2 May 2014

அடுப்புக்கல்,,,,,,

GIF
வந்துவிடுகிறபின்மாலைஅல்லது முன் மாலைபொழுதுகள் பசியாய் மாறி உருவெடுக்கையில் கொண்டுபோகாதசாப்பாட்டிற்குமாற்றாய் மாரிக்கண்ணு கடை திகழ்கிறது.சமயத்தில் ஆபத்பாந்தவனாயும் கூட/ 
ஒரு மனிதன்,ஒற்றை அடுப்பு ,ஒற்றை புரோட்டாக்கல்,,,,,,,, இதுவே அவரது கடையின் தோற்றமும்,பதிவும்/செம்மண் வைத்து பூசப் பட்டிருந்த அடுப்பு,அதன் மேல் வெந்து கொண்டிருக்கிற புரோட்டாக் கல், எரிந்து கொண்டிருக்கிறஅடுப்புஅதன்முன் கட்டம் போட்ட கைலியும்,பனியனுமாய் மாரிக்கண்ணு. 
நீண்டு செல்கிற சாலை தன் பதிவாய் கண்மாய்க்கரையின் மேட்டில் அவரது கடையை விதைத்து விட்டோ,ஊன்றி விட்டோ சென்று விட்டது போலும். 
அவரது கடையை கடந்தால் இன்னொரு கடையும் உண்டு .அவரது கடையின் எதிர் பக்கமாய் இருந்தது அது. ஆனால் அதில் சென்று சாப்பிடுவது என்பதெல்லாம் ஆசைப் பட்டாலும் எங்களால் இயலாத காரியமாகவே.பழக்கம்தான் அதற்குமுக்கிய காரணமாய்/ அப்படி எங்களில் யாராவது கடையை அவரது கடைதாண்டிச் சென்று டீ சாப்பிட சென்று விட்டால் மறு நாட்களில் அவரதுவெளிப்படையான புலம்பலும்ஆற்றாமையும் வெளிப்பட ஆரம்பிக்கும் ஆதங்கமான பேச்சாக/ 
“நம்மளும் நல்லா ஷோ பண்ணி கடை வச்சிருந்தா இங்க சாப்பிட வருவாங்க, நாம இப்பிடி ஓட்டக் கடை வச்சிருக்குறதால நம்ம கிட்ட சாப்பிட வரமாட்டேங்குறாங்க என்பார்.  
அவரது பேச்சு அப்படி வெளிவந்த நாளன்றிலிருந்து மறுநாள் முதல் வேறு கடையை நினைத்துப்பார்க்கிற மனதைரியம் எங்களுள் எட்டிப் பார்த்ததில்லை.நீண்ட நாட்களாய் எங்களது அலுவலகத்திற்கு டீக் கொடுப்பவர்.அன்பும் வாஞ்சையும் கொண்ட மனிதர். அது இருந்தால் மட்டும் வியாபாரத்திற்கு போதாது என்பதுஅவருக்குஏனோ புரிவதில் லை.அல்லது எங்களுக்கு அதைசொல்லுமளவுதைரியமும்இல்லை. அதனால்அவரது குறை அவருக்கு தெரியவில்லை என்பதில்லை. அவ்வளவுதான் அவருக்கு என பேசிக் கொள்வார்கள். 
மதியப் பொழுதுகளில் 12 மணி டீ அவரது கடையிலிருந்து வருவது தான் வருவார், “சார் டீ,” என்கிற ஒற்றைச்சொல்லை தாங்கி நீள்கிற கரத்துடன் டீயை தந்து விட்டுப்போய் விடுவார். 
அப்படியொரு பிளாஸ்டிக் டம்ளர்அவருக்குஎப்படிகிடைக்கும்என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே/ மிக மெலிதாகவும் ரொம்பவும் சின்னதாயும் இருக்கும் டம்ளரைப் பிடித்துத் தூக்க முதலில் ஒரு இரண்டு நாட்களாவது பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியாவது வெளிப்படையாகஎடுத்துக்கொள்ளலாம்அவர்கொண்டுவருகிறடீயைக் குடிக்கிற தைரியத்தை வரவழைக்க எங்கு போய் பயிற்சி எடுப்பதெனதெரியவில்லை.விசாரித்துக்கொண்டிருக்கிறேன். 
தெரிந்தவர்கள் சொல்வார்கள் என.சொல்லட்டும் அதுவரை காத்தி ருக்கலாம் பொறுமையாக என்பதே இங்கு சொல்லப்பட வேண்டி யதாக/ 
அப்படியெல்லாம் விறகுகள் அவருக்கு எப்படி கிடைக்கும் எனத் தெரியவில்லை.எல்லாம்வேர்முடிச்சுவிழுந்தவைகள்.சீமைக்கருவேலந்தூர்கள்முண்டும்முடிச்சுமாக/அவைகளில்சிலவற்றில்மனித முகம் பார்க்கலாம்.சில சமயங்களில் வேறொருன்றும் உருப்பட்டுத்தெரியும். 
அவர் பிசைகிற புரோட்டா மாவு அந்த ஊரையும் தாண்டி பக்கத்து ஊருக்கும் சரியாகிப் போகும் போலும். அப்படி ஒரு பிசைவு. பெரிய, பெரிய கடைகளில் கூட இப்படி மாவு பிசைந்து நான் பார்த்ததில்லை. விட்டால்இருபத்திநான்குமணிநேரமும்மாவைபிசைந்துகொண்டிருப்பார் போலும்கடையினுள்ளே நீண்டு விரித்து போடப்பட்டிருக்கிற கடப்பக்கல்பதித்தமேஜைகள்இரண்டுடானாப்படகாட்சியளிக்கஅதன் முன்பிளாஸ்டிக்ஸ்டூல்கள்கலர்களில் அமர்ந்திருக்கும். கடைக்கு வெளியே ஒருபிளாஸ்டிக் வாளியில் வைக்கப்பட்டு இருக்கிறநீரில் கை கழுவிக் கொள்ளலாம்,பிளாஸ்டிக்வாளிகூடஇல்லைஅது. லாரிகளுக்கு ஊற்றுகிற எஞ்சின் ஆயில் டப்பா அது.அதில் பாதி அல்லது பாதிக்கும் குறைவாக நிரம்பி இருக்கிறதண்ணீரில் மஞ்சள்க்கலரில்ஒருபிளாச்டிக்டம்ளர்தண்ணீரில்மிதந்துகொண்டேகண்சிமிட்டும்.அதில் ஒட்டி இருக்கிற அழுக்கை சகித்துக்கொள்ள தனி மனம் வேணும். அதில் மிதக்கிற இலைகளைக் கூடதள்ளிவிட்டு விட்டுகைகழுவிக்கொள்ளலாம்.ஆனால் தண்ணீரில் மிதக்கிற அழுக்கையும் வாளியின் அழுக்கையும் சகித்துகொள்ள ஒரு தனி மனம் வேணும்.அது அங்கு சாப்பிட வருகிற எத்தனை பேரிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. 
மாரிக்கண்ணுவிடம் கேட்டால் “கடையின் கூரைக்கு மேல் இருக்கிற மரங்கள்இரண்டுஉதிர்ப்பவைதான்,இவைகளைநான்எவ்வளவுகூட்டி ப்  பார்த்தபோதிலும் திரும்பத்திரும்ப வந்து விடுகிறது என்ன செய்ய” என்கிறார். “இது பரவாயில்லை,சாப்புட்டு இருக்கும் போது யெலை யில வந்து விழுந்துருது சார் ,என்ன செய்ய ,,,,,சொல்லுங்க” என்கிற மாரிக்கண்ணு புரோட்டாக்கடை மட்டுமில்லாமல் டீக்கடை, கோழிக் கறிக்கடை என எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். 
”பின்னஒடம்புலதெம்புஇருக்கும்போது நாலுகாசுபாத்துக்கிட்டாதான் சார்.30 வயசாகப் போகுது எனக்கு. ரெண்டு பொம்பளப் புள்ளைங்க நிக்குது.இப்பத்தான் ஒருத்திஒண்ணாப்புபோயிருக்கா,இன்னொன்னு க்குரெண்டுவயசாகுது.அதுகளுக்காகத்தான்சார்இத்தனையும். 
என்னதான் மூச்சப்புடிச்சி கட்டி இழுத்துப்பாத்தாலும் சமயத்துல கயிரு அந்து போகுது சார்.முன்ன மாரி இல்ல சார் யேவாரம். அந்தா அந்த எதிர்க்கடை வந்ததுலயிருந்து நமக்குக் கொஞ்சம்யேவாரம் டல்லாயிருச்சி.போதாதுக்குபக்கத்துலயேவெனைய வச்சிருக்கேன் “.என பக்கத்து வீட்டுக்கார்ரை கைகாட்டுகிறார். 
அவர்பழையஇரும்பு வியாபாரி.பெயர்தான் பழைய இரும்பு வியா பாரம்.பழையபேப்பர்,அட்டைப்பெட்டி,பைகள்,இத்துப்போனசைக்கிள், பழையமோட்டாரின்உதிரிப்பாகங்கள்,சாக்குகள், இத்துடன்பழைய இரும்பையும்சேர்த்துக்கொள்கிறார்இங்கிருந்து20கிலோமீட்டர்கள்வரை சுற்றி இருக்கிறஊர்கள்தான்அவரதுவியாபாரஇலக்குஇதுதவிரயாராவது வரச்சொன்னால் கொஞ்சம் தூரமானாலும் கூட போய் வாங்கி வந்து விடுவார்.  
அவரதுவாகனமானசூப்பர் XLல் காலையில்8மணிக்குவீட்டை விட்டு கிளம்புவார். மாலை மூணு அல்லது நாலு மணிக்கு வீடுதிரும்புவார். வாங்கிய பொருட்களையெல்லாம் ஒன்று சேர்க்கிற இடமாகவும், தரம்பிரிக்கிற இடமாகவும் அவரது இடம் இருக்கிறது. பாட்டில் தனி ,பேப்பர் தனி,அட்டை தனி என ரகம் பிரித்து கட்டுப்போட்டு அடுக்கப் படுகிற தருணங்களிலெல்லாம் மாரிக்கண்ணுவின் டீதான் அவருக் கு சக்தியூட்டுகிற பானமாக/  
எப்போதாவதுஒரு நாள் “ரொம்ப ஆசையாகஇருக்குடாநாக்கு அரிக்கு துடா” என சால்னா நிறைய ஊற்றி மூன்று புரோட்டாக்களும் இரண்டு ஆம்லேட்டுகளுமாய் வாங்கிச் சாப்பிடுவார். சமயத்தில் எப்போதாவது கோழிக்கறிவாங்குவார் அவர் சாப்பிடுவதற்கு மாரிக் கண்ணுஎப்பொழுதுமேகணக்குப்பார்த்துகாசுவாங்கியதில்லை.அவரும்வஞ்சகமில்லாமல்”நம்மளமாதிரிஆளுகளுக்குநம்மளப்போலவுகதான்ஆதரவு”எனபையிலிருந்துரூபாயைஅள்ளிக் கொடுப்பார். அது ஒருகணக்கு,அள்ளிக்கொடுத்தபோதுஅவரதுகையிலிருந்துஅளவுக்கு மீறி வந்ததில்லை. குறைந்தும்போனதில்லை மாரிக் கண்ணு பெண்எடுத்தஊர்தான் அவரது ஊரும். பிழைப்பிற்காய் இங்கு வந்து விட்டார். 
“நேத்துப்பைய சார் இவன்,இவன் பொண்டாட்டி சின்னப் புள்ளையா இருக்கும்போது ஏங்தோள் மேலயும் மார் மேலயும் போட்டு வளத்தேன்சார்,இப்பஏன்முன்னாடியே நெஞ்ச தூக்கிட்டி அலையுறான். 
ஏங்வீட்டுப்பக்கத்துலஇருக்குறமரங்கரெண்டுஇவனுக்குயெடைஞ்சலா இருக்கு -துன்னு சொல்லி ஏன் வீட்டுப்பக்கத்துல இருக்குற ரெண்டு மரங்களையும் வெட்டச் சொல்றான் சார்.கிட்டத்தட்ட அதுக ரெண்டும் ஏன் உசுருமாதிரி. நான் என்னத்தச் சொல்ல, அவன் மாமனார்கிட்டப்போய்தான் ஒரு நா பேச்சு வாக்குல சொன்னேன், அதுக்குஎப்பிடி நீங்க அவர்கிட்டசொல்லப்போச்சுன்னுமல்லுக்கு நிக்குறான் சார்.நானும் எவ்வுளவுதான் பொறுக்க சொல்லுங்க, மனுசந்தான நானும். சின்னப்பயன்னு பாக்காம பதிலுக்கு சத்தம் போட வேண்டியதுதான் இருக்கு. பின்ன என்னசெய்யச் சொல்லுங்க, எனக்கு மாப்புளத்தான் வேணும் அவென், மாமென்னு அவன் என்னய நெனைக்காதப்போ நான்மட்டும் ஏன்சார் அவனமாப்புளைன்னுதயவு காண்பிச்சு மருகி நிக்கணும் சொல்லுங்க”/என்கிறார். 
இதுவும் மாரிக்கண்ணுவுக்குள் சமீபகால வருத்தங்களில் ஒன்றாக சேர்ந்து கொண்ட நாட்கள் ஒன்றில்தான்அவரதும னைவியையும், பிள்ளைகளையும்பார்க்கநேர்ந்தது. பிள்ளைகள் இருவரும் கவுன் அணிந்த குட்டிப் பூங்கொத்துக்களாய் நின்றார்கள். மனைவி பூப் போட்ட சேலையில் அப்புராணியாய் நின்று கொண்டு சிரித்தார். 
அவர்களனைவரையும் ஒன்றாக பார்த்த நாளன்றிலிருந்து நான் வேறொரு கடைக்கு போக நான் எண்ணியதில்லை.

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காட்சிகளைக் கண்முன்னே ஓவியங்களாய் தீட்டும் எழுத்துக்கள் நண்பரே
நன்றி

கோமதி அரசு said...

//அப்படியொரு பிளாஸ்டிக் டம்ளர்அவருக்குஎப்படிகிடைக்கும்என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே/ மிக மெலிதாகவும் ரொம்பவும் சின்னதாயும் இருக்கும் டம்ளரைப் பிடித்துத் தூக்க முதலில் ஒரு இரண்டு நாட்களாவது பயிற்சி எடுக்க வேண்டும்.//

உண்மை உண்மை.

லாரிகளுக்கு ஊற்றுகிற எஞ்சின் ஆயில் டப்பா அது.அதில் பாதி அல்லது பாதிக்கும் குறைவாக நிரம்பி இருக்கிறதண்ணீரில் மஞ்சள்க்கலரில்ஒருபிளாச்டிக்டம்ளர்தண்ணீரில்மிதந்துகொண்டேகண்சிமிட்டும்.அதில் ஒட்டி இருக்கிற அழுக்கை சகித்துக்கொள்ள தனி மனம் வேணும்.//
பாதையோர இட்லிகடைகள், புரோட்டா கடைகளில் பார்த்து இருக்கிறேன் இதை எல்லாம் பார்த்தும் அங்கு சாப்பிட தனிமனம், பெரிய மனம் வேண்டும் தான்.


பிள்ளைகள் இருவரும் கவுன் அணிந்த குட்டிப் பூங்கொத்துக்களாய் நின்றார்கள். மனைவி பூப் போட்ட சேலையில் அப்புராணியாய் நின்று கொண்டு சிரித்தார். //

இதைதான் முகதாட்சணியம் என்பார்களோ!
உண்மைகளை அப்படியே சொல்கிறீர்கள். மிக அருமை.

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு மேடம்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

unmaiyanavan said...

"//“நம்மளும் நல்லா ஷோ பண்ணி கடை வச்சிருந்தா இங்க சாப்பிட வருவாங்க, நாம இப்பிடி ஓட்டக் கடை வச்சிருக்குறதால நம்ம கிட்ட சாப்பிட வரமாட்டேங்குறாங்க என்பார். //" - உண்மை தான். மக்கள் பகட்டுக்கு தானே மயங்குகிறார்கள்.

vimalanperali said...

வணக்கம் சொக்கன் சுப்ரமணியன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/