அள்ளித்தின்ற ஒரு கவளம் சோற்றினுள்புதைந்து தெரிந்த முகங்கள்ஈரம் சுமந்ததாயும் வாஞ்சைமிக்கதாயுமாகவே/உழுதவர்கள்,விதைத்தவர்கள்,அறுவடை செய்தவர்கள்வாரி எடுத்து களத்தில் சேர்த்தவர்கள்அதை நெல் மணிகளாய் சேர்த்தெடுத்தவர்கள்என அத்தனை பேரின்வியர்வை ஓடி பிசுபிசுத்த கரங்களும்உழைப்பு மிகுந்த உடலுமாய்சேர்த்து முழுதாய் உருத்தெரித்து,,,,,,,,,,நான் அள்ளித்தின்கிற சோற்றில்புதைந்து தெரிந்த முகங்கள்ஈரம் சுமந்ததாயும், வாஞ்சைமிக்கதாயுமாகவே/
13 comments:
அந்த வாஞ்சை மிகந்த முகங்களை நினைத்தாலே போதும் விவசாயம் உயிர்த்தெழும்
அதி அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
செஞ்சை அள்ளிச்செல்லும் வரிகள்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விவசாயத்திற்கு மரியாதை
வணக்கம் ராஜி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
விவசாயத்திற்கு மரியாதை
வெறும் பேச்சிலும் எழுத்திலும்
மட்டுமே இருக்கிறது.
ஒன்றை விதைத்தால் பத்தாய் பலன் தருகிறது
மட்டுமல்ல,ஒன்றை வைத்து பத்து பேர்
பிழைக்க வகை செய்கிற ஒரு உயிர் தொழிற்சாலை.
அதை கவனித்து நம் அரசுகள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும்,.தவிர விவசாயம் செய்வதன் மூலம் இவ்வளவு மாத வருமானம் உறுதி என்கிற நிலை வரும் போது யாரும் விவசாயம் செய்ய முன் வருவார்கள்.
வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வாக்களிப்பிற்கு நன்றி ரமணி சார்.
வணக்கம் ரமணி சார் நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
வணக்கம் எழில் மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அற்புதக் கவிதை நண்பரே
தம 2
ஆகா...! அருமை அருமை....
வாழ்த்துக்கள்...
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment