பள்ளிப்பருவத்தில் ஜவ்வு மிட்டாயை பார்க்காதவர்கள் யாரும் இருக் க முடியாது நம்மில். அதன் இருப்பும்அதன் நிறமும்,அதன் வர்ணங் களும் நம்மை எளிதில் கவர்ந்து விடும்தான் ரோஸ்,சிவப்பு, மஞ்சள், பச்சை,அதனூடாக வெள்ளை எனஅடர்த்தியாகசுற்றப் பட்டிருக்கும்
அதன்மேல் பாலிதீன் பேப்பர் போட்டு கட்டியிருப்பார்கள்.
அந்த ஜவ்வு மிட்டாயை சுமந்தவாறே வரும் வியாபாரியையும் ,அவர் ஊதி வரும் தகரப் பீப்பியின் சப்தத்தையும் கேட்டதுண்டா அண்மைகாலத்தில் யாராவது? ஒரு வெயில் நாளின் நகர்வினூடாக நான் பார்த்தேன்.நல்ல பசி நேரம் மதியம் ஒரு மணி இருக்கலாம். ஒரு கல்யாணத்திற்கு போய்விட்டு வேகமாக வந்து கொண்டிருந் தேன்.(கல்யாண வீட்டில் சாப்பிடும் பழக்கம் என்னை விட்டு காணாமல் போய் நாட்கள் அனேகம் ஆகிவிட்டிருந்தது. காணாமல்ப் போன ஜவ்வு மிட்டாய் மாதிரி)
நீண்டு,விரிந்து,நகர்ந்த சாலையின் அதிர்வு மிகுந்த திருப்பத்தில் பிளாட்பார ஓரமாய் அமர்ந்திருந்த டீக்கடையில் டீக்குடித்துக் கொண் டிரு ந்த அவரது தோளில் சாத்தியபடி ஒரு கம்பு உயரமாய். கம்பு நுனியில் மொந்தையாய் சுற்றப்பட்டு தெரிந்த ஜவ்வுமிட்டாய்./அந்த டீக்கடை,அங்கிருந்த கூட்டம்,சாலையின் நகர்வு.கடையின் ஸ்பீக்க ரில் வழிந்த நல்லதொரு காதல் பாடல்,எல்லாவற்றையும் மீறி எனது கவனம் ஜவ்வு மிட்டாயின் மீதும்,ஜவ்வு மிட்டாய் வியாபாரியின் மீதும். ஜவ்வு மிட்டாய் வியாபாரிக்கு வயது நாற்பது இருக்கலாம். பேண்ட்,சர்ட் போட்டிருந்தார். சுண்டினால் கன்றிப் போகும் அளவு இல்லையென்றாலும் சிவப்பாக இருந்தார். ஒழுங்காக படிய வாரப் பட்ட தலை,செதுக்கிய மீசை,மளு,மளுவென்று ஷேவிங்க் செய்தி ருந்த முகத்தில் எண்ணெய் வழிந்து களைப்புடன் காணப்பட்டார். எந்த பரபரப்புமற்று ,அடிக்கும் வெயிலையும், புழுங்கும் வெப்பத் தையும் பொருட்படுத்தாதவராய் டீசாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
தான் பக்கத்து ஊர்தான் என்றும், அங்கிருந்து சைக்கிளில் மிட்டாயை விற்றவாறே வருகிறேன் என்றும் கூறிய அவர் வியாபாரம் பரவாயில்லை என்றார். நான்,மனைவி,இரண்டு பிள்ளைகள் நால் வருக்குமாய் சேர்த்து மிட்டாய் கேட்டு பணம் நீட்டியபோது கையிலி ருந்த தகரப்பீப்பியை கீழே வைத்துவிட்டு கொஞ்சம் பிய்த்துக் கொடு த்தார். சின்ன வயதில் கொடுக்கப்படும் ஐந்து பைசாவிற்கு ஜவ்வு மிட்டாயிலேயேவாட்ச், மோதிரம்,வளையல் என கையிலேயே கட்டி விடுவார்கள்இப்போதுவிலைவாசிஏறிப்போனதால் இவ்வளவுதான் தரமுடிகிறதுஎன்றார்.அவர்மீதும்குற்றம் சொல்ல முடியாது. அவரும் தான் என்ன செய்வார் பாவம். கட்டுபடியாகவில்லை என்கிறார். ஆமாம் இப்படி சொல்பவர்களும், கையில் வாட்சும்,மோதிரமுமாக கட்டிவிடும் வியாபாரிகள் யாராக இருக்கிறார்கள். தெற்கு பாஜாரில் உள்ள கொண்டல்சாமி கடையிலும் பெரியசாமிகடையிலுமாய் சர க்கு வாங்கி ,அவரே சொந்தமாய் தயாரித்த ஜவ்வுமிட்டாயை உங்க ளதுபிள்ளைகளிடமும், எனது பிள்ளைகளிடமும் விற்று தனது வாழ்க்கைக்கான வருமானம் ஈட்டும் நம் ஊர்க்காராக, நமக்குத் தெரிந்தவராக,நம் உறவினராகத்தானே இருக்கிறார்கள். இப்படிநமது வாழ்வியல்முறைகளோடும்,நமதுகலாச்சாரத்தோடும்,அன்றாடங்களின்
நகர்தலோடும் ,பின்னிப்பிணைந்த,ஒட்டி உறவாடிய அந்த ஜவ்வு மிட்டாய் வியாபாரியின் மனங்களோடு இன்னும் கொஞ்சம் நெருக் கமாவோம். அவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வோம். அவர்க ள்தயாரித்த பொருட்களை வாங்குவோம்.வாங்கப்பழகிக் கொள்வோ ம்.
இதோ வெயிலுக்காக டீக்கடையோரமாய் ஒதுங்கி நிற்கிற ஜவ்வு மிட்டாய் வியாபாரி கூப்புடுகிறார். என்னவென கேட்டுவிட்டு வரு கிறேன்.
15 comments:
நமது குடிசை தின்பண்ட தயாரிப்புகள் பொதுவாக தாக்குதலுக்கு உள்ளாவது ஹைஜீனிக் விசயத்தில்தான்
எளிய மக்களுக்கு ஒரு தரக் குறியீடு உருவாக்கி அதை அணுகக் கூடிய சக்தியையும் (லஞ்சம் ஊழல் இல்லமல், நாய் மாதிரி குலைக்கிற அதிகாரிகள் இல்லமல்) வழங்கினால் அவர்கள் வரலாம் மெர்சிடீஸ் பென்சில் ..
சரியா தோழர்
http://www.malartharu.org/2014/01/gold-vein.html
மதுவின் கருத்தே என் கருத்தும்
அவருடனான அனுபவத்தை அடுத்த பதிவாக
ஆவலுடன் எதிர்பார்த்து....
வணக்கம் மது எஸ் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அரசால் உருவாக்கப்படுகிற விதிகள்
இங்கே சாமான்யர்களின் கைகளில்
கிடைக்க வழியற்றும் அல்லது
அவரகளால் எட்டிப்பிடிக்க முடியாத
தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது
அவர்கள் மெர்ஸ்டிஸில் வருவது
சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே/
தவிர இங்கு மெர்ஸிடிஸீம் இன்னபிறவும்
ஒரு சாராருக்கு மட்டுமே என ஆகிப்போனது/
வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.
குழந்தை பருவத்தை மீட்க நினைக்கிற நாளில் இந்த சுத்தம் சுகாதாரத்தை கொஞ்சம் மறந்துட்டு நான் இப்போ கூட ஜவ்வுமிட்டாய் வாங்குவதுண்டு:)
http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post.html
பள்ளிக் கால நினைவலைகளை மீட்டுத் தந்திருக்கிறீர்கள் நண்பரே நன்றி
தம 3
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மனதில் படரும் பள்ளிக்காலம் மிகவும்
இனிமையானதாகவே/
வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,
குழைந்தைப்பருவத்திற்கு தாவிச்செல்ல
துடிக்கிற மனது எல்லோரிள்ளுமாய் இருக்கிறதுதான்,
ஆனால் யாதார்த்தம் சுட வாழ்க்கையின்
திசை வேறுபக்கமாய் இழுக்க இழுத்த
இழுவைக்கு பயணப்படுகிறவர்களாக
ஆகிப்போகிறோம்தான்,அதிலும் பெண்களின்
பாடுகள் மிகவும் சிக்கலானதாய்/
நன்றி வணக்கம்.
அதில் ஒரு புளிப்புச் சுவையும் இருக்கும். இப்போது கூட அதை புலம் பெயர்ந்தும் சுவைக்கின்றேன். இங்கும் அது விற்கப்படுகின்றது
ஜவ்வு மிட்டாய்க் காரர்கள் இன்னும் இருக்கிறார்களா? எங்க ஊர்ப்பக்கம் அப்படி யாரும் இப்போது வருவது இல்லை! பகிர்வுக்கு நன்றி!
வணக்கம் சந்திர கௌரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ஜவ்வு மிட்டாய்க்காரர்கள் போல
அழிந்து போன அடையாளங்கள் ரொம்பவுமே/
தவிர இங்கு சிறு தொழில் செய்ப்வர்களுக்கான
அங்கீகாரம் லேசில் கிடைப்பதில்லை.அதற்கு நம்
சிஸ்டமும் மிகப்பெரிய காரணம்.
ஜவ்வு மிட்டாய் போலவே குடிசை தொழில் மூலம் செய்து வரப்படும் பண்டங்கள் இன்று கடைகளில் காண்பது அரிது. அப்படியே கண்டாலும் இன்றைய சிறுசுகள் உடலுக்கு தீங்கான காற்றுப்பையில் அடைக்கப்பட்ட மசாலா பண்டங்களைத்தான் விரும்பி தின்கிறார்கள். இதற்கு தொலைகாட்சி விளம்பரங்களும் பெற்றோர்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாததுதான்..
சிறப்பான நினைவு கூறல்..
Post a Comment