Showing posts with label கவிதை. பதிவுசமூகம்சித்திரம். Show all posts
Showing posts with label கவிதை. பதிவுசமூகம்சித்திரம். Show all posts

2 Jun 2017

வெறுமைதாங்கி,,,,,,,,,


வீடு வந்து சேர்ந்த  மாலையில்
சின்ன மகளும் பெரிய மகனுமாய்
மட்டுமே இருந்தனர் வீடு நிரப்பி/
அம்மா கடை வீதிக்கு சென்றிருக்கிறார்கள்.
அப்படியே கோவிலுக்கும் போய் வரத்திட்டமாம்/
மனம் நினைத்ததை தெய்வத்திடம்
கொட்டி வேண்டுவதற்காய்.
எனச்சொன்ன பெரிய மகனிடம்
கைப்பையை கொடுத்துவிட்டு
போய் வருகிறேன் அம்மாவை பார்த்து வர,,,,,/
எனக்கிளம்புகிறான்.
அம்மா சென்றிருக்கிற கடை வீதி
இங்கிருந்து ஆறுகிலோ மீட்டர்களை
எட்டித்தொடும்.
தவிர அவர்களிடம் கைபேசி கிடையாது,
அவர்கள் இருக்கும் இடம்எது என
தெரிந்தெடுத்துச் செல்வீர்கள்?
ஆகவே வாருங்கள் வீட்டிற்குள்ளாய்,
நான் எனது மென் கரங்களால் இளம் மனம் நிரம்பி
டீப்போட்டுத்தருகிறேன்.
குடித்துக்கொண்டு இருங்கள்
வரட்டும் அம்மா, என திரும்பத்திரும்பவுமாய்ச்
சொன்ன சின்ன மகளின் பேச்சை
மறுதலித்து விட்டுக் கிளம்புகிறான்.
மனம் நிறைந்த மனைவியின்நினைவுடனும், 
கண்கள் நிறைந்த எதிர்பார்ப்புடனுமாய்/

29 May 2017

சுவாதீனம்,,,,,,

No automatic alt text available.

ஜன நடமாட்டம் மிகுந்த சாலையில்
பைத்தியம் போல் தோற்றம் கொண்ட ஒருவர்
சாலையில் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தார்,
சாலையோரக் கடையில்
டீக்குடித்துக்கொண்டிருந்த என்னிடம்
ஓட்டதை நிறுத்தியவராய் வந்து
கையேந்துகிறார் பரிதாபம் காட்டி/

பரட்டைத்தலையும் இறக்கி விடப்பட்ட
அழுக்கு வேஷ்டியும்
சட்டையில்லா வெற்று உடலும்
அவரை பைத்தியம் என்றே உறுதி செய்கிறது.
அவரின் மேல் பரிதாபப்பட்டு நீட்டிய கையில்
கொடுப்பதற்காய் ஒரு பஜ்ஜியை வாங்கி
அவரது கையில் வைக்கிறேன்.
பஜ்ஜியைவாங்கிஅதை மேலும் கீழுமாய்
அது வைக்கப்பட்டிருந்த பேப்பருடன் பார்த்த அவர்
நான் வாங்கிக்கொடுத்த பஜ்ஜியை
வேகம் கொண்ட மட்டுமாய்
எனது முகத்தில் வீசி எறிந்து விட்டு
ஓடி அலைகிறார்,
ஜன நடமாட்டம் மிகுந்த சாலையில்/

19 Mar 2015

கல்தடுக்கி,,,,,

தவறில்லாமல்
வேலைபார்த்து வேண்டும்
நினைப்பில்தான்
தினசரி
அலுவலகம் கிளம்புகிறேன்.
எனது சொந்த ஊரிலிருந்து
ஆறாவது மாவட்டத்திற்கு
மாற்றலாகிவந்த நாளிலிருந்து
இன்றுவரை
பிள்ளைகளின்படிப்பு,
மனைவியின்உடல்நிலை,
சகோதரங்களின் நினைவு,
தாய்,தந்தையின் அந்திமம்,
என்னின் தனிமை,,,,,,,
எல்லாம் ஒன்று சேர
கொஞ்சம் கவனம்
திசை திரும்பிவிடுகிறதுதான்.
என்னையறியாமல் தவறும்
நேர்ந்து விடுகிறதுதான்.
என்ன செய்ய,,,,
அறியாமல் தவறு செய்வதும்
மனித செய்கைகளில் ஒன்றுதானே,,,,,/

