23 Mar 2014

படிக்கட்டு,,,,,,

இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக் டரும்இல்லைஅதேவேளையில்சீரியஸ்கண்டக்டரும்இல்லைஅவர்.
ஆனால்கண்டக்டர்,கண்டக்டர்அய்யா,கண்டக்டர்சார்,கண்டக்டர்அண்ணே
என்கிறஅழைப்பொழிகளிலும்அதன்இயக்கத்திலுமாய்அன்றாடம்முனைப்புக்காட்டி
இயங்கிக்கொண்டிருக்கிற அவரின் வயது 50 இருக்கலாம்.

தொலை தூர பஸ்களில் ஓடுகிற கண்டக்டரைப்போல இல்லாமல் கொஞ்சம் கறார் கம்மியாகவும் போட்டிருக்கிற சீருடையில் அங்க ங்கேநூல்பிரிந்துதொங்கியும் தொள தொளப்பாய் தெரிகிறவருமாய்/ எப்பொழுது துணி எடுத்து என்ன அளவு கொடுத்து எந்தடெய்லரிடம் போய் தைத்திருப்பார் என்பது அறிய வழியற்ற வகையாகவே/ சட்டைக்கலரின் வெளுப்பும் பேண்ட்டின் நைந்த தன்மையும் அவரின் முழு அடையாளம் சொல்லிச் சென்றதாக/
தஞ்சாவூர் பணியாற்றிய நாட்களில் அலுவலகத்தில் மதியம் சாப்பி ட்டு பஸ்ஸேறும் பொழுது மணி மூன்றாகிப் போகும். சமயத்தில்கூட அரைமணி ஆகிப்போகும்.பழையபஸ்டாண்ட்டிலிருந்துபஸ்ஸேறி புதுபஸ்டாண்ட் வர வே கால் மணிக்கும் மேலாகிப்போகும்.அது ஒரு கலிகாலம்.உள்ளம் கலி கொண்ட காலமது.

விருதுநகரிலிருந்து தஞ்சாவூருக்கு பணிமாறுதல் ஆன தினங்களில் தஞ்சாவூர் எந்த திசை,அங்கு பயணிக்க எவ்வளவு நேரமாகும், எப்படிச் செல்வது,புகை வண்டியிலா,பேருந்திலா, தனியாகவா அல்லது,,,,,,,எனயோசித்துக் கொண்டி ருந்த கணங்களில் இத்தனாம் தேதிக்குள்ளாய் போய் பணியை ஒப்புக் கொள்ளவேண்டும் என்கிற உத்தரவு தாங்கி மூத்த ம்மகனுடன் ஏழுமணி நேரம் பயணித்து தஞ்சாவூரில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து அங்கிரு ந்து பணி மாறுதலாகி வருகிற ஒரு வருட காலம் வரை நாய் பாடு பட்ட கதையாகித்தான்போனது.தங்குவதற்கு ஓரளவு வசதியான அறை இருந்தது. சாப்பிடுவதற்கும்சுமாரானது முதல் ஓரளவு பெரியது வரைக்குமானஹோட்டல்கள்இருந்தது,எண்ணிச்செலவழிக்க கையி ல் ஓரளவிற்கு பணம் இருந்தது. துணையாய் இத்தனை இருந்தும் ஏதோ தனித்து விடப்பட்ட அனாதை மனோநிலைக்கு ஆளானவனா யும் திருமணமான பிரமச்சாரியாகவுமே காட்சிப் பட்டான்.

சமயத்தில் சக்கரபாணியண்ணன் கொண்டு வந்து விடுவார். அவரு டைய இரு சக்கரவாகனத்தில்.சக்கரபாணியண்ணன் அலுவலக த்தில் உடன் வே லை பார்ப்பவர்.யார் ஒட்டுதலும் அற்று தனியாக ஒற்றைக்காட்டு மனம் படைத்தவராய் அலுவலகத்தில்அடையாளம் சுமந்து இருந்தவரை இவன் போய் பணிக்குச் சேர்ந்த சில,பல தினங்களில் மடை மாற்றம் செய்துவிட்ட சாதனை படைத்த நாளிலி ருந்து இவனுடன் மிகவும் ஒட்டிப்போனவராய் தெரிந்தார்.

