27 Feb 2014

வேரூன்றி,,,,,

         ஆழ ஊன்றிய இரும்பு சூலாயுதம்ஒன்று அங்குமுளைத்து நின்று   
             ஆலமரத்தின் அடியில்காட்சி தருகிறது.

அதன் பின்புலமாய் மரத்தில் ஒற்றையாய் விரித்து தொங்க விடப் பட்டிருந்த மஞ்சள் துணி, சூலாயுதத்தின் மூன்று முனைகளிலுமாய் குத்தப்பட்டு நின்ற எலுமிச்சம் பழம்.

இப்பொழுதுதான்இரண்டுநாட்களுக்குள்ளாககுத்தப்பட்டிருக்கவேண்டும்.
இன்றுசனிக்கிழமைநேற்றுவெள்ளி.கும்பிட்டசாமிக்குபக்தியின்அடை யாளமாக குத்தியிருக்க வேண்டும்.
குத்தப்பட்டிருந்த பழங்களின் முகம் வாடாமலும் அதில் பூசித்தெரிந்த குங்குமப்பொட்டும் இன்னும் அழிந்து தெரியாமல் சற்று பச்சையா கவே/

சூலாயுதத்தின்பின்னால்மரத்தில்விரித்து கட்டப்பட்டிருந்த மஞ்சள்த் துணி நான்கு பக்கமும் சிவப்பு நிற பார்டர் காட்டி/


மஞ்சள்த்துணிக்கு மேலாக ஒரு அடி அல்லது ஒண்ணரை அடி இடைவெளி விட்டு மரத்தின் மேலிருந்து தொங்கிய பிளக்ஸ் பேனர் சிவப்புநிறஎழுத்துக்கள்காட்டிகடையின் முகவரியையும்,கடையின் பெயரையும் தாங்கிச்சென்றது.கூடவே எங்களிடம் பிளக்ஸ் வேலை கொடுத்தால் விரைவான டெலிவரியும்,குறைந்த செலவுமே என சொல்லியது.

பேனருக்கு மேலாக காற்றிலசைந்த மரத்தின் இலைகள் கீழே தரை யில் படர்ந்திருந்த மரநிழல் அசைத்தது.

தூசியும், அழுக்குமாய் நெடித்தோங்கி உயர்ந்து பரந்து நின்ற இலை கள் மரத்தின் பரப்பளவு காட்டியும்,தன் ஆகுருதி சொல்லியுமாய்/


நான் அங்கு போன நேரம் காலை 11.30 இருக்கலாம். வாட்சைப் பார்க் கவில்லை.(இதை வேறு பார்த்துக்கொண்டு எதற்கு என/)

நண்பர் வேல்முருகன் அவர்களின்அன்புமேலிட்டஅழைப்புஅது.மன தில்தாங்கிச்செல்கிறேன்,“ஒரு கூட்டம் வாருங்கள்,இலக்கிய பேசவு ம் மனிதம் தெரிந்து கொள்ளவுமாய்” என உரைத்த அவரது சொல்லின் நுனி பற்றி அவ்விடம் நோக்கி.

கூட்டம்நடந்தஇடமாய்கோட்டிட்டு காட்டப்பட்டிருந்தது ஒரு ஷாப்பி ங் காம்ளக்ஸின் அண்டர் கிரண்டவுண்டாய் இருந்தது.

எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த அங்கு இடமில்லை, அவ்வ ளவு பிஸியாக இருந்தது.

கிடைத்த இடைவெளியில் எனது வண்டியை நிறுத்தி இட்டு நிரப்பி விட்டு கூட்டம் நடக்கிற இடம் நோக்கி செல்லலாமென்றால் அதற்கு வாசலாய் சூலாயுதம் தாங்கிய மரத்தின் முன் வெளியே காணப் படுகிறது.

அங்கு நிறைந்திருந்த சைக்கிள்களயும்,வாகனங்களையும் தாண்டித் தான் உள்ளே போக வேண்டுமோ? தாண்டி என்றால் ஏறி மிதித்தா என்ன? இல்லையில்லை அப்படியெல்லாம்வேணாம்எனச் சொன்ன உள்மண்டையின்யோசனைசூலாயுதம் ஊன்றப் பட்டிருந்த மரத்தின் முன் சைக்கிள்களும்,இரு சக்கரவாகனங்களும் நின்றது போக மிச்ச மிருந்த சின்ன வெளியை நடைபாதையாக்கி காண்பிக்கிறது.

ஆயிரந்தான் இருந்தாலும் சூலாயுதம் ஊனப்பட்டிருக்கிற வெளி சாமி குடிகொண்டுள்ள இடமல்லவா?அந்தஇடத்தை செருப்புக்காலுடன் கடப்பதென்றால் கொஞ்சம் சங்கடமாகவே/
ஆனாலும்சங்கடம் சுமந்த மனதுடன் காலடி எடுத்து வைக்கையில் கவனிக்கிறேன்.


சூலாயுதம் நின்ற மரத்தின் வலது புறமாய் உள்நுழைந்து சென்ற இட த்தில் கட்டப்பட்டிருந்த காம்ளக்ஸினுள் டாஸ்மாக் கடையையும், அதன் முன் குழுமி நின்ற மனிதர்களையும்/

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதுசரி... அருள் வர வேண்டும் இல்லையா...? கொடுமை...

கரந்தை ஜெயக்குமார் said...

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது டாஸ்மாக் மட்டும்தான்

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

மகிழ்நிறை said...

சில நேரங்களில் பல மனிதர்கள் !!

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல்நடராஜன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

குட்டிக் கதையாய் எழுதிவிட்டீர்கள் ஒரு நரகவழி சிறுகதையை.