25 Jun 2014

எனக்கு 74 அவருக்கு 76,,,,,,,,,,,,,,,

வீட்டின் பக்கவாட்டு வெளியின் வலது முனை ஓரத்தை காண்பித்து அங்கு அமர்ந்து தாத்தாவுக்கு சவரம் பண்ணிக்கொள்ள அனுமதி கேட் கிறாள் பாட்டி.
சமீபகாலமாய்அவர்களுக்குஅதுஒருபெரும்பிரச்சனையாகவேஆகிப் போனது.3மாதங்களுக்குஒருமுறையோ அல்லது இரண்டரை மாதங் களுக்கு ஒருமுறையோஏற்படுகிறசங்கடநிகழ்வாகவேபதிவாகியும் போகிறது அது.
“இந்த79வயதில்அதைப்பற்றியெல்லாம்கவலைப்படாவிட்டால்என்ன? அப்படியேதான் இருந்துவிட்டுப் போகட்டுமே,/
“இப்பொழுது என்ன திரிந்து தொங்குகிற ஜடாமுடியுடனோ அல்லது தாடியுடனோகாட்சிஅளிக்கிறஅசிங்கத்துடனாஅலைந்துகொண்டிருக்
கிறார்.
“குறைந்த அளவே இருக்கிற முடி,முகம் மூடியிருக்கிற தாடி,சரிந்து தொங்குகிற மீசை என இருக்கிற எதுவும் அவ்வளவு மிகையாக தெரியாத போது ஏன் அனாவசியமாக கவலைகொள்ள வேண்டும்?”
“இருந்து விட்டுதான் போகட்டுமே அப்படியே,இதற்காக கடை தேடி, ஆள் தேடி,அவரை பேசி,இவரை பேசி இவ்வளவு காசு தருகிறேன் எனகெஞ்சி கூத்தாடிவீட்டுக்கு வருவதற்கு 60 ரூபாய் கேட்கிறார் கள். கடையில் என்றால் 30 ரூபாயாம்/”
“எந்தக்கடையிலும் ஏறி இறங்க முடியவில்லை இவரால்.படி அவ்வ ளவு உயரமாகிப்போனதா அல்லது இவர்தான் படியில் இவரது பலம் குறைந்து தெரியவில்லை.”
“பிராயத்தில் ஒரு குண்டால் மூட்டையை தலையில் வைத்து 14 படிகள் கொண்ட மர ஏணியில் ஏறி மாடியில் அறையில் அடுக்கு வார்.அப்படி ஏறியவரின் காலில் இருந்த வேகம் இன்று சலூன் கடை வாசலில் ஏற மறுக்கிறது.”
“என்ன செய்ய தம்பி இப்பிடிபண்ணுனா?கம்பு ஊணி நடக்கவும் கூச்சப்படுறாரு.இதுல என்ன இருக்கு தம்பி சொல்லு.நமக்கு எப்பிடி சௌரியமோ,நம்ம ஒடம்புக்கு எது தோதோ அதப்பாத்துக்கிட்டு போக வேண்டியதான,முன்ன பிராயத்துல இருந்த மாதிரி இருக்கணும்னு நெனைச்சா எப்பிடி?அதான் நான் அவர முன்ன நடக்க விட்டு பின் னாடிபோயிக்கிட்டுஇருந்தேன்.ஒருகடைகூடஇன்னும்தெறக்கல, நடந்து வந்த களைப்புக்கு ஆத்தமாட்டாம அந்த வீட்டு வாசல்லதான் உக்காந்துருக்காரு தாத்தா.என சொன்ன பாட்டியின் பெயர் வெங்கிட் டம்மாள் எனவும் தாத்தாவின் பெயர் ராமசாமி எனவும் குடும்ப அட்டையிலும்,வாக்காளர்அடையாளஅட்டையிலுமாய் அடையாளப் படுத்தப்பட்டிருந்த அந்த தம்பதிகள் இந்த தெருவிலிருக்கிற யார் வீட்டு வாசலிலும் அமரவும்,பேசவும், சிரிக்கவும்,பகிர்ந்து கொள்ளவு ம் இங்கே முழு உரிமை பெற்றவர்களாய்/
வீட்டு வாசலில் பேச்சரவம் கேட்டு வெளியில் வந்த போது இடுப்பில் கைவைத்துகொண்டு பாட்டியும்,அவளுக்கு துணையாக அவள் சுமந் து  நின்ற சொற்களுமாய் நெசவிட்டுக்கொண்டு/
சொற்களின் கூட்டாக ,வாக்கியங்களின் கூட்டமைப்பாக அவளிடமி ருந்து வெளிப்படுகிற சொல் தெளிவாக்கம் என்னை அவள் பக்கமு ம்,அவளது பேச்சின் பக்கமும்,அவள் தாங்கி நின்ற முதுமையின் பக்க முமாய் ஈர்த்து பதியனிட வைத்து விடுகிறது.
“இப்பத்தான் ஒரு கடைக்காரன பாத்து பேசீட்டு வந்தேன்.அவனும் வர்ரேன்னு சொல்லீட்டான்,அப்பிடி அவன் வந்தா இந்தா இந்த ஓரத் து ல உக்காந்து சவரம் பண்ணீட்டு முடிய கூட்டி அள்ளிப் போட்டுர் ரேன்”என வீட்டின் பக்கவாட்டு வெளியின் ஓரத்தை காட்டினாள்.
நானும் சரி என தலையாட்டியவாறு தாத்தாவுக்கு வயசு என்ன இருக்கும் என்கிறேன்.
“அதஏன் கேக்குற?அவருக்கு 76.எனக்கு 74. ரெண்டு வயசுதான் வித்தி யாசம்.அதான் பெரிய சங்கடமா இருக்கு இப்ப.ஒரு அஞ்சு வயசு,பத்து வயசு முன்ன,பின்ன இருந்துட்டாக் கூட தெரியாது.”
“கொஞ்சம் ஒழப்பா ஒழச்சிருக்கேன் இவருக்காக?புள்ள மாதிரி யில் ல வச்சி பாத்துக்கிட்டு இருக்கேன்.ரெண்டு பேர்ல யாரு முந்தீர்ரம் ன்னு தெரியல.அவரு முந்தீட்டா நல்லாயிருக்கும்,சரிதம்பி ரொம்ப நேரம் பேசீட்டேன் நீ வேலைக்கு கெளம்பு.” “நாங்களும் போயி ஏதா வது சாப்புட்டு வந்துர்ரோம்,கடைக்காரன் வர்றதுக்கு முன்னால என தாத்தாவின் கரம் பற்றி நடக்கிறாள்.உங்களுக்கு நான் பிள்ளை, எனக் கு நீங்கள் பிள்ளை என”/

14 comments:

 1. வணக்கம்
  கதைக்கரு நன்றாக உள்ளது ஆரம்பம் முதல் முடிவு வரை நகர்த்திச்சென்ற விதம் சிறப்பு.வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்ரூபன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி வாக்களிப்பிற்கு ரூபன் சார்.

   Delete
 3. அருமை மிகவும் நன்றாக உள்ளது சார்.வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா மேடம்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. நூறாண்டு காலம் வாழ்க தாத்தா பாட்டி ,அவர்களுடன் நீங்களும் !
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பகவான் ஜி,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள்... கடைசி வரியில் எல்லாரும் என்ன நினைப்பார்களோ அதை பாட்டி போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது... வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சே குமார் சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 7. மிக்க அருமை விமலன். மனதைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இமா அவர்களே
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete