்களில்தேவை
ப்படுகிறவீடுகளுக்குமாலை நேரங்களிலும்அவள்தண்ணீர்கொண்டு  வந்து தருகிறாள்.
மெலிந்து,சிவந்தமேனியில்வலுக்கட்டாயமாக வீற்றிருக்கும் அந்தக் குடங்களைதினசரிகாலையிலும்,மாலையிலுமாகஅவள் சுமந்தாளா அல்லது குடங்கள்அவளைசுமந்ததா எனதெரியாதஅளவிற்குஇருந்த அவளது வாழ்வில் இடுப்பும் தலையும் அவளது. ஆனால்அவள் சுமக் கிற குடங்கள் யாருடையது எனத்தெரியவில்லை/

12 comments:

 1. வணக்கம் ஐயா
  குடம் சுமக்கும் பெண்ணின் இடுப்பில் இருக்கிற குடத்திலிருந்து வழிகிற நீரின் காட்சியை இவ்வளவு அழகாக யாராலும் வர்ணிக்க முடியாது. கனமான கதைக்கருவில் உங்கள் எழுத்து நடையை ரசித்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சி. வழக்கம் போல் டீ க்டையும் கதையில் வந்து அமர்ந்து கொண்டது சிறப்பு. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாண்டியன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. வணக்கம் பாண்டியன் சார்.
  தங்களது வலைப்பக்கம் கிடைக்கவில்லை,
  தங்களது தொடர்பு எண்,ப்ளீஸ்/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   எனது எண் 9698621766 (ஏர்செல்)

   Delete
 3. வருந்த வைக்கிறது அவர்களின் நிலை - அப்படியே கண் முன் தெரிகிறது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. மிகவும் அருமை...
  குடமும் குடம் தூக்கும் பெண்ணும் உங்கள் வரிகளில் அழகாய் வாழ்ந்திருக்கிறார்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சேகுமார் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. காட்சியைக் கண் முன்னே கொண்டுவந்து காட்டியிருக்கிறீர்கள்
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. Replies
  1. நன்றி சார் வாக்களிப்பிற்கு/

   Delete