8 Apr 2014

நட்பு மூச்சு,,,,,

அதற்கென்னதெரியும்?நல்லதுமில்லாமல்கெட்டதுமற்றுஓடித்திரிகிறது அதன் போக்கில்/
செக்கு சிவலிங்கம் என்கிற சொல்பதத்தை எல்லாம் தாண்டி சுத்தம், அசுத்தம் என்கிற பேதமற்ற பொது வெளிகளில் நுழைந்து வெளியே றி தன்னை பதிவுசெய்து கொள்கிறது அன்றாடங்களில்.
காலை,மாலை,இரவு மற்றும் மிக முக்கியமாக மதியம் என எந்நேர மும் நான்கு அங்குலத்திற்கும் குறைவான நாக்கை தொங்க விட்டுக் கொண்டும், நான்கு கால்களால் தெருவளந்து திரிகிறது.
ப்ரெவுன்கலர்மென்முடிகள்போர்த்தியஉடம்பும்,வாய்நுனியில்கறுப்புக்
கலர்பூசிக்கொண்டுமாய் வீடுகளின் முன்னும், பின்னும் பரந்திருக் கிற வெளியிலும், தாரும், சிமிண்டும் போர்த்திக் கொண்ட வீதிகளி லுமாய் நடமாடித்தெரிகிறது அது.
உணவு வேளைக்கு பின்பாக அனேகமாய் எல்லோரும் தூங்கிப் போ கிற அல்லது சற்றே ஓய்வெடுத்துக் கொள்கிற மதிய நேரமாய் தனது கூட்டத்தை தேடி நட்புக்கரம் நீட்டி (இல்லையில்லை நட்பு மூச்சு) ஓடிவிடும்.
எங்கிருந்துதான்அத்தனைவந்துசேரும்எனத்தெரியவில்லை.வெள்ளைக்
கலரில் குட்டையாகவும்கறுப்புக்கலரில்கால்கள் வேறொன்று பூசியி ருக் கவும்,ப்ரெவுன் கலரில்ஒன்றும்எனகலவையாய் உயரமாயும், குட்டையாயும்,உடல்பருத்தும்,மெலிந்துமாய் பல ரகங்களில் காணப் ப டுகிற அவைகளோடு விளையாடிவிட்டும்,வீதிகள் தோறும் படை பரிவாரங்களுடன் சுற்றித்திரிந்து விட்டும்,எங்காவது கிடைப்பதை சாப்பிட்டு விட்டுமாய் வருகிறதுதான்.
கறுப்புக்கலரில் வெள்ளைப் புள்ளிகளும், கால்களில் பாதம் ஒட்டி வெள்ளை பூத்திருந்தஅந்த குட்டை நாய் இதற்கு மிகவும் பிடித்துப் போகும்.
அத்தனை கூட்டத்திலும் அது செய்கிற லீலைகளையும், சேட்டைக ளையும் மற்றவைகள் இடைஞ்சல் செய்வதோ,அனுமதி மறுப்பதோ இல்லை.அடுத்த வீதியில் இருக்கிற நான்காவது வீட்டு அம்மாள் வீட்டு நடையில் இடது ஓரமாய் வைக்கிற பழசும்,புதுசும் கலந்த சோ றும்அதன்அருகில்ஈயத்தட்டில்ஊற்றி வைக்கப்பட்டிருந்த  தண்ணீ ரும் பெரும்பாலான  நேரங்களில் இவை இரண்டுக்குமட்டுமே உதவி யிருக்கின்றன.
ஆசைஆசையாகவும்அன்பொழுகவுமாய்வளர்த்தநாயொன்றுஇறந்து
போனதினத்தன்றின்மறுநாளிலிருந்துஅவள்இதுமாதிரிசெய்வதை வழக்கமாக்கிக்கொண்டாள் என சொல்லிச் செல்கின்றன தகவல்கள்.
அதுவீட்டு நாய்கள் வீதி.நாய்கள் என ஓடித்திரிபவைகள் எது சாப்பிட் டாலும் சரியே என்பது அவளது கணக்கு.வைத்த சோறும் தண்ணீரும் அப்படியே தீண்டப்படாமல் இருக்கிற நாட்களில் அவள் மனம் சூம்பி கவலைக் குள்ளாகிப்போவாள் என்பது உறுதி என்கிறார்கள் அக்கம் பக்கத்தவர்கள்.
விளையாடி முடித்து விட்டும்,சாப்பிட்டு விட்டும்,தனது பிரியத்தை அங்கேயே விட்டு விட்டுமாய் வருகிற அது குட்டியாய் இருக்கிற ஒருதினத்தின் காலை நேரமாய் கொண்டு வந்தார்கள்.
பணம்கொடுத்தெல்லாம்வாங்கவில்லைஎங்களதுகம்பெனியின்பக்கத்து
வீட்டுநாய்போட்டகுட்டிஇது.நான்கைந்துஇருந்ததால்வாங்கிவந்தேன்,  இரண்டை,இன்னொன்றை ஒருவருக்குகொடுத்துவிட்டேன், இப்படி ஒன்றை வளர்ப்பதுஒரு புண்ணியமே எங்களுக்கு” என்றார் நாயை கொண்டு வந்த எதிர் வீட்டுக்காரர்.
பால்,பிஸ்கட்,மற்றும்,மற்றும்,,,,,,,,,,,,என எதைக்கொடுத்தும் சாப்பிட மறுத்தும்,கழுத்தில் கட்டப்பட்டிருந்த பெல்ட்டில் இணைத்திருந்த கயிறை இழுத்தவாறும் ஒரு இரவு முழுவதுமாய் கத்திக்கொண்டிருந்தது.
சிறு குட்டியின் மென் கத்தலாய் இருந்த அது சமயத்தில் மனம் பிளந்து ஊடுருவி இம்சை பண்ணி விடுவதாய் இருந்தது.அந்த வீதி முழுவதிலுமாய் அன்று இரவு யாரும் தூங்கி விடவில்லை.
தூக்கம் தொலைத்த வீதி என தினசரிகளில் செய்தியாகாத மறு நாளில் நாயை வைத்திருந்த எதிர் வீட்டுக்காரர் “ஒரு ராத்திரிதான் அப்புறம் பழகிப்போகும் சாப்புட ஆரம்பிசுரும் கத்தாது.இப்ப வந்து பாருங்க,குடுத்த பிஸ்கட்டையும்,வச்ச பாலையும் குடிச்சிட்டு அது வாட்டுக்குகெடக்கு” என அவர் காண்பித்த தினத்தன்றிலிருந்து தொட ர்ந்து மூன்று நாட்கள் அந்த வீதியில் யாரும் தூங்கவில்லை.
இப்படி வீதியிலும்,அக்கம் பக்கத்திலுமாய் எல்லோரது தூக்கத்தை யும் தொலைத்த அது தன் கத்தலை நிறுத்திய நான்காம் நாளிலிருந்து வளர்ந்து பெரிதாகி தன் ஆகுருதி காட்டியும், தனது குறைப்பாலும், ஆக்ரமிப்பாலும் இந்த வீதியையேதன்வசப்படுத்திக்கொண்டு ப்ரவுன் கலர் உடலும்,வாய் நுனியில் கறுப்பு பூசியுமாய் திரிகிற அதற்கு என்னதெரியும்எனநினைக்கிறகணங்களில்"எனக்கும்தெரியும்எல்லா மும்” என காலை,காலை சுற்றி வருகிறது/

2 comments:

ezhil said...

இயல்பான ரசிப்பு தெரிகிறது

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/