29 Mar 2014

விடியல்,,,,,,,,,,

         இம்மாதியான பேச்சுக்கள்தான் உறவுகளுக்கும்,நட்புகளுக்கும்,    
         தோழமை     களுக்கும்பரஸ்பரம்மு கம்பார்த்துக்கொள்ளுதலுக்கும்   
        ஆரம்பப்புள்ளியாய் அல்லதுநெசவிடலாய்அமைந்து போகிறது .
தங்கச்சி என்றழைத்தவாறேதான் வருகிறாள் அவள்.நேற்றிரவு இர ண்டு தடவை கரண்ட்ஆப்ஆகிப்போகிறது.இரவு2.00 மணியிலிந்து 1.00 மணிவரையும்,அதிகாலை4.00மணியிலிருந்து5.00மணிவரைக்கும்/  இதில்தூக்கம்காணாமல் போய்விட்டது.

எப்போதுமேசனிக்கிழமைஇரவுகளில்கொஞ்சம்தாமதமாகதூங்குவதுதான் வழக்கம்.
நேற்றிரவு அரை நாளின் அலுவலகம் முடிந்த அலுப்பில் வீட்டுக்கு வரும் போது மதியம் மணி மூணு இருக்கும்.

இவன் வரும்வரைமனைவியும்சின்னமகளும்கூடசாப்பிடவில்லை.  கேட்டதற்குதாமதமாகத்தான் சாப்பிட்டதாகச்சொன்னார்கள்.

சின்னவளுக்கு இன்று பள்ளி விடுமுறை. ஆனால் “சிலிப்டெஸ்ட்” இருக்கிறது எனச்சென்றாள்.9 மணிக்கு ச்சென்று 11 மணிக்கு வந்து விட்டாளாம்.அவள்வருகிறவேளைநான்அலுவலகம்சென்று விடுகிறேன். வந்துமாலைகிரிக்கெட்விளையாடப்போகவில்லை.

பரிட்சைவரை கிரிக்கெட் டீமுக்கு லீவு என்றாள்.விளையாட்டில் கவனம் குவிகிற போது பரிட்சையில் மார்க் குறைந்து போகக்கூடும் என பள்ளி நிர்வாகம் செய்த ஏற்பாடு இது.

8லிருந்து+2வரைஎல்லாபள்ளிமாணவ,மாணவிகளுக்கும்விளையாட் டிலிருந்துவிதிவிலக்குஅதில்இவனதுசின்னமகளுக்குசந்தோஷமான சந்தோஷம், அவளேதான் விரும்பி அந்த விளையாட்டு டீமில் சேர்ந் தாள்.இப்போதுஅவளேதான் விளையாட்டு இல்லை என்றதும் சந்தோஷம் கொள்கிறாள்.தினசரி காலை 6.30 மணிக்கெல்லாம் பேட் டை எடுத்துக்கொண்டுக்கிளம்பிவிடுவாள்.விளையாண்டு விட்டு பள்ளியிலிருந்து 8.00மணிக்குகிளம்பிவீடு வந்து சாப்பிட்டு விட்டு திரும்பவுமாய் 9.00 மணிக்குள்ளாகப் போக வேண்டும். நல்ல விளை யாட்டிது என்பாள் அவளின் தாய்.இவன்தான் “விடு ஒன்றைப்பெற ஒன்றை இழக்க வேண்டி வரும்தான்எனச் சொல்லி சமாளித்து வக்காலத்து வாங்குவான். நல்லாப்போனா,ஒண்ண வுட்டுஒண்ணு சம்பாரிக்க,ஒடம்பவுட்டுறாம ஆமாம் என்பாள் அவளும் விடாமல்/

நெருக்கிக்கேட்டதில்பிள்ளைகளைவிளையாட அனுப்புகிற எல்லாப் பெற்றோர்களும்சொல்லிஅலுத்துக்கொள்கிறசொல்இதுவாகத்தான்  இருக்கிறது எனத் தெரிகிறது.

ஒருவீட்டில்அம்மாஎன்றால்இன்னொருவீட்டில்அப்பா,,,,,,,,,வித்தியாசம் அவ்வளவே/
திரும்பத்திரும்பசெய்கிறஒரேவேலைஅலுத்துப்போகிறதுதானே?என்கிறாள் சின்னவள்.அதுவும் வாஸ்தவமே/

அவளின்வாஸ்தவமானபேச்சுடனும்,மனைவியின்ஆதங்க அலுப்புட னும் வயிறு வீங்க சாப்பிட்டு விட்டு படுத்தவன் நன்றாக தூங்கிப் போனான்.ஆழங்களில் இழுத்துச் சென்ற கனவு இவனது மனதுக்கு, இசைவானதாயும், நன்றாகவுமாய்/

தூங்கிஎழுந்ததும்ஒருடீ,மனைவிகொடுத்ததுநன்றாகவேஇருந்தது.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,போல/
எனஇவன்சொன்னநேரம்இடுப்பில்கைவைத்து முறைக்கிறாள்.

மனைவி.டீ,மனைவி,இன்னமும்எழாமல் புத்தகத்தை பிடித்தவாறே தூங்கிப் போயிருந்த மகள்.ஏதோ ஒரு பழைய பாடலை காட்டிய தொலைக்காட்சி,சுழன்றுகொண்டிருந்தமின்விசிறி.கம்பிகளில்கறுப்புப்  பெயிண்ட் காட்டிய ஜன்னல் கதவு,எரிந்துகொண்டிருந்த ட்யூப் லைட், நடை,வராண்டா என காட்சிப்பட்ட வீட்டின் நகர்வு .

டீயை குடித்து முடித்த மாலையை நகர்த்தி இரவை உறையச்செய்த நேரம்,சரியாகத் தூங்கவில்லை.10.30 மணிக்கு சாப்பிட்டுவிட்டு 11.30 க்கு படுத்து தூக்கம் வராமல் புரண்ட பொழுது 12.00 மணிக்குப் போன கரண்ட் 1.00 மணிக்குத்தான் தன்னை பதித்துக்கொண்டது.

பின்பு எந்நேரம் தூங்கிப்போனான் எனத்தெரியவில்லை.குறைந்த பட்சம்1.30மணிஆகியிருக்கலாம்.திரும்பவும்அதிகாலை4.00மணிக்கு போனகரண்ட்5.00மணிக்குத்தான்வருகிறது. அப்போது வந்த விழிப்பு எப்போது தூக்கத்தில் மையமிட்டது எனத் தெரியவில்லை. தூக்கத் தில் மையமிட தாமதமானது கூட பரவாயில்லை. உடலெல்லாம் வேர்த்தும்,கசகசப்பாயும் இருந்ததுவே பெரிய எரிச்சலாய்/

இரண்டாவது தங்கச்சி என்ற கூப்பிடலுக்கு விழித்து விட்டான். இவனது மனைவி அடுப்படியிலிந்து புடவையில் கையை துடைத்த வாறே செல்லவும்,வெளியிலிருந்து மூன்றாவதுமுறையாக“தங்க ச்சி”கேட்காகமலிருக்கவும்சரியாய் இருந்தது.

"என்னக்காநல்லாயிருக்கீங்களாஇவன்மனைவி.நல்லாயிருக்கேன் தங்கச்சி,

கடைக்குப்போனேன்,அப்பிடியே ஒன்னய பாத்துட்டுப்போகலாமுன் னு  வந்தேன்  தங்கச்சி” என்றாள் வந்தவள்.


எங்களது பக்கத்து தெருவில் குடியிருக்கிறாள்.60பதைஎட்டி நெருக்கி யிருக்கும் வயது.ஆனால் வயது தெரியவில்லை.இவனது அம்மா வைவிடபத்துவயது குறைவாக இருக்கலாம்.அவ்வளவே.என நினை த் துக்கொண்டிருந்த நேரம் “தங்கச்சி திருச்செந்தூர் போறம்,ஒரு டூரு வர்றியா”என இவனது மனைவியிடம் சொல்லியும் கேட்டும் கொண்டிருந்த நேரம் இவனுக்கு விழிப்பு வந்து விட்டது.

எழுந்திரிக்கமனமில்லாமல் படுக்கையிலேயே புரண்டு கொண்டி ருந்தான்.”இன்னும் தூங்குறாரா வீட்டுக்காரரு?ஆமாம் ஞாயித்துக் கெழம கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும் படுக்கைய விட்டு எந்தி ரிக்க/

அதான் தங்கச்சி ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபா டிக்கெட்டு, சாப்பா டெல்லாம் நம்மதான். காலையில இட்லிசெஞ் சிகொண்டு போய்க் கிறவேண்டியதுதான், வீட்டுலபிரிஜ்இருக்குல்லப்பா, நைட்டேமல்லி சட்னி அறைச்சிவச்சிக்கிறவேண்டியதுதான்.

மதியம் அங்கபோயி,,,,,,,ஹோட்டல்ல சாப்பாடு, சூப்பர் சாப்பாடுப்பா,  அப்பிடியே நைட்டுக்கு எங்கயாவது கடையில ரெண்டு இட்லி கிட்லின்னு வாங்கி சாப்டுட்டுவீட்டுக்குவந்துரவேண்டியதுதான்.

போனமாசம்தான்காசி,பத்திரிநாத்,புத்தகயான்னுபோயிட்டுவந்தேன்,
நல்லஇருந்திச்சிப்பா,மகன்மெட்ராஸ்லவீடு வாங்கிருக்கான்,போன வாரம்தான் பால் காச்சுனோம்,
மகாபலிபுரம்ரோட்டுல வீடு,அப்பர்ட்மெண்ட் வீடுதான்.இப்பவிக்கிற வெலையிலஎங்கயெடம் வாங்கி எப்பிடி கட்டி முடிக்கிறது. அதான் கட்டுன வீடாப் பாத்து வாங்கியாச்சு,

எட்டாவதுமாடியிலநின்னாமகாபலிபுரம்கடல்காத்துசும்மாசூப்பராஅடிக்குதுப்பா,காருவாங்கனுன்னாங்க,

நான்தான் இப்பயிருக்குற டவுன் ட்ராபிக்கில கார்ல எறும்பு ஊர்ந்து போன மாதிரி போறதுக்கு பேசாம டூ வீலரே போதும்ன்னு சொல்லீட் டேன்” என்றாள்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் அங்கயிருந்து வந்தேன்.வீட்ல பின் பக்கம் நிக்கிற வேப்பமரத்த வெட்டுனம்.எங்க ஊர்லயிருந்து தான்ஆள்கவந்துருந்தாங்கவேலைக்கு.ஊர்லயிருந்துஆள்கள்வந்துட் டாசாப்பாடுகொண்டு வர வேணாமின்னு சொல்லீருவேன்,

ஒரு ரசம் ,கூட்டு,கத்திக்கா சாம்பாருன்னு செஞ்சு போட்டேன்.இன் னும் கூடமிச்சம் கெடக்கு,பிரிஜ்ஜில வச்சிருக்கேன்,காலையில அதா ன் சாப்பாட்டுக்கு.ரெண்டு ஆள்க வந்தாங்க,எண்ணூறு ரூபா சம்பளம். வெறகுஒரு 1100 ரூபாய்க்குப்போச்சு.இது போக வண்டி வாடகைஇருக்கு,

ஒங்கமரத்தக்கூடவெட்டனும்ன்னுசொன்னீங்களே,வெட்டனும்ன்னாக்
கூடசொல்லுங்கப்பா,வரச் சொல்லுவோம்.நல்லாவேலசெய்யி வாங் க. என்னயக் கேட்டா இதவெட்டக்கூட வேணாம் மேலபோற கொப்பு களமட்டும்வெட்டி எடுத்துட்டுவுட்டுருங்கப்பா,அதுவாட்டுக்கு நல்லா பெருக்கட்டும்.பின்னாடிநல்லவெலைக்குப் போகும்.எதுக்குவீணாப் போயிவெட்டணும்என்றாள்.சரிப்பா வரேன்.

கொஞ்சம் கறி எடுத்தேன்.எனக்கு இந்த சிக்கனெல்லாம் புடிக்கிற தில்லப்பா, மட்டன்தான்.மாசத்துக்கு ஒருதடவ அதுவும் கால் கிலோ மட்டும்எடுப்பேன்.அதுவே ரெண்டு நாளைக்கு கெடக்கும், பிரிஜ்ஜில வச்சி,வச்சி சாப்பிடுவேன். சரிப்பா டூர் வர்றதுன்னா கொஞ்சம் முன்னக்கூட்டிசொல்லீருங்கப்பா.50ரூபாஅட்வான்ஸீ,நான் கெளம்பு றேன்”.என அந்த இடத்தை விட்டு நகன்றாள்.

10 வருடங்களாக வீட்டைவிட்டு வெளியில் வராமல் தனது உடல் நலமில்லாத கணவணை அவர் மரணிக்கிற காலம் வரை பார்த்து அவரே தன் உலகம் என இருந்த அவள்/

அவள் சென்றதும் படுக்கையை விட்டு எழுந்து வெளியில் வருகி றேன். பொழுது நன்றாக விடிந்திருந்தது.

8 comments:

 1. அவர்களின் விருப்பத்திற்கு மறுப்பேது... ஒன்றைப்பெற ஒன்றை இழப்பதும் உண்மை தான்... நம்மை சமாளித்துக் கொள்வதும் உண்மை தான்...

  அவர்கள் மகனிடம் செல்லக் கூடாதா...?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார். நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. விருப்பத்திற்கு மறுப்பு ஏது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெய்க்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருட்துரைக்குமாக

   Delete
 3. Replies
  1. நன்றி வாக்களிப்பிற்கு சார்/

   Delete
 4. அடைந்து கிடக்கும் பெண்மை! வெளி உலகு காணும் போது முதலில் பதுங்கினாலும் பின்பு பாய்ந்து செல்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

   Delete