அவருக்கு பக்கத்து வீட்டுக்காராய்த்தான் இருந்தார் இவன் ஏறிய பஸ்ஸின் கண்டக்டர்.சக்கரபாணி வந்து பஸ்ஸேற்றி விடவருகிற நாட்களில்அவரைப்பார்த்து சொல்லிவிட்டுப்போவார்.நம்ம சார்தான்  இவர் என/

என்னதான் சொன்ன போது கூட சிரிப்பைகழட்டிவைத்த கண்டக்ராய் காணப் படுவார் அவர். நாகபட்டிணத்திலிருந்து வருகிற பஸ்ஸது, மதியம் மூனறை மணிக்குப்போனால் ஏறிகொள்ளலாம். தஞ்சா வூரிலிருந்து மூனறை மணி நேரம் தான் மதுரைக்கு வந்து விட லாம்.என்ன சார் இது இப்பிடி பேசுறீங்களே, பேச்சுக்கு அஞ்சி எல்லா ரும் எறங்கீட்டாங்கன்னா வெறும் பஸ்ஸவா ஓட்டிக் கிட்டு போவீ ங்க என இவன் கண்டக்டர் கறாராக பேசிய ஒரு தினத் தில் கேட்ட போது சிரித்துக் கொண்டார் அவர்.

இப்படி இக்கட்டு ஏதும்ஏற்பட்டால்மட்டுமே பேசுகிற, சிரிக்கிற கண்டக்ராக இல்லாமல் இவர் இருந்தது சற்று ஆறுதலாய் இருந்தது.

பஸ்டாப்பில்பையுடன்வந்து நின்றால் போதும் ,கைபிடித்து எட்டி இழுத்துப் போட்டு விடுவார்.அவ்வளவு ஒட்டுதல் அல்லது அவ்வள வு பற்றுதல் எனச் சொல்லலாம். எல்லோரிடமும் அப்படி நடந்து கொள்ள மாட்டார். அவருக்கு தெரிந்திருந்தது,யார் யாரிடம் எப்படி நடந்தூ கொள்ள வேண்டும் என/ அவரது அனுபவமும் வயது அதை அவருக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

ஓடித்தெரிகிற பேருந்துசாலையில்விரைவுகாட்டுகிற வேளையில் மனம் முளைக்கிற எண்ணங்களிலும்,வெளித்தெரிகிற காட்சிகளிலு மாய் அவர் முகம் பட்டுத் தெரிய நடமிடுகிற வேளையாய் இருக்கிற பொழுதுகளில் சாலை யோரங்களில் ஓடுகிற பருத்துத் தெரிகிற மரங்கள் சாலையில் பயணிக்கிற பாதசாரிகள், இரு சக்கரவாக னங் கள், பேருந்துகள்.லாரிகள் மற்றும் மற்றுமான சாலையின் இயக் கம் பேருந்தினுள் இருக்கும் இயக்கத்தினூ டாக கண்டக்டரையும் அவரது பேச்சையும், நடத்தையையும் வெளிக் காட்டுவதாக/ அதுவே அவரை நிலை நிறுத்துவதாக அங்கே/

அவரைப்பார்க்கிற போதெல்லாம் எங்கோ பார்த்ததாய் ஞாபகம்,ஒரு சினே க பாவமும்,ஒரு வாஞ்சையும் ஒட்டித் தெரிகிற பார்வையும், ஒட்டு தலும்/ நெருங் கிய உறவினர் போலவும் நெஞ்சம் தொட்டு நெசவிடுபவர் போலவும் மிகவும் வாஞ்சை காட்டி பிரியம் சொல்கிற மனிதர் போலவுமாய் காட்சிப் படுகிற அவரை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் டூட்டிபார்க்கிறபஸ்ஸில் பார்க்க நேரிட்டு விடுகிறதுண்டு, கூடவே அவரிட்டம் டிக்கெட் வாங்கி பயணிக்கவுமாய்/

ஒன்று இங்கிருந்து செல்வான் பணியிடம் நோக்கி,அல்லது அங்கிரு ந்து வருவான்.

இன்றுகாலை 8.45 மணி பஸ்ஸை எட்டிப்பிடித்து விடலாம் என்கிற ஆசை நிரம்பி வழிய வந்தும் கூட ஒரு நம்பரில் தவறவிட்ட கதை யாகிப் போனது. பிறகெ ன்ன காத்திருந்தான் அடுத்த பஸ் வர/

அடுத்த பஸ்வரும் வரைசும்மா காத்திருப்பது இவன் போன்ற ஆணுக்கு எப்படி அழகாகும்?இருக்கவே இருக்கிறது வருசையாய் முளைத்து நிற்கிற டீக்கடைகள்.ஆதில் ஏதாவது ஒன்ரில் தஞ்சம் காட்டி டீக்கிளாஸீடன் நின்றால் துவர்ப்பு தாங்கிய ப்ரவுன் கலர் திரவம் நாவின் மென் சுவையறும்புகள் தொட் டு உள்ளின் உள்ளில் பயணிக்கிற சுகம் அனுபவிக்கிற நாள்வரை கடை முன்னால் காட்சிப் பட்டு விட்டு நேரம் வந்ததுமாய் பஸ்ஸேற நகன்று விடலாம் அவ்விடத்தை விட்டு என்கிற எண்ணம் படர பஸ்ஸிற்காய் காத்து நிற்கிற வேளையில் மென் தென்றாய் தென் படுவாள் யுவதி ஒருத்தி.

கண்ணுக்கு உறுத்தாத கலரில் புடவையும் அதற்கு மேட்சாய் சட்டை யும் அணிந்து வருகிற அவள் பார்க்கப்பாந்தமாய்/இவன் பஸ் டாப்பிற்கு போகிற வேளையில் அவள் வருகிறாளா அல்லது அவள் பஸ்டாப்பிற்கு வருகிற வேளை பார்த்து இவன் போகிறானா தெரிய வில்லை.

அந்தகாலைவேளையில்பரபரப்பாய்இயங்கிக்கொண்டிருக்கிறபஸ்டாப்பில் அவசரமற்ற அவளது நிதானம்தான் அவளைகவனிக்கச் செய்திருக் கிறது இது நாள்வரை/

இதெல்லாம்ஒருபொருட்டேஇல்லைஇளநீர்கடைக்காரருக்கு. அவரு க்கு அவரது கடையும்,கடைக்கு அவரது பேச்சுமே மூலதனமாய்” அதுன்னா நாலுரோடு சந்திக்கிற முக்கு நல்ல பார்வ உள்ள யெடம், என்ன இருந்தாலும் இது ஒரு மொடங்கதான, என்கிறார்.

இப்பொழுது பஸ்டாப் இருக்கிற இடத்தில்தான் முன்பு இளநீர் கடை போட் டிருந்தார்,அருப்புக்கோட்டை பஸ் வந்துருச்சி,பரளச்சி கமுதி புதுப்பட்டி எல்லாம் ஏறுறவங்க,இருந்தா தயாரா இருந்துக்கங்க என்பார்,பஸ் வரும் நேரம், எந்த பஸ் எந்நேரம் எந்த ஊருக்குச் செல் லு ம் என சரியாகச் சொல்வார்.
என்னசார் முன்னபோலஇல்லயேவாரம்,பாருங்க ஸ்டிக்கர் ஒட்டி வருது எழனி, இதுக்குன்னு ஒரு தனி ரேட்டு,செவ்வெழனி வேற, நாங்க யெறக்குற லோடுல தரம் பாத்து பிரிச்சி மொதலக்காப்பாத்தி லாபம் பாத்துப்போகணும் வீட்டுக்கு/ இதுல வர்ரவுங்க போறவுங் களுக்கு குடுக்குறது தனி.காசு கேக்க முடியாது, எனச்சொல்கிற எளனிக்கடைக்காரருக்கு வலது கால் கட்டைக் காலாய்/

ஒருநாளின் அதிகாலையில் நடந்த லாரி விபத்தில்இழந்து காலுக்கு கட்டை கால்தான் பரிகாரமாய் இருக்கிறது என்கிறார்.

அவரிடம்பேசிக்கொண்டிருந்தஒரு மென் பொழுதில் பஸ்ஸிற்கு வந்து நின்றவள் யாராக இருக்கக் கூடும் எனத் தெரியவில்லை. வயதானதோற்றம் தந்த மூதாட்டியாய்/

பெண்கள் சீக்கிரம் மூப்பெய்திப்போவது ஆச்சரியமாகவே/ பார்த்தால் பாலமேட்டில்பஸ்ஸிற்காய் நிற்கிற போது கையேந்தி வருகிற மூதாட்டியின் சாயலில் தெரிகிறாள். இவன் தான் அன்று அவளை பஸ்ஸேற்றி விட்டான், சாயங்கால நேரம் பாத்துப்போங்க என/ஆச்சரியம் இவன் மூதாட்டியை ஏற்றிய பஸ்ஸில் அன்றாடம் செல்லும் அதேபஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் சொல்லிய போது கவலப்படாதீங்க,ஏங் அம்மாவ யெறக்கிவிட்டதப் போல அவுங்கள யெறக்கி விட்டுர்றேன் என்றார்.

இவன் மனைவி இவனிடம் சொல்லாத நாட்கள் இல்லை.ஏங் பஸ்ஸேறுற யெடத்துக்குப் பக்கத்துலதான் எளனிக்கடை இருக்கு, அப்பிடியே ஊடமாட ஒரு எளனி வாங்கி குடிச்சிக்கிற வேண்டியது தான என/அவளது சொல்லி இருக்கிற ஞாயமும் அக்கறையும் இவனுக்கு சரி என்று பட்டபோதும் அங்கு போய் நிற்கிற மறுமணம் இவன் மனம் நாடுவது டீயையே/

அப்படியெல்லாம் மனம் நாடி டீக்குடிக்கிற வேளைகளில் மனம் ராம சுப்பு சித்தப்பாவை நினைத்து க் கொள்ளாமல் இல்லை,15 பைசா வி ற் கு சக்கரை டீப்போட்டு தனது வாழ்க்கையின் ஆரம்ப சுருதியை டீக்கடையிலிருந்துமுடி போட்டவர்.டீன்னா சுருக்குன்னு இருக்கணு ம்டா பெரியவனே என்பார்.

மாரியப்பன்அண்ணன்அந்தபஸ்ஸில்தான்வருவதுண்டுபெரும்பாலுமாய்/
அவர் இவன்வேலைபார்க்கிறநிறுவனத்தில் வேறொரு கிளையில் கிளார்க் காக இருப்பவர்.நல்ல மனிதர்,அவரை முதன் முதலாக பஸ்சில் பார்த்த அன்று இவனில் சரியாக அவர் முகம் பதிந்து தெரியவில் லை.

இவன் பஸ்ஸின் பின்ப்படிக்கட்டு ஓரம் பரவாயில்லாத கூட்டத்திற் குளாய் புதைந்து நின்றவனாய் இருந்தான்.அவர் முன் படிக்கட்டு ஓர மாய் நின்று கொண்டு இவனை உற்றுப்பார்த்தவராய் காணப் படுகி றார்.

வெளிர்ஊதாவில் பட்டைபட்டையாய்கோடு போட்டசட்டை,கறுப்புக் கலர் பேண்ட்,கறுப்புக் கலரில்செருப்பு அணிந்திருந்தார்.வார் வைத்தி ருந்தது, பின்னால் இழுத்து மாட்டியிருந்தார்.ஏதோ ஒரு முண்ணனி கம்பெனியின் தயாரிப்பாக இருக்க வேண்டும்.

ஊரெல்லாம் இப்பொழுது இந்தச்செருப்புதான்,கடந்த ஒரு மாதமாய் செருப்பு வாங்க வேண்டும் என்கிற இவனது நினைப்பில் அவ்வப் பொழுது வந்துபடுவதுஇதுபோன்றவைகள்தான்.பார்க்கும் பொழுதும் பார்த்தநாள் முழுவதுமாய் கூட அந்த பாதிப்பிலிருந்து மீளமுடியா மல் போவதுண்டு சமயாசமயங்களில்/

ரெடிமேடா அல்லது எடுத்துத்தைத்ததா தெரியவில்லை. அவ்வளவு பிட்டாக இருந்தது.இவனுடன் வேலை பார்க்கிற குருசாமி பெரும் பாலுமாய் ரெடிமெட்தான் போடுவார். நன்றாக இருக்கும்.நன்றாக இருக்கிறதோ இல்லையோ அவரின் தேர்வு அதுவாகத்தான் இருந் திருக்கிறதுஇதுநாள் வரை/கேட்டால்பட்ஜெட் என்பார். வீட்டில் முடியாமல் இருக்கிற மனைவி யின் மருத்துவச் செலவுக்கு மாதச் சம்பளத்தில் பாதி போய் விடுவதாய்க் கூறுகிறார். இருக்கட்டும் என்ற போதிலும் கூட அதற்காக இப்படியா என்றால் ஆமாம் என்ன செய்ய,,,, எனச்சிரிப்பார்.

பெரும்பாலான நாட்களில் அணிந்து வருகிற ஜீன்ஸ் டீசர்ட் தவிர்த்து இன்று கறுப்புப்பேண்டும் வெள்ளைச்சட்டையுமாய் அணிந்து வந்திருந்தான். கறுப்பு வெள்ளை அதுவும் நன்றாகவே இருக்கிறது .இவனுக்கு நினைவு தெரிந்து 20 வயதிலிருந்து இப்படித்தான் இவன் காஸ்ட்யூம் இருந்தி ருக் கிறது. கறுப்பு என்றால்தீவிரகறுப்பும் இல்லை,வெள்ளைஎன்றால் தீவிர வெள்ளை யும் இல்லை. இவனு க்கு இப்படி உடுத்துவதுதான் பிடித்தும் போய் இருக்கிறது, என்ன  இப்பொழுது அதனால் என்கிற மனோ நிலையில் இல்லாமல் இவனு க் குப் பிடித்து இப்படித்தான் ஆகிப்போய் இருக்கிறது பெரும்பாலு மாய்/

PNR கடையில்தான் எடுத்தான் ரெடிமேடாக/இருக்கட்டும் மாமா விலைக்ஞ்சம்கூடுதல்தான்என்னஇப்பஅதுனால,ஒருநூறுரூபாய்க்காக
இப்பிடிசிச் சிங்கின்னா நாங்கெல்லாம் பெழைக்கிறது எப்பிடி என்பார். அந்தக்கடையில் வேலை பார்க்கிற காசிம் பாய்.

“இல்ல பாய் புள்ளைகளுக்கு எடுக்குற வயசுல நாம எடுத்துப் போட் டுட்டுத் திரிஞ்சா எப்பிடி பாய் என்றால் இருக்கட்டும் மாமா அதுக்காகநாமஎன்னசும்மாவாஅலையுறது”எனவாதிடுவார்.”எனக்கும் தான் வீட்ல ரெண் டு புள்ளைங்க இருக்கு,ஆனா பாருங்க என்னை ய,,,,,” எனவுமாய்வார்த்தை களை நூர்த்துச் சேர்ப்பார்.

”ஒங்க மனசு வேற பாய்,ஏங் மனசு வேற பாய்.ஒங்க கிட்ட துணி எடுக்குற ஒவ் வொருதடவையும் பொண்டாட்டி புள்ளைங்க ஞாபகம் வராம இருக் காது. என்கிற போதுசிரிப்பார்.

குல்லூர்ச்சந்தையிலிருந்துஇங்குகடைக்குவேலைக்குவருகிறஅவர்
அன்றாங்களில்பெரும்பாலானதினங்களில்சைக்கிளில்தான்வருவார்.
அவரிடம்தான்சொன்னான். ”சின்னவன் போன மாசமே பெர்முடாஸ் கேட்டான், பெரியவ ஒருசுடிதாரு வேணுமுன்னா,சின்னவனுக்கு ஸ்கூல் யூனிபார்மும் கிழியிற மாதிரி இருக்கு,,, ”,அநேகமாய் இவன் சொன்னநிலையில்அல்லது அதற்குசற்று ஏதாவது முன் பின்னாய்த் தான் இருந்திருக்கிறது கண்டக்டரது வீட்டிலும், மாரியப்பன் அண்ண னது வீட்டிலுமாய்.

ஜீன்ஸ்பேண்ட்போட்டிருந்தவர்தான்இன்றுசைக்கிள்ஸ்டாண்டில்இருந்தார். காலைஒன்பதுமணிக்குள்ளாய்போகிறவேளைகளில்அவரைப்பார்க்கலாம்,இரவுப்


பணி முடித்து விட்டு காலை கிளம்புவதற்கு ரெடியாகி நிற்பார். சட்டை போடாத வெற்று மேனியில் அவர் அணிந்த ஜீன்ஸ் பேண்ட் டும், கேன்வாஸ் சூவுமாய் அவரை தனித்தவராக்கிக்காட்டும் அந்த இடத்தில்.அது மட்டுமில் லை. சைக்கிள் மற்றும் இருசக்கரவாகனம் வைக்க வருகிறவர்களிடம் அவர் போடும் சப்தம் ஒரு தனி தினுசாயும் சற்றே மிகைப்பட்டுமாய்/

அவருஅந்தானிக்கிஎங்கிட்டாவதுதிரிவாரு,வீட்டவிட்டுஏழுமணிக்கெ
ல்லாம் வந்து ரும், பஸ்டாப்பு,டீக்கடைன்னு திரியும்,ஏன் அங்க திரியிற நேரத்துல இங்க வர வேண்டியதுதான. பெரிய இதுமாதிரி தான் அங்குட்டு சுத்திக்கிட்டு என்பார். அவரை மாற்றி விட பகல் ஷிப்ட்டுக்குவேலைக்கு வருகிறப் பெரிய வரைப்பற்றி/

அவரைப்பார்க்க கிட்டத் தட்ட மனோநிலை பாதிப்புக்குள்ளானவர் மாதிரித் தெரியும்.

இவன் சைக்கிள் வைக்கப்போகிற காலை வேளை பெரும்பாலுமாய் கையைக் காலை ஆட்டிக் கொண்டு எக்ஸர்சைஸ் பண்ணிக் கொண்டிருப்பார். இடது பக்கமாய்பாதிப்புக்குள்ளாகிசெயலிழந்து போன கையையும் காலையும் ஆட்டி ஆட்டி ஏதாவது எக்ஸர்சைஸ் பண்ணிகொண்டிருப்பார். கேட்டதில் இரண்டு வருடம் முன்பாய் வந்த பக்க வாதம் என்றார்.

நல்ல வேளை நிச்சயமான திருமணம் நடப்பதற்கு பத்து நாட்கள் முன்பாக வே பக்கவாதம் வந்ததால் ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்தது என்றார், படாத பாடு இல்லை,ஏற்படாத மனச் சங்கடம் இல்லை. எல்லாம் கடந்து மருந்து மாத்திரை, ஆஸ்பத்திரி, வைத்தி யம், ஊர் உறவுகளின் பேச்சு,, எல்லாம் கடந்து வேலைக்கென இங்கு வந்து விட்ட பிறகுதான்கொஞ்சம் ரிலாக்ஸானேன் என்கிறார்.

வைத்தியம் தர்ற தைரியத்த விடவும் இந்த மாதிரி எக்ஸர்சைஸ் ஒடம்புக்கும் மனசுக்கும் ஒரு தெம்பா இருக்குது என்பார்.அவர் போட்டிருக்கிற டீசர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் பார்க்க நன்றாகவும் சில சமயம் பொருத்தமற்றும் தெரியும்,இதில்அவர் அணிந்திருக்கிற கேன்வாஸ் சூ கண்பறிக்கிறவெள்ளையாகவே/என்கிறநினைப்புடன் இருந்தபொழுதுமாரியப்பண்ணன் பஸ்ஸின் முன் பகுதியிலிருந்து வருகிறார், மென் சிரிப்புடன்/

9 comments:

 1. அழகிய, சுவையான சொற்சித்திரம்! (த.ம.1)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் செலப்பா யாகஸ்வாமி அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. ஒவ்வொரு நிகழ்வுகளும் கண் முன்னே - ரசனையுமாக...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
  நன்றி வருகைக்கும்,கருத்துரிக்குமாக/

  ReplyDelete
 4. நேரே காண்பது போல் உள்ளது.உங்கள் கண்வழியே அப்படியே பார்த்துவிட்ட அனுபவம்.
  மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. வணக்கம் கோமதி அரசு அவர்களே.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக

   Delete
 5. பலதரப்பட்ட மனிதர்களை படம்பிடிக்கிறது பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete