25 Mar 2014

சுக்காங்கல்லு,,,,,மஞ்சுவிரட்டுகேள்விப்பட்டிருக்கிறோம்.சரி.அதென்னபொய்விரட்டு?  இருக்கிறதே/

நான் இரு சக்கர வாகனத்தில்வந்துஇறங்கியநேரம்மதியம்மணி ஒன் றை  தொட்டுக் காண்பித்தது.

1.01 ன்னும் அல்ல,12.59 ம் அல்ல. மூடப்பட்டிருந்த வட்டக் கண்ணாடி க்குள் இருந்த தங்க நிற டயலுக்குள் சின்னமுள்ளும், பெரிய முள்ளும்ஆட்காட்டிவிரலையும்,நடுவிரலையும்விரித்துக்காட்டியது  போல நின்றது.

வீட்டின்பக்கவாட்டுவெளியில்சுவரோரம்சற்று தள்ளி நின்ற வேப்ப மரநிழலின் படர்வில் வா கனத்தை நிறுத்தி விட்டு ஏறிடுகையில் வீட்டின்சாக்கடைநீர்செல்வதற்காய்தோண்டித்திருந்தவாய்க்காலை
கிளறிக்கொண்டிருந்த கோழிகள் விரட்டுவதற்காய் சூ,,,,,என குரல் கொடுக்கிறேன்.

லேசாக நகர்வது போல பாவனை செய்து விட்டு திரும்பவும் தங்கள து கடமையில்கண்ணும்கருத்துமாயும் இருந்தகோழிகளை“சூச்சூ” என்கிறேன், 
மறுபடியும் அதே பாவலா மறுபடியும் சூச்சூ,

மறுபடியும் அதே பாவலா,மறுபடியும் அதே சூச்சூ,மறுபடி மறுபடி என மாறி மாறி நடந்த நிகழ்வில் சூச்சூகள் என்னிடமிருந்தும்,பாவலாக்க ள் அதனிடமிருந்தும் வந்து கொண்டே இருந்தன.

எறிந்தவிசைஎன்னிடமேதிரும்பிவந்ததுபோலஎந்தசொல்லாடலும், 
எந்தஅசைவும்அற்றுஅந்தவிரிந்தவெளியில் எங்களுக்கிடையிலாக
         அந்த செயல் நடந்து கோண்டே இருந்தது.

இரண்டு கோழிகள் ,ஒரு சேவல்,குஞ்சுகள் இரண்டு என தரை கிளறி இரைதேடிக்கொண்டிருந்தன.இளம் ப்ரௌன் கலரில் செந்நிறமும், ஆரஞ்சும்கலந்தஇறக்கைகளுடன்தலையிலும்,தாடையிலும்சிவப்புக்
          கொண்டை வைத்த சேவல் அருகில் வெள்ளையாய்இரண்டுகொழிகளும்,
          குஞ்சுகளுமாய் அந்த இடம் முழுவதுசிதறிக்கிடந்தஈரமண்துகள்கள்ஈரக்
          கால்வாயைஅடைத்துத்தெரிந்தது.

இனி சூச்சூ ஆகாது என குனிந்து கல் எடுத்த இடம் இருசக்கர வாகன த்திற்கு நிழல் தந்த வேப்பமரத்தை சுற்றி பறிக்கப்பட்டிருந்த வட்டக் குழியாய் இருந்தது பொதுவாக வேப்பங்கன்றுகளை யாரும்பணம் கொடுத்து வாங்குவதில்லை.

மற்ற கன்றுகளோடு இதையும் சேர்த்து வாங்கிய  வந்ததைப்பார்த்து 
சிலர்தலையிலடித்துக்கொண்டுசிரித்தார்கள்.ஏன்சார்வேப்பங்கண்டப்
         போயாவெலகுடுத்துவாங்குவாங்க? நெட்லிங்கம், பூமரம், சவுக்குக்
கண்டு,ரோஜாச்செடிஎல்லாம்சரிதான்என்கிறஏளனப்பேச்சுக்குஉள்ளா ன நிலையில் நட்டு வளர்த்த கன்று இப்போது வளர்ந்து கிளை பரப்பி இலைகளும்,பிஞ்சும்.பூவும்,காய்களுமாய் விரிந்து படர்ந்து நிற்கிறது.

அதனடியில் இருந்து எடுத்தகல் சிறியதாகவும், பொடியாகவும்
இருந்தது.சுக்கான்கல்அதுகீழேபோட்டால்நொறுங்கிப் போகக்கூடும் சுக்கல்,சுக்கலாக/

வீட்டைச்சுற்றிபள்ளமாககிடந்த இந்த இடத்தைஇட்டு நிரப்பகொட் டியமண் கொஞ்சமா,நஞ்சமா?பத்து  ட்ராக்டர்    மண்ணாவது கொட்டி
         இருப்போம்  இதுவரை  அதில்  இரண்டு  ட்ராக்டர்வரை மழைநீருடன்
         கைகோர்த்துக் கொண்டு போயிருக்கலாம்.
பக்கத்துத்தெரு ரங்கநாதன் வீட்டுக் கோழிகள் இது,அவரும் அடிக்கடி சொல்வார்.”என்ன செய்யிறது சார்,மேயிறதுக்கு வேற எந்தப்பக்கம் பத்தி விட்டாலும் ஒங்க எடத்துலதான் வந்து கெடக்குதுங்க,அதுக்கு ஒங்க யெடம் ரொம்ப புடிச்சிப்போச்சி போலயிருக்கு.அதுகளுக்காக நான் ஒங்ககிட்ட வருத்தம் தெரிவிச்சிக்கிறேன் சார்.என சொன்ன அவர் பல்சரக்குக்கடை வைத்திருக்கிறார்.பல சரக்கு,காய்கறி,சேவு மிக்சர் என கலந்துகட்டிய வியாபாரம்,இரண்டு பெண்கள், ஒரு பையன், பையன் கடைக்குட்டி,ஒரு பெண் கல்யாண வயதில் நிற்கிறாள்.வரன் தேடிக்கொண்டிருப்பதாய் கேள்வி.இரண்டு மூன்று இடங்கள் வந்ததாயும், ஒன்றும் சுகமாய் அமையவில்லை என்றும் சொன்னார். ஒருநாள் மதிய வேளை கடைக்குச்சென்றிருந்த நேரத்தில்/

நேரம்,காலம் வருகிற போது தன்னைபோல அமையும் என்கிற ரெடிமேடான பதிலையும்,எனக்குத்தெரிந்த ஒரு இடத்தையும் அவரி டம்சொல்லமுடிந்ததுஅவ்வப்பொழுதுகடைக்குப்போகும்போதுபேசிய நேரம் போக வீட்டின் பின்புறமாய் நின்றும் பேசிக் கொண்டிருப்போ ம்ஏதாவது ஒரு நாளொன்றின் சந்தர்ப்பத்தில்/

குடும்பம்,பிள்ளைகள், விலைவாசி, அரிசி, பருப்பு, கடை, வியாபாரம்,, அவர்களது படிப்பு,கல்யாணம் என எல்லாம் பேசிக்கொண்டு இருப் போம்.

ஒருமுறைஇப்படித்தான் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நாங்கள் இருவரும் நின்றிருந்த இடைவெளியினூடாக பாம் பு ஒன்று வேகமாக ஊர்ந்து சென்றது.பார்த்த நான் திடுக்கிட்டு நகர்ந்து கல் எடுக்க “அட விடுங்க சார்,அது இல்லாத யெடத்துலயா நாமஇருக்கம்அது வாட்டுப் போயிரும்,அத தொந்தரவு பண்ணாத வரைக்கும் நம்மள அது  ஒண்ணும்  பண்ணாது விடுங்க.
என்றார். வேர்த்து விதிர்,விதிர்த்து நின்ற என்னைப்பார்த்து.
தலையை திருப்பி ஒரு மெல்லிய சப்தத்தில் மகளை தண்ணீர் கொண்டுவரச்சொல்லிகொடுத்தார்எனக்கு.கழுத்தைத்திருப்புகையில் அவரது உடம்பும் சேர்ந்து திரும்பியதாகவே பட்டது.

எனக்கு,தொந்தி வைத்திருந்த குண்டான உடல் சமயத்தில் அவரை ரொம்பவும் குள்ளமாய் காட்டுவதுண்டு,குள்ளம்தான் அவர் என்ற போதுகூட இவ்வளவு குள்ளமாகவா காட்சிப்பட்டுத்தெரிவார்?

அவரது வீட்டின் பின் பக்க வெளியின் முடிவும்,எனது வீட்டின் பக்கவாட்டுவெற்றுவெளியின்முடிவின்கோடும்ஒன்றாகவேதெரியும், அவரது வீட்டின் பின் பக்க வெளிக்கு காம்பவுண்டுச்சுவர் கிடையாது அதனால்பின்பக்கவெளியில்உள்ளபாத்ரூம்,டாய்லெட்எல்லாம்அப்ப டியே தெரியும்.
வர வர எனது வீட்டு மாடிப்படியின் ஓரம் நிற்பதற்கும்,மாடிப்படியில் அமர்வதற்கும் கூடசற்றுசங்கடமாகவேஇருக்கிறது.பல் விளக்குகிற நேரங்களில் மட்டும் இல்லை.சும்மாக்கூட அங்கு போய் நிற்க கூசுகிறது மனம்.

காலையில்வீட்டைவிட்டுக்கிளம்பமணி11.00 ஆகிப்போனது,
         நண்பனது மகன் திருமணம்,9.30 டூ 10.30 முகூர்த்தம். ஆனால்   இவன்
         போன தாமதமான பொழுதில்தான் பெரும்பாலோனோர்கள்     
         வந்திருந்தார்கள்அவர்களுடனானபேச்சு,நலம் விசாரிப்பு,,,,,,,,,,,,,
எல்லாம்முடிந்து தோழர் முத்துக்குமாரைஅவர்களதுவீட்டில் போய்

சந்தித்துவிட்டுவந்தநேரம்இப்படிகையில்கல்லெடுக்கவேண்டியதாய்
போயிற்று.

எடுத்த கல்லை எறிய மனமின்றி கீழே போட்டு விட்டு பொய் விரட்டு விட்டு வீட்டுக்குள் வருகிறேன்.

மஞ்சு விரட்டு கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன பொய் விரட்டு?

6 comments:

 1. பாம்பு என்றவுடன் பயமாகத் தான் இருக்கிறது...

  வித்தியாசமான நிகழ்வு + தலைப்பு...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் அவர்களே
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. படிக்கும் போதே நீங்கள் நின்ற இடத்தில் நிற்கவைத்து விடுகிறீர்கள் !
  அருமை!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete