Feb 23, 2014

நட்பு,,,,,,



               நண்பர்கள் புடை சூழவே

இருந்திருக்கிறது அவனது உலகம்,
பத்தாம் வகுப்புப்படிக்கிற அவனுக்கு
இப்படியானதொரு பாக்கியம் வாய்த்திருப்பது
எங்களுக்கெல்லாம் சற்று பெருமையாகவே/
காலை பள்ளிபுறப்படுகிற பொழுதிலிருந்து
மாலை விளையாடி முடித்து வருகிறவரை
அவனை நண்பர்களும் தோழர்களும்,
உடன் படிக்கிறவர்களுமே
அவனை தீர்மானிக்கறவர்களாக/
இதில் எப்பொழுதாவது
தாய் தந்தையின் பங்கும்,
சகோதர,சகோதரியின் பங்கும்
சேர்ந்தே இருந்திருக்கிறது.
டேய் நண்பா,டேய் கண்ணா,டேய் தோழா,,,,,,,,,
என்கிற சொல்லாக்கங்களுடன்
வரையப்பட்டிருக்கிற அவனது உலகம்
எப்பொழுதுமே நண்பர்கள் சூழ்ந்தே/  

13 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    நண்பர் உலகம்.... எப்போதும்... மகிழ்ச்சிதான்...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் சார்,
      நன்றிதங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  2. நண்பர்கள் உலக்ம் என்பது எப்பவுமே சந்தோஷத்தைக் கொடுக்கும் உலகம்...
    அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சே குமார் சார்
      நன்றி தங்களது வருகைக்கும்,
      கருத்துரைக்குமாக/

      Delete
  3. எப்பொழுதுமே நண்பர்கள் - எப்பொழுதுமே மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்.
      நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  4. அழகான உலகம் அது.........

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் உஷா அன்பரசு அவர்களே,
      நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  5. நட்பே ஒரு கவிதை தானே!?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே/
      நன்றி வருகைக்கும்,.கருத்துரைக்குமாக/

      Delete
  6. நட்பின் பெருந்தக்க யாவுள
    நன்றி நண்பரே
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
    2. நன்றி வாக்களிப்பிற்கு சார்/

      Delete