27 Jun 2014

காயும்,பூவும்,பிஞ்சுமாய்,,,,,

                  
          உடல் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி எழுந்தபோதுயாரும்

         அருகில் இருக்கவில்லை.
மெல்லியபூமலர்ந்ததுபோல் புலரும்அழகான காலை பொழுது. மனை வி எழுந்து தண்ணீர் பிடிக்கப்போயிருப்பாள்.மகன்கள் எழுந்து பள்ளி க்குஆயத்தமாகிக்கொண்டிருக்கக்கூடும்.(இதில்மனைவிதண்ணீர் பிடி க் கப் போயிருப்பாள் என்பது சரி.ஆனால் மகன்கள் இந்நேரம் எழுவது என்பது பிரளயவிஷயம்தான்.)அந்த ஒற்றைபிளாஸ்டிக் குடத்தை தூக்கி இல்லாத இடுப்பில் வைத்து குடம் சரிந்து கொண்டு வர,வர அதை தூக்கி வைத்துக்கொண்டு நடந்து வரும் அழகே தனி.காண கண் கோடிவேண்டும்.கோடியில்ஒன்று குறைந்தாலும் காட்சி பழுது பட்டுப் போகவாய்ப்புஉள்ளது.ஆகவேஜோடிக்கண்களையேகோடிக் கண்களா ய் பாவித்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
அப்பொழுதான் திரும்பி சுவரில் கடிகாரத்தை பார்த்தேன்.மணி எட்டைகாட்டியது.ஐந்து வருடங்களாய்அயராமல் ஓடி,ஓடி நேரம் காட் டிய முக்கோண வடிவ நேரம் காட்டி தனது கம்பெனியின் பெய ரை யும்,காலத்தையும் சரியாகக்காட்டி சுழன்று தேய்ந்து கொண்டிருந்தது டிக்,,,டிக்,,,டிக்,,,என்கிற இருதய சப்தம் மாதிரி ஓசை எழுப்பியபடியும், தான் தொங்கும் சுவரை தொட்டுதழுவி உரசிய படியும்/
வர்ணம்உதிர்ந்து உருவம் காட்டிய சுவர் புதியதாக வர்ணம் க்கே ட்டுக்கெஞ்சிக் கொண்டிருந்தது.எனது பொருளாதாரமும்,நேரமும், அலுவலக லீவும் அமையும் நேரம் பார்த்து வர்ணம் பூசும் வேலை யை முடிக்க வேண்டும்.
(இனி அதற்கு கலர் செலக்ட் பண்ணி,பெயிண்டரை கூப்பிட்டு அவர்க ளுடன்மல்லுக்குநின்று,,,,,அப்பப்பப்பா,,,அதுஒருதனிகலைதான்போலும்.)
வர்ணம் பூசிவிட்டால் அடேயப்பா புது வாசனையும்,தெம்புமாய் வீடு நிமிர்ந்து நிற்கும் இளம் பெண்ணை போல/
தோற்றமும்,நிமிர்வும் சரி,மனம் சுண்டி விடுகிற இளம் பெண்ணின் தோற்றம் இங்கே இடிக்கிறதே?,,,,பூவும் ,பொட்டும் மஞ்சள் பூசிய முகத்தில் பவுடரும் சிவப்பழகு கீரீமுமாய் வந்து தழையத் தழைய நிற்கும் போது அவிழ்ந்து விடுகிற மனதை அள்ளி முடிய முடியவி ல்லை, அல்லது அள்ளி முடிய கூடுதலான நேரமும் காலமும் ஆகிப் போகிறது.
மனைவி இந்நேரம் தண்ணீர் பிடித்து வந்திருப்பாள்.மகன்கள் பள்ளி க்கு சென்றிக்கக்கூடும்.நேற்றுஇரவுபடுக்ககொஞ்சம் தாமதமாகிப் போ னது.
தாமதத்தை உரசிப்பார்த்து நிமிர்கையில் மணி இரவு 1.30. “தெனம் இப்பிடி லேட்டாதூங்குனா எப்பிடி”?தூங்கிப்போன மனைவியின் கன த்த அசரீரி செவிப்பரைகளில் மோத எழுந்து வந்து வம்பாய் தூக்கத் தை அழைத்து கட்டிக்கொண்டு தூங்குபவனாகிப்போகிறேன்.
பின் என்ன,இரவு கண் விழிப்பின் நீட்டிப்பு,காலையில் தாமதத்தில் விடிந்தது.இரவு விழிப்பும்,அதிகாலை தூக்கமும் பழகிப்போன நாட் களின் நகர்வுகளில் இன்றும் ஒன்றாய்.
உதறிய போர்வையின் வர்ணங்கள் அடர் பிரவ்ன் நிறத்திலும்,வெளிர் ப்ரவ்ன்நிறத்திலுமாய்/போர்வையில்ஓடியகோடுகளும்,கோடுகள்தரித் திருந்தவர்ணங்களும்,வண்ணங்கள்எழுப்பித்தெரிந்த துணியும், துணி களுள்பொதிந்துவரிசைகட்டி நின்ற நூல்களும், அவற்றை நெய்த கரங் க ளும்,சாயம் முக்கிய மனங்களும்,துணியாய் உருவாக்க உறுதுணை செய்த உள்ளங்களும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து என் முன் எழு ந்து நர்த்தனமாடியதாய்த் தோனியது.
தஞ்சாவூரில் வேலை பார்த்தபோது அலுவலகத்தின் அருகாமையாக இருந்த கடையில் வாங்கிய போர்வை இது.வாங்கும் பொழுது அன்பி ன் மனிதர்கள் சக்கரபாணியும்,ரகுவும் என்னுடன் இருந்தார்கள் இட மும்,வலமுமாக/
ஊர் தெரியாத ஊரில்,ஆள் பழக்கமற்ற வெளியில் அவர்கள்தான் என் தோளுக்கு ஆதரவு தருகிறவர்களாய்.என்னை தலை துவட்டி,தோள் தட்டி ஆறுதல் படுத்தி இருகரம் நீட்டி அணைத்துக்கொள்கிற அன்பின் மனிதர்களாய்,உள்ளங்களாய்/
சொன்ன விலையை விட20 ரூபாய் குறைத்துத் தந்தார்கள். அந்த 20துடன் கூடக்கொஞ்சம் சேர்த்து ஒரு புத்தகம் வாங்கிக் கொண் டேன். என்னுள் ஏன் அப்படி ஒரு ஈர்ப்பு எனத்தெரியவில்லை.ஏதாவது நல்ல புத்தகத்தை பார்த்து விட்டால் அதை உடனடியாக வாங்கி விட வேண்டும்,இல்லையெனில் தலை வெடித்துவிடும்.
வாங்கியபோர்வையைவிரிக்கவும்,போர்த்திக்கொள்ளவுமாய்இருந்த நாட்களின் ஊடாக எனக்கு மாறுதலும் கிடைத்து விட்டது.
“மேய்ச்சா,மாமியாள மேய்ப்பேன்,இல்லைன்னா பரதேசம் போவேன்” என்கிற ரீதியில் “போட்டால் ஏழு மணி தூர பிரயாணத்தில் இருக்கும் ஊர்,இல்லையென்றால் வீட்டு வாசற்படி”என்பது மாதிரி ஆகிப்போன மாறுதல் வந்த நாளன்றின் அடுத்த வார காலைப்பொழுதில்தான் இப் படி எழுந்திருந்தேன்.
பின் இரவு இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து 3.30 க்கு அரை தூக்கத்துடன் அதிகாலை மதுரையில் இறங்கி தஞ்சாவூர் பஸ் ஏறிய நாட்கள் இன்னும் நினைவிலிருக்கிறது.
அவை நகர்ந்து,நகர்ந்து இன்று கொஞ்ச நஞ்சமல்ல,ரொம்பவுமே ஹா யாக எழுந்திருக்கிறேன்.ஒரு தோசை 25 ரூபாய் என இரவு டிபன் முடி த்து படுத்து விட்டு இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு காலை யில்அரை தூக்கமும்,விழிப்புமாய் அலுவலகம் செல்கிற அரை மனித னாயும்,ஊர்,மனைவி, மக்கள் என ஏக்கம் நிறைந்த மனதினனாயும் அலைந்த நாட்களின் மகோன்னதங்களை செதுக்கி வைக்க கல்வெ ட்டு ஒன்று வேண்டும். அது கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என எழுந்த போது,,,,,,, “தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணவிரதமிருந்த கைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி” பெற்றதாய் தொலைக்காட்டியில் செய்தி சொன்னார்கள்.
வீட்டின் வெளியே கொண்டை சிலுப்பிய சேவலின் கூவல் கேட்டது. எழுந்து படுக்கையில் நின்ற நான் வலது கையிலிருக்கும் போர்வை யையும்தொலைக்காட்சிசெய்தியையும்,சேவலின்கூவலையும் மாறி, மாறி பார்ப்பவனாயும்,கேட்பனாயும்/
எழுந்தது தாமதமானாலும் நல்லதொரு செய்தி கேட்டுவிட்டநிம்மதி/
மனதுள்ஒருமலர்பூத்து,மலர்ந்த மெல்லியதானதொரு ஓசை/ அது பூக் கும்,காய்க்கும் பின்பு பலன் தரும்/

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் கதை ஆரம்பம் முதல் முடிவு வரை நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இறுதியில் சொல்லி முடித்த விதமும் நன்று

மனதுள்ஒருமலர்பூத்து,மலர்ந்த மெல்லியதானதொரு ஓசை/
அது பூக் கும்,காய்க்கும் பின்பு பலன் தரும்/

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

r.v.saravanan said...

தோற்றமும்,நிமிர்வும் சரி,மனம் சுண்டி விடுகிற இளம் பெண்ணின் தோற்றம் இங்கே இடிக்கிறதே?,,,,பூவும் ,பொட்டும் மஞ்சள் பூசிய முகத்தில் பவுடரும் சிவப்பழகு கீரீமுமாய் வந்து தழையத் தழைய நிற்கும் போது அவிழ்ந்து விடுகிற மனதை அள்ளி முடிய முடியவி ல்லை, அல்லது அள்ளி முடிய கூடுதலான நேரமும் காலமும் ஆகிப் போகிறது.

வரிகளை ரசித்தேன் சார்

vimalanperali said...

வணக்கம் சரவணன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

தம 1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு சார்.