16 Jun 2014

மெழுகுவர்த்தி,,,,,,


அப்பம் மட்டுமே உள்ளது.
இட்லி வெந்து கொண்டிருக்கிறது.
தோசை சுட சிறிது நேரமாகும்.
பூரியும் அப்படியே.
இடியாப்பம் வீட்டிலிருந்து
வர வேண்டியதிருக்கிறது.
ஊரிலிருந்து இப்போதுதான் வந்தோம்.
அதான்
கடை திறக்கதாமதமாகிப் போனது.
என்கிற பேச்சினுடாகவே
தாமத்திற்கான தகவலைச் சொன்ன மாமி
நான்கு பர்னர் கொண்ட ஸ்டவ்வின்
முன்பாக நின்றார்.
லேசாக குழிந்திருக்கும் சட்டியில்
மாவை ஊற்றி வட்டமாக சாய்த்து,சாய்த்து
ஆட்டி அடுப்பில்வைக்கிறாள்.
அடுப்பருகில் உள்ள வட்ட பலகையில்
பூரிக்காக மாவு உருண்டைகளை உருட்டுகிறாள்.
மூன்றவதாக உள்ள அடுப்பில்
தோசை மாவை ஊற்றுகிறாள்.
நான்காவதாக உள்ள பர்னரில்
இட்லிச்சட்டிஇருக்கிறது.
நெரிசலான பஜாரின் காம்ப்ளக்ஸ் கடையில்
ஐந்தாவது பர்னராகவும்,
அதில் எரியும் தீயாகவும் அவள் தெரிகிறாள்.

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அதில் எரியும் தீயாகவும் அவள் தெரிகிறாள்....
அருமையாக உள்ளது இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்க்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரூபன் சார்/

Pandiaraj Jebarathinam said...

சாமானியர்கள் அப்படியே
வாழ்ந்து போகிறார்கள்...

vimalanperali said...

வணக்கம் ஜெ பாண்டியன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/