வானத்திற்கும் பூமிக்கும்
நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளாய்
பெய்து கொண்டிருக்கிறது மழை.
மென்கோபம் காட்டி
வீசிக்கொண்டிருக்கிறது காற்று.
மேடு பள்ளம் தெரியாமல்
கட்டிக்கிடக்கிறது தண்ணீர்.
சுழன்று அடித்த காற்றுக்கு
முகம் காட்டி பறந்து
பறக்கிறது தண்ணீர்.
இவைகளை பிளந்து செல்கிறது கார்.
பின்னாலேயே இரு சக்கர வாகனம் ஒன்றும்.
எதிர் சாரி கடையில்
டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிற ஒருவர்.
கோவில் நடை முன்
அன்னதானத்திற்காய் நிற்கிற கூட்டம்.
கடைகளின் கூரையினுள்
மழைக்கு ஒதுங்கி நிற்கிற மனிதர்கள்.
அதில் காய் கறிக்கூடை
நனைந்து விட்டதாய்
கவலை கொள்கிற ஒருத்தி.
சற்றே தள்ளியிருந்து வரும்
சிகரெட் புகைக்கு முகம்
சுளிக்கிற மற்றொருத்தி/
ஆள் நடமாட்டமற்ற சாலை.
மழையை பார்க்க வேண்டும்
என வீட்டினுள்ளிருந்து
அடம் பிடித்தழுகிற சிறுமி.
இப்போது வெளியிலும்
வீட்டினுள்ளுமாய் மாறி,மாறி
வெள்ளிக்கம்பிகள் நடப்படுகின்றன.
13 Mar 2014
குளிர்ச்சி,,,,,,,,
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
வெள்ளிக்கம்பிகள்...! ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ரசிக்க வைத்தன வெள்ளிக் கம்பிகள்...
அருமை அண்ணா...
கண்முன் மழைக்காட்சி அழகாக ...மழை எப்படி இருந்தாலும் ரசனையைத்தூண்டுகின்றது.நன்று
வணக்கம் சேகுமார் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கீதா எம் அவர்களே
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இறுதி வரிகள் அருமை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment