23 Feb 2014

புகைவெளி,,,,,,,,,

ண்டகனாஎதுவாகவாயினும் இருந்துவிட்டுப் போகட்டும்.அது பலி க்குமா அல்லது நிஜமாகி உருத்தரித்து நிற்குமா என்பதே இந்நேரத் தின் முக்கிய கேள்வியாக/

எங்கிருந்துவந்தான்எனத்தெரியவில்லை.எழுந்துவருகிறான் தூக்கத் திலிருந்துவிழித்தவனாக/

நீண்ட வீதி எதிரும், புதிருமாய் அடுக்கப்பட்டிருந்த வீடுகள், நடமாடி ய மனிதர்கள் இன்னும் வீதிகளில் நின்ற மின் கம்பங்களில் கண் விழி த்துக் கொண்டிருந்த மின் விளக்கு, பறந்து கொண்டிருந்த  விட்டில் பூச்சிகளும்,நிறைய கொசுக்களும்.

வீதி,விளக்கு,விட்டில் பூச்சி,கொசுக்கள்,மனிதர்கள்,,,எல்லாம் தாண்டி டீக்கடைஏதாவது தட்டுப்படுகிறதா கண்களுக்கு என்கிற ஆவல் மிக விழிகளை கழட்டி அனுப்புகிறான்.தகவல் சேகரித்து வரச்சொல்லி/

சென்ற விழிகள் சடுதியில் திரும்பி வந்து “இதோ பக்கத்தில்தான் இரண்டு டீக்கடைகள் அருகருகாமையாக அமர்ந்திருக்கின்றன, அதில் தொந்தி பெருத்த மாஸ்டர் ஒருவரும் ஒல்லியாய் கை நரம்புகள் புடைத்துத்தெரியஇன்னொருவரும் டீஆற்றிக்கொண்டிரு க்கிறார்கள் பிஸியாக.டீயின் ருசியையும்,விலையையும் பற்றி தகவல் இல்லை.ஆனால்முதலாவதுகடையில் நன்றாக யிருக்கிறது டீ என அங்கு டீக்குடித்துக்கொண்டிருந்தவர்களின் பேச்சிலிருந்து அறிந்துகொண்டேன்,வாருங்கள்போகலாம்”எனச்சொன்னத கவலை கைபிடித்துஒன்றாய்,இரண்டாய்க்கூடஅல்ல,நான்கைந்தாய்எட்டெடு த்து வைத்த எட்டின் வேகத்துடன் சென்று கடையின் வாசல் மிதிக் கிறான்.

இரண்டுமேடீக்கடைகள்தான்.அதென்னதுஎனதெரியவில்லை.அளவெ டுத்தும்,கத்தரித்துமாய் வெட்டி ஒட்டியது போல ஒரே மாதிரியாய்/

அதற்காககடையின்தோற்றமும்அங்கிருந்தபொருட்களும்கூடஒன்றாக
வாஇருக்கவேண்டும்?
இரண்டு கடைகளிலும் இருந்த டீ மாஸ்டர்களின் உருவஒற்றுமை தவிர்த்துவேறோன்றுமில்லைபெரிதாக/

அங்கேயும் பாய்லர்,இங்கேயும் பாய்லர். அங்கே அடுப்பு மீதிருந்த பால்ச்சட்டியின் நிறமும்,இங்கேயிருந்த பால்ச்சட்டியின் நிறமும் அள வும் அடுப்பும்ஒரேமாதிரியாய்/(சட்டியினுள் இருந்த பாலின் அளவு தெரியவில்லை)அங்கே கிடைத்த சிகரெட்,பீடிகள் இங்கேயும் கிடைத்தன. “சுருட்டுக்கள் விற்பது இல்லை” இங்கே என இரண்டு கடை வாசலிலுமாய் எழுதி ஒட்டியிருந்தார்கள்.அந்தப் பேப்பர் பனியில் நனைந்து ஈரம் பாரித்திருந்தது.
பாட்டிலுக்குள் இருந்த கடலை மிட்டாய், கோகோ மிட்டாய்மற்றும் இன்னபிறவைகளுடன் வாழைப்பழத்தார்களுமாய் தொங்கித் தெரிந் த ன கடைகள் இரண்டிலுமாய்/

வாழைப்பழத்தாருக்குப் பின்னால் சிரித்தகடை ஓனரின் சிரிப்பு ஒரு கிலோ மீட்டருக்கு மேலாகவும் கேட்கும்போல/ முதலாமவருக்கு சற்றும்இளைப்பில்லாததாய்இரண்டாமவரின்சிரிப்பும் பேச்சும்/

முதலில்ஒருகடையைஅந்தஇடத்தில் பதியனிட்டு விட்டு அதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து பக்கத்தில் ஊன்றி வைத்திருப்பார்க ளோ?முதல் கடையில் குடித்த டீக்கும்,வாங்கிய வடைக்குமாய் இர ண் டாவது கடையில் காசு கொடுக்காமல் இருந்தால் சரி.

முதலில்முகம்கழுவிஒருடம்ளர்தண்ணீர்குடிக்கவேண்டும்ஜில்லென/  குளிரானாலும் பரவாயில்லை என்கிற நினைப்புடன் முதலாவது கடையின்வாசலிலிருந்துபிளாஸ்டிக்குடத்தில் ஒரு டம்ளர்தண்ணீர் மோந்து கொண்டு ஒரு ஓரமாய் செல்கிறான் முகம் கழுவுவதற்கு/

டீக்கடை,கடைகளின் வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்ச்,அதில் அந்த நேரத்திலும்நிறைந்து அமர்ந்திருந்த மனிதர்கள், அவர்களை சற்றே கடந்த போது கடைகளின் முன்பாய் நின்ற ஆலமரம் அதன் மேட்டில் அமர்ந்து இன்னமும் தூக்கம் கலையாமல் இருந்த மனி தர்கள் என இவர்களைத்தாண்டிகையில்பிடித்திருந்ததண்ணீர் டம்ள ருடன் நகர்ந்து அவன் போன ஓரம் பழுதடைந்து நின்ற கோட்டை ச்சுவராய் காட்சி தருகிறது.

கோட்டைச்சுவரின் ஓரம் ஈரம் பாரித்தும் கழுதைகள் நான்கைந்து மேய்ந்து கொண்டுமாய்/
அந்நேரம்அந்தக்குளிரில்அவைகளுக்குஎன்னகிடைத்துவிடும்மேய்ச் ச லுக்குஎன்கிறகேள்வி மிக முகம் கழுவலாம் என ஓரிடம் நோக்கி குனிந்த போது அங்கோர் கழுதை முளைத்துகாட்சிப்படுகிறது. “சரி எத ற்கு கழுத வம்பு” என இன்னோர் இடம் நோக்கி நகர்ந்த போது அங்கேயும் அது புதிதாய்/

இப்படிமாறி,மாறிஆகிப்போனநான்கைந்துஇடங்களைத்தாண்டியபொழுது
விடாமல்பிடிவாதமாய்அவன்முன்தோன்றியகழுதைகளில் ஒன்றை எட்டி உதைக்கிறான்ஜாக்கிரதையாய் ஒதுங்கி நின்றவாறு/

பதிலுக்கு அதுவும் எட்டி உதைத்த உதைக்கு இவன் விலகிய போது கையிலிருந்த டம்ளரில் இருந்துநீர்சிதறி விடுகிறது. மிச்சமிருகிற நீரில் அரைகுறையாக முகம் கழுவி விட்டும்,மீண்டும், மீண்டுமாய் கழுதைகள் தோன்றாதஇடமாய் பார்த்து ஒண்ணுக்கு இருந்துவிட்டு டீக்கடை நோக்கி வருகிறான்.ஜில்லென ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு சாவகாசமாய் அமர்ந்து ஒரு டீ சாப்பிட வேண்டும்.

4 comments:

 1. கனா வித்தியாசம்தான்!

  ReplyDelete
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. வணக்கம் சுரேஸ் எஸ் சார்.
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete