அதன் வேகம் எதை முன்னிறுத்தி எனத் தெரியவில்லை. ஏன் அவ்வளவு வேக மாக எங்கு போகிறது,எதை சாதிக்க?என வரிசையாய் அடுக்கப்பட்ட கேள்விகள் என்னுள் முளைத்து எழாமல் இல்லை.
எப்படியும்நான்குஅல்லதுஐந்தடி நீளமிருக்கும்.நெளிந்து ஊர்ந்ததால் அதன் நீளத் தை கணிக்க முடியவில்லை.இடது கையிலிருந்த தண்ணீர் நிறைந்த ப்ளாஸ்டிக் கப்பை வலது கைக்கு மாற்றி விட்டு வலதுகையிலிருந்த டூத் பிரஷ்ஷை இடது கைக்கு மாற்றி கழுவிவிட்டு வாய் கொப்பளிக்க முனைகையில் நான் நின்றிருந்த இடத்திலிருந்து ஐந்தடி தூரத்தில் ஊர்ந்துஓடியது அந்தபாம்பு.
எங்களது வீட்டின் கொல்லைப்புறம் அது.மண்ணும்,கல்லும்,சரளையும் பூத்து வேப்ப மரங்கள் இரண்டு,பன்னீர் மரங்கள் மூன்று எனதாங்கி நின்றவெளியது.பூவும், பிஞ்சும், காய்களும், இலைகளும், கிளைகளுமாய் கைவிரித்து நடம் புரிந்து பேசுகிற மரங்களின்கீழ் விரிக்கப்பட்டு காட்சி தந்த நிழல் ஒன்றில்தான் அது தன்னை இழுத்து,இழுத்து ஊர்ந்து சென்றது வேகமாக/
சிவப்பா,மஞ்சளா?,,,,அதன் கலர் எது எனத் தெரியவில்லை. பக்கத்தில் போய் பார்க் கவும் முடியாதுபடையேநடுங்கும்எனசொல்கிறபோதுநான்எம்மாத்திரம்?ஆனால்அதைதோளில்தூக்கிப்போட்டுக்கொண்டும்,கையில்படரவிட்டுமாய்விளை யாட்டுக்காட்டுகிறவர்கள்அல்லது வித்தையாளிகள் மற்றும் சாகசம் செய்கிறவர்க ளின் உற்ற நண்பனாய் தோற்றம் தந்துள்ளது இதுவரை.
எது எப்படியாயினும் நாம் விலகி நின்று இங்கிருந்தவாறே பார்ப்பதும்தான் நல்லது என்கிறமுடிவுக்கு வந்தவனாய் விழிகளை சற்று வெளியனுப்பிப் பார்த்ததில் அதன் நிறம் ப்ரௌன் என சொல்லிச்சென்றது.
இந்த மரத்தின் அடியில்தான் எனது பெரிய மகளின் விளையாட்டு, குடியிருப்பு,
கைவண்ணம்,பொழுதுபோக்குஎல்லாமே/
நான் என இல்லை,எனது மனைவி கூப்பிட்டபோதும் கூட அவள் அந்த இடத்தை விட்டு நகன்று வர மறுத்திருக்கிறாள்.
சற்றேபெரியஅளவில்கிழிக்கப்பட்டதுணியைஎடுத்துக்கொண்டுஅதைநான்குமுனைகளிலுமாய்ஊனப்பட்டகம்புகள்கொண்டுடெண்ட்அமைப்பாள்.அதனுள்ளேயேகார்,சைக்கிள்,இருசக்கரவாகனம் இன்னும் இன்னுமான இதர,இதரவாய் கலர் காட்டிபொம்மைகளாய்நிற்கும்.உள்ளேபொம்மை நிறுத்தி சுற்றிலும் மண் குவித்து கரை அமைத்து வாசல் பக்கம் படி வைத்து தண்ணீர் தெளித்து கோலமிட்டு வேப்பம் பூக்களையும், பன்னீர்மரப் பூக்களையும் அழகாகவும் நேர்த்தியுடனும் அடுக்கி வைத்துவிட்டு அழகு பார்ப்பாள் அப்போ தெல்லாம்/
அவளதுமனது,உடல்,செய்கை எல்லாவற்றிற்குமாய் நெசவிட்டிருக்கும் கர்கலரான நூல்கள் அவளின் செயல் ஆரம்பித்த புள்ளியில் மையம் கொண்டிருக்கும்.
சிறு செடியாக இருக்கும் போது அதன் கைபிடித்து விளையாண்ட அவள் இப்போது திருமணமாகி சென்று விட்ட பின்னும் வீட்டுக்கு வருகிற போது அந்த இடத்தை ஆசையோடு தொட்டுப் பார்த்து அங்கு சிறிது நேரம் நின்று விட்டுதான் வருகிறாள்.அவள் நான் எனது மனைவி என மூவரும் அன்று கைதொட்டு கை தொட்டு நின்ற கன்று இன்றுஅண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.குடையாக விரிந்தும், பூவும் பிஞ்சும்,காய்களுமாய் என/
உருவாகிய மொட்டுக்கள் பூவாகி,பூவாகியது,காயாகி,காய் கனியாக நிற்கிற நேரம் உதிர்கிற பழங்களும், மரத்திலேயே ஒட்டிக்கொண்டு பிடிவாதம் பிடிப்பவையும் ஒன்று அல்லது ஒண்ணரை மாதங்களில் தனது வேலையை முடித்துக்கொண்டு விடுவதாகச்சொல்வாள் அந்த மரத்திலிருந்து விழுகிற வேப்பம் பழங்களை பெறக்க வருகிற மூதாட்டி/
அப்படி பழங்கள் விழுகிற இடத்திலும்,பூக்கள் பரவிய மண்மீதும் எனது மகளும், நாங்களுமாய் தடம் பதித்த இடம் மீதுமாய் அதை விட்டு சற்று தள்ளியுமாய் சட்டென சடுதியில் கடந்தும்,அவ்வளவு வேகமாயும் சென்ற பாம்பு எதுவாய் இருக்கும்?
நல்லபாம்பு,கட்டு விரியன்,சாரை பாம்பு என சீட்டுக் குலுக்கிப்போட்டு யோசித் ததில் அது சாரைப்பாம்பு என்கிற முடிவுக்கே வந்தது மனது.உடலின் மேலே ப்ரௌன்,கீழே மஞ்சள் என்றால் அதுதான் என சொல்லி வைத்தவர்களின் சொல் மனதில்நிற்கஅதன்மீதுகப்பிலிருந்ததண்ணீரை ஊற்றுகிறேன் வாங்கிக் கொண்டு தரைஊர்ந்து,மேடேறி, செடிபிளந்துசென்றது.சென்றதெல்லாம் சரி,கொஞ்சம் மெதுவாகத்தான் போனால் என்னவாம்? இது என்ன நால் வழிச்சாலையா?
அதன் வேகமும், மூர்க்கமும்,செயல்களும்நமக்கெப்படித்தெரியும்?வீட்டோரமாய் அடர்ந்திருந்த முள்ளை அரிவாள் கொண்டு வெட்டிவிட்டு ஒரு அடர்ந்த புதரைவிலக்கிமுள்செடியின்அளவையும்,தடிமனையும்,அதற்கு வெட்டு வாய் எங்கு
வைக்கலாம் என பார்க்க வேண்டி கையிலும்,உடலிலுமாய் கீறிய முட்களை விலக்கிப் பார்த்த போது “உஸ்” என கேட்ட சப்தத்தை அலட்சியம் செய்து விட்டு பார்த்த போது பார்வையை உறைய செய்து பயமுறுத்தியதாய் இருந்தது அந்த பாம்பு எடுத்து நின்ற படம்.
வேர்த்து விதிர் விதிர்த்தவனாய் அரிவாளை போட்டுவிட்டு ஓட்டமும், நடையு மாய் வந்தது இத்தனை ஆண்டுகளில் இன்னும் ஞாபகத்திலும், மனக்கண்ணி லும் நிற்பதாக/
“அத ஒண்ணும் செய்யாத வரைக்கும் அது நம்மள ஒண்ணும் செய்யாது சார்” என்றார்.எங்களது தெருவிலிருந்த வீடுகளில் அவ்வப்பொழுது படுத்துச்செல்லும் பாம்பைப் பிடிக்க வந்த தீயணைக்கும் படை வீரர்களில் ஒருவர்.
பகலின் முடிவும்,இரவின் ஆரம்பமும் கைகோர்க்கிற நேரமாய் தன் வீட்டு படியில் ஏறப்போன பாம்பைப்பார்த்து நான்காம் வீட்டுக்காரர் சப்தம் போட்டு விட்டார்.தெருவிலிருக்கிறபையன்கள்,தெருக்கோடிடெய்லர்கடையிலிருந்தவர்களெல்லாம் ஒன்றுகூடி தீயணக்கும் படைக்கு போன் பண்ணி விட்டார்கள்.எந்நேரம் வந்து எவ்வளவு நேரம் தேடினார்கள் என்பதை அலுவலகத்திலிருந்து வந்தபிறகுஎனதுமனைவிடம்கேட்டுத்தெரிந்துகொண்டேன்வீட்டுக்குள் ஏதும்போய் விடவில்லையேஎனகேட்ட பொழுதில்/
தீயணைப்புவீரர்கள்+நாங்கள்மற்றும் நான்கு வீட்டுக்காரர்கள்,அக்கம்,பக்கம் என ஒருஇருபத்தைந்து,முப்பது பேருக்கும் குறையாமல் இருந்தவர்களுடன்,நான் வந்த பின்பும் அரை மணி நேரம் தேடியும் கிடைக்காத பாப்பைப்பற்றி தீயணைக்கும் படை வீரரே சொன்னார்.
“சார் பாத்துகிட்டே இருங்க,க்ரெக்டா நாங்க போன கொஞ்சம் நேரத்துல வரும்” என.அவர் சொன்ன மாதிரியே வந்தது. அவர்கள் சென்ற கால் மணி நேரம் கழித்து இவ்வளவு நேரம் எங்குதான் இருந்ததோ எனஎண்ணுமளவு/
எனதுவீட்டு வாசல் முன் தடிமனாகவும்,நீளமாகவும் ஊர்ந்து சென்றது அது.எப்படியும்எட்டடிநீளத்திற்கும் குறைவில்லாது இருக்கலாம். “நல்ல வேளை இப்படியான ஒன்று வாசல் படி வரை மட்டுமே வந்து போய் விட்டது.யார் வீட்டிலும் புகவில்லை”.என்கிற நினைப்புடன் “அடித்து விடலாம் அதை”என கையில் கம்புட ன் போனபோது அது மண்விலக்கி,கல் தள்ளி செடிகளுக்குள் புகுந்து “மாயம்” காட்டி விட்டது.
ஆனால்அதுவேகமாயும்பயந்துகொண்டும்சென்றதாய் ஞாபகமில்லை.அன்று அது வீட்டின்முன்னால் சென்றது.இன்று இது வீட்டின் பின்னால்சென்றது.
இப்படிவீட்டின்முன்பும்,பக்கவாட்டுவெளியிலும்,கொள்ளைப்புறத்திலும்,சமயத்தில் வீடு வராண்டா வரை யார் அனுமதியும் இன்றி வேகமாய் வந்து வேகமாய் சென்று விடுகிற அவைகளைப்பற்றி தீயணைக்கும் படை வீரர் சொன்னதே ஞாபகம் வரு கிறது.
“அத நாமஒண்ணும் செய்யாத வரை அது நம்மள ஒண்ணும் செய்யாது சார்”/இருந்தாலும் சற்று பயமாகவே இருக்கிறது அதன் வேகம் எதை முன்னுறுத்தி என்கிற கேள்வி எழுந்த கணத்திலிருந்து/
9 comments:
ற்றேபெரியஅளவில்கிழிக்கப்பட்டதுணியைஎடுத்துக்கொண்டுஅதைநான்குமுனைகளிலுமாய்ஊனப்பட்டகம்புகள்கொண்டுடெண்ட்அமைப்பாள்.அதனுள்ளேயேகார்,சைக்கிள்,இருசக்கரவாகனம் இன்னும் இன்னுமான இதர,இதரவாய் கலர் காட்டிபொம்மைகளாய்நிற்கும்.உள்ளேபொம்மை நிறுத்தி சுற்றிலும் மண் குவித்து கரை அமைத்து வாசல் பக்கம் படி வைத்து தண்ணீர் தெளித்து கோலமிட்டு வேப்பம் பூக்களையும், பன்னீர்மரப் பூக்களையும் அழகாகவும் நேர்த்தியுடனும் அடுக்கி வைத்துவிட்டு அழகு பார்ப்பாள் அப்போ தெல்லாம்/
குழந்தை முன்பு அங்கு விளையாடும் இடத்தில் அது போனது என்று படிக்கும் போது கடவுளுக்கு நன்றி சொல்ல தோன்றியது.
“அத நாமஒண்ணும் செய்யாத வரை அது நம்மள ஒண்ணும் செய்யாது சார்”/
நல்லது அப்படியே இருக்கட்டும் ஒண்ணும் செய்யாமல்.
சொல்சித்திரம் மிக அருமை.
என்ன தான் அவர் சொன்னாலும், "பாம்பு என்றால் படையும் நடுங்கும்" அல்லவா...?
அனுபவத்தை அழகான சொல்சித்திரமாக வடித்துள்ளீர்கள் ஐயா. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
பாம்பு அனுபவத்தை பதமாய் பகிர்ந்து கொண்டீர்கள்! அருமை! நன்றி!
அழகாக தொகுத்திருக்கிறீர்கள்... அனுபவமாக இருப்பின் அசைபோட்ட விதம் நன்று...
வணக்கம் கோமதி அரசு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் தளிர் சுரேஷ் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம்சேகுமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment