19 Jun 2014

குழிவு,,,,,,,

             அகலப்படுத்தப்படும்
சாலையின் ஓரங்களில்
வெட்டப்படும் மரங்களின்
ஓலமும்,முனகலும் கால நேரமில்லாமல்
தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
வெட்டுப்படும் மரங்களும்,
வெட்டுபவனின் கை அரிவாளும்,
குழி பறிக்கும்
கனத்த பொக்லைன் இயந்திரமும்,
மரம் அறுக்கும் மின்சார ரம்பமும்
சொல்கிற கதைகள் நிறைந்து
தெரிந்த போதும் கூட
அந்த சாலையை கடக்கும் போது
மனதில் மெல்லிய சங்கடம் நெளியாமல் இல்லை/

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தனக்குத் தானே குழிபறித்துக் கொள்கிறோம்...

இளமதி said...

குழிபறிக்கும் நிகழ்வுகள் காட்டிய குமுறல் அருமை!

வாழ்த்துக்கள் சகோதரரே!

Mahasundar said...

அடர்த்தியான கவிதை ஐயா. இந்தக் கவிதைப் படிக்கும்போது,கல்யாண்ஜியின் கவிதை நினைவுக்கு வருகிறது.
"என் மகன் பென்சில் சீவுகிறபோது,எங்கோ மொர மொரவென்று காடுகள் சரிந்து விழும் சப்தம் என்காதுகளில் கேட்கிறது."
தாங்கள் வலைப்பூவில் அசையும் படங்கள் அற்புதம். வாழ்த்துகள்!

Pandiaraj Jebarathinam said...

அருமை...

நிலை மாறும்போது
நிலை கழன்று
குழியில் விழுகிறது...

இளமதி said...

இனிய வணக்கம் விமலன்!

உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

vimalanperali said...

தொடர் பதிவா?எழுதி விடலாமாஎன் போன்றவர்கள் ?
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/வணக்கம்/

vimalanperali said...

வணக்கம் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மகா சுந்தர் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வண்ணதாசன் அவர்களின் கவிதை நினைவுக்கு
வருகிற அளவு என் கவிதை அமைந்து போனது
குறித்து மகிழ்ச்சி,
மற்றபடி அவர் எங்கே,இத்துணூண்டு நான் எங்கே?
அவரது நிழலின் அருகில் கூட நிற்கிற தகுதி எனக்கிருக்கிறதா,இல்லையா தெரியவில்லை.
நன்றி வணக்கம்/

vimalanperali said...

வணக்கம் சகோதரி இளமதி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

இளமதி said...

இது என்ன கேள்வி சகோ!... :)

எழுதலாமே.. பத்துக் கேள்விகள் அதற்கு உங்கள் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆவலில் உங்களையும் அந்தத் தொடரில் இணைத்தேன்.
இதைத் தொடராக நீங்கள் வேறு பதிவர்களைக் குறிப்பிட்டு பதிவிடுங்கள். அவர்கள் தொடர்வார்கள் உங்களை...
அவ்வளவே!...

பதிவிடுங்கள். பார்க்க ஓடி வருகிறேன்!

vimalanperali said...

சரி சகோதரி/

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது போல் எனக்கும் மரம் வெட்டுவதையும், கனத்த பொக்லைன் இயந்திரம் குழி பறிப்பதை பார்க்கும் போதும் மனம் கனத்த்துதான் போகும்.
அருமையான கவிதை.

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/