20 Oct 2014

மறுபடியும்,மறுபடியுமாய்,,,,,,




நாய்கள் பெருத்த வீதிகளாக
உருமாறி காட்சிப்படுகிறது ஊர்.
வீட்டு மாடியில் ஒன்று,
பூட்டப்பட்டிருந்த கேட்டின்
அருகாமையாய் ஒன்று என
உருவம் காட்டி நின்று கொண்டிருந்த
நாய்களைப் பார்த்ததும்
தெருவில் கூட்டமாய் ஓடியவைகள்
சற்றே நிதானித்தும் அந்த வீட்டைச்
சுற்றிலுமாய் வட்டமிட்டுக்கொண்டு/
கருநிறத்தில் முடிகள் அடர்ந்து
வெள்ளை நிற வால் வைத்த நாய்
தன் பணி இரை தேடுவதும்,
பிற நாய்களுடன் சேர்ந்து சுற்றுவதுதான்
என்பதாய் சொல்கிறது.
செந்நிறத்தில் நாக்கை தொங்க விட்டுத்
திரிந்த நாய் வெள்ளை நாயின்
உடல் உரசிக்கொண்டு/
சாம்பல் நிறத்திலும்,கருஞ்சாந்து கலரிலுமாய்
ஓடித்திரிந்தவை வீட்டின் சுவர் உரசி
முகர்ந்து திரிந்தவாறும்,போக்குக்காட்டி ஓடியவாறும்/
அடைபட்டுக்கிடக்கிற இரண்டும்
சுற்றித்திரிந்த நாய்களின் சுதந்திரத்தை
பெற வேண்டியும்,அதை தெரிந்து
ஏற்றுகொள்ள வேண்டியுமாய்
ஆசைப்பட்டு பேச அவைகளை
அருகில் அழைக்கின்றன.
இதைப்பார்த்து விட்ட வீட்டுக்காரர்
அவரிலும் வளர்ந்த குச்சியொன்றை
எடுத்து வீட்டைச்சுற்றித்திரிந்த
நாய்களை விரட்டுகிறார்.
பறி போனதன் சுதந்திரம்வீதியில் கிடக்க
சோகம் கப்பிய கண்களுடன்
கேட்டில் கட்டப்பட்டிருந்த நாய்
இழுத்துச்செல்லப்படுகிறது வீட்டினுள்ளாய்
மறுபடியும்,மறுபடியுமாய்/

13 Sept 2014

இலக்கு,,,,,,



                  சமீப நாட்களாய் நடு இரவில்  
                  வீட்டின் கதவை பிராண்டுகிற 

பூனை கருச்சாம்பல் கலரில் 
முறைத்துப்பார்த்து நிற்கிறது. 
விரட்டும் போது போய்விடுவதும் 
திரும்ப வந்து நடு இரவில் 
கதவை பிராண்டுவதுமாய் 
இருக்கிற அது தனித்து இருக்கிறதா 
அல்லது அதற்கு ஜோடி உண்டா 
தெரியவில்லை. 
அதன் வேலையே நடு இரவில் 
வந்து கதவைப்பிராண்டுவதும் 
விரட்டியதும் ஓடுவதுதானா?
 வேறேதும் தனித்த திறமைகள் 
அதனிடம் உள்ளனவா தெரியவில்லை. 
எதாக இருந்தாலும் அதன் அந்நேரத்தைய 
தேவை வேறென்னவாய் இருக்கப்போகிறது. 
இறுகிமூடப்பட்ட உள்ளங்கையில் 
வைக்கப்பட்டிருக்கிற 
ஒருகவளம் உணவைத் தவிர/

22 Aug 2014

அலை,,,,,,,



   

பள்ளி செல்கிற பக்கத்து வீதி

பெண் பிள்ளையைப் பார்த்ததும்

வெளியூர் விடுதியில் தங்கி

கல்லூரி பயில்கிற எனது மகளின்

ஞாபகம் வருவது

தவிர்க்க இயலாததாகவே என்னுள்/

11 Jun 2014

சோத்துப்பருக்கை,,,,,,,,,,,,

 அள்ளித்தின்ற ஒரு கவளம் சோற்றினுள் 
புதைந்து தெரிந்த முகங்கள்
 ஈரம் சுமந்ததாயும் வாஞ்சைமிக்கதாயுமாகவே/
உழுதவர்கள்,விதைத்தவர்கள்,
அறுவடை செய்தவர்கள்
வாரி எடுத்து களத்தில் சேர்த்தவர்கள்
அதை  நெல் மணிகளாய் சேர்த்தெடுத்தவர்கள்
என அத்தனை பேரின்
வியர்வை ஓடி பிசுபிசுத்த கரங்களும்
உழைப்பு மிகுந்த உடலுமாய்
சேர்த்து முழுதாய் உருத்தெரித்து,,,,,,,,,,
நான் அள்ளித்தின்கிற சோற்றில்
புதைந்து தெரிந்த முகங்கள்
 ஈரம் சுமந்ததாயும், வாஞ்சைமிக்கதாயுமாகவே/