21 Jun 2014

ஐஸ்க்குச்சி,,,,,    
கருத்து நீண்டு கிடக்கிறது சாலை,எட்டிப்பிடிக்கநினைத்தயாரோமுடியாமல் போனதனால் அப்படியே விட்டுவிட்டதைப்போல/

கண்ணுக் கெட்டிய தூரம் வரையாய் நீண்டுவளைந்து நெளிந்திருந்த கறுப்பு பார்ப்பதற்குஅழகாகவே இருந்தது.ஒருமுனையை பிடித்துத்தூக்கினால் மறு முனை எழுந்து நிற்கும் போலானதொரு தோற்றம்.

எதுநன்றாக இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கட்டும்,எது நன்றாக இல் லையோ அது நன்றாகஇல்லாமல்போய்விடட்டும்.என்ன கெட்டுப் போனது இப்பொழுது?யாரோ ஒருவர் சொன்னஅசரீரி காற்றுவாக்கில் வந்து காதில் விழுந்ததாக/

ஏற்கனவே இருந்த கறுப்பு வர்ணத்தின் மேல் கொட்டப்பட்ட கறுப்புப் பெயி ண்ட்காய்ந்துஅழகுகாட்டியதுபோலவும்நீண்டிருந்தகருங்கூந்தலாயும் சாலை/
சற்றைக்கு முன்தான் பெய்திருந்த மழை நின்றிருக்க வேண்டும் போல, ரோடு காய்ந்தும் காயாமலும் ஈரம் பூத்துப்போயுமாய்/

சாலையின் இருபக்கமுமாய் தன் வரைவு காட்டி அமர்ந்திருந்த ஓடையில் தண்ணீர்ஓடிக்கொண்டிருந்தது.மெலிதாகவும்வேகம்காட்டியுமாய் காடு கரை களில் இருந்து ஓடிவந்து கொண்டிருந்த தண்ணீர் தன்முகம் காட் டியும் இருப்பு காட்டியுமாய் மென்ஓவியமாய்நகர்ந்துவந்துகொண்டிருந்தது. சாலை யின் ஓரங்களில் உருண்டு காணப்பட்ட தார் ரோட்டின் ஓர முனை திரட்சி காட்டியும் தன்னில் புதைந்திருந்த சல்லிக் கற்களை வெளிநீட்டிக் காட்டி யுமாய்/

இது போலான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நாட்களில் மழை பெய்தால் தான்உண்டுபோலும்/பரவாயில்லாமல் பெய்திருந்தது,மிகவும் மோசம் எனச் சொல்லி விடமுடியவில்லை.அருப்புக் கோட்டை செல்கிற வழியில் இருக் கிற கறுப்பாயூரணி பாதி நிறைந்து விட்டது.சூரங்குடி கண்மாய்க்கு தண் ணீர்வந்திருக்கிறதாய்ச்சொன்னார்கள்.இதுபோகஆங்காங்கேஇருக்கிற குளம், கண்மாய்களில் தண்ணீர் காணப்படுவதாய்வேனில்சென்று ஊராய் காய்கறி விற்கிற ராமசாமி சொன்னார்.

என்னதான்வளர்ந்துவிட்டவிஞ்ஞானம்வீட்டிற்குள்இருக்கிறதொலைக்காட்சிப் பெட்டியில்ஆயிரம்அதிசயம்அல்லதுஎவ்வளவுவியப்புக்காட்டியபோதும்கூட இப்படியாய் பெய்த மழை ஒன்று திரண்டு ஓடைகளிலும் ரோட்டு ஓரங்ளி லும் கண்மாய் காடுகளிலும் ஓடுகிறதை காணுகிற ஆவல் போகவில்லை. இன்னும்/அதிசயம் செதுக்கிய மனதின் அங்கங்கள் தன் ரசனையை மேம் படுத்திக் கொள்கிற ஒன்றாய்இது மாதிரியானவைகளில்  தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதாகவும் புதுப்பித்துக்கொள்வதாயும்/

சில்லிட்டகாற்றைஏறிட்டவனாய்நகர்ந்துகொண்டிருக்கும்போதுRSRஆங்கிலப் பள்ளியை சமீபத்துக் கொண்டிருக்கும் போதுதான் இவனை விலகியதாய் அல்லது இவன் கண் முன்னாலாய் ரோட்டின் வலது பக்கமாய் பிளாட்ப் போடப்பட்டிருந்த விளை நிலத்தின் மீது இருந்த மண் ரோட்டில் விரைந்து வந்த ஸ்கூல் பஸ் இவனை சமீபத்து சாலை ஏறியது வேகமாக/

அங்கெல்லாம் யார் இருக்கிறார்கள்.எங்கு போய் வருகிறது பஸ். இந்த அத்துவானவெளியில் ஊர் பெயர் தெரியாத ஆட்கள் நடமாட்டமற்ற வனா ந்திரம்போலானவெளியில்? யாரை ஏற்றிக்கொண்டுஇவ்வளவு விரைவாகச் செல்கிறது?என்பதாயும்புரியாதது போலவும் பார்த்துக் கொண்டிருந்த இவன் கண்முன்னே சாலையேறிய பேருந்தின் டயர்த்தடங்கள் இது வரை கறுத்த மேனி காட்டிக்கொண்டிருந்தசாலையின்மீது தன்அழுத்தமான தடம் பதித்து ச் சென்று கொண்டிருந்ததாய்/

இரண்டும்,இரண்டுமாய் நான்கு பின்புற சக்கரங்களையும்,ஒன்றும் ஒன்றும் இரண்டு முன்புறச்சக்கரங்களையும் காட்சிபடுத்திச்சென்று கொண்டிருந்த அது ஈரம் பூத்த புல்வெளி கடந்து மண்சாலையில் பயணித்து வந்த தடயத் தை தார்ச்சாலையில் விட்டுச்சென்றவாறாய் போய்க்கொண்டிருந்தது.

பஸ்ஸின்பின்பக்கமாய் பள்ளியின் பெயர்எழுதியிருந்ததுபாலாவின்பையன் இந்தபள்ளியில்தான்படித்தான்.ஹாஸ்டல்,சாப்பாடு,பிறவசதிகள்சரியில்லை  பள்ளியில்/ ,ஆகவே சீக்கிரமாய் பார்க்கவேணும் ஒரு வீடு என ஒரு இரவு வேளையின் பத்தரை மணிப்பொழுதுக்கு மேல் அவர் பேசிய போன் பேச்சு இன்னும் ஞாபகத்தில் நிற்பதாக/

பாலாவுக்காக அலைந்து திரிந்து இரண்டு நாட்களில் அவர் கேட்ட மாதிரி யேஅவர்கேட்டஏரியாவிலேயே வீடு கிடைத்தது.வீடெல்லாம் சென்று பார்த் தவர் அட்வான்ஸ் கேட்கும் போது சற்றே பின் வாங்கினார்,மனைவியிடம் கேட்டுச்சொல்கிறேன் என/

பத்தாம் வகுப்புபடிக்கிற தன் பிள்ளை தன்னைப்போலவே சுமார்தான் படிப் பிலும்இதரவைகளிலுமாய்என்றார்.அப்படிச்சொல்லும்பாலாமதுரையில் இரு க்கிற தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்.கை நிறைய என இல்லா விட்டாலும் கூட பத்தாக்குறை வருமானம் கிடையாது.இல்லையென்றால் மதுரையிலிருந்து இங்கு வந்து படிக்கப்போட முடியுமா என்ன என்கிறார் நண்பர் ஒருவர்.ஆமாம் முடியாதுதான் சார் என்பது அந்தப் பள்ளியின் பஸ்ஸை ஓட்டுகிற ஒரு ட்ரைவரின் வாக்குமூலமாய் இருக்கிறது இன்று வரை,விட்டால் சபை வரைக்கும் கூட போய் பிரச்சனையை சொல்லி விடுவார் போலும்.அவ்வளவு தூரம் நொந்து போயிருந்தார்.

பெரும்பாலான பொழுதுகளில் இவனது இரு சக்கர வாகனத்தின் பின்னே தான்அவருக்குபிரயாணம்வாய்க்கப்பெற்றிருக்கிறது.அல்லதுசௌகரியப்பட்டி ருக்கிறது. இவன் பள்ளி இருக்கிற ஏரியா தாண்டி போகிற தினங்களில்/

அவர் சொல்கிறார், எங்களுக்குன்னுஎந்தசலுகையும் கெடையாது சார்,முப்ப து வருஷமா இந்த நிறுவனத்துல வேல பாக்குறேன்.யாராவது சொந்தக் காரங்கயாரையாவதுசேக்கவோ அல்லது தெரிஞ்சவுங்களுக்கு பீஸ் கொறச் சுக் கேக்கவோ முடியாது சார், வெளியாளுங்களுக்கு என்னவோ அதேதான் எங்களுக்கும் என்பார். 

இப்படியாய்தினசரிஏதாவதுபேசிக்கொண்டேவருவார்.வானம்வெறித்துவெண் மைபாய்த்திருந்தது,எங்கோமேய்ந்து கொண்டிருந்தசெம்மறிஆடுகள் மொத்த மாய் ரோட்டைகடந்து சென்றது கூட்டமாக/ வானத்தில்பறவைகள்பறந்து சென்று கொண்டிருந்தன அலசலாக/

வெயில்வரவர கூடுதே தவிரகொறையிரவழியக்காணோமேண்ணேஎன டீக் கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்த நேரம்அவர் டீ போட ஆரம்பித் திருந்தார்.ஆற்ற ஆரம்பித்திருந்த டீ வரி போட்ட கண்ணாடிகிளாஸினுள் அடர் கலர் திரவமாய்இறங்கிக் கொண்டிருந்த நேரம் தகர செட் போட்டிரு ந்தகடையினுள்ளாக நின்றிருந்த இவன் பார்வை சற்று விழி விரிந்து செல் வதாக/

விரிந்த விழிகளிகலிருந்து கழண்டு சென்றுசாலை,அதில்ஊர்ந்து கொண்டி ருந்த மிதரககனரகவாகனங்கள், மனிதர்கள்பாதசாரிகள் இருசக்கரவாகனங் கள்,சைக்கிளில்செல்பவர்கள்,வொர்க்ஷாப்.சீரணிகடை.ஹோட்டல், காம்ளக் ஸிலிருந்த கடைகள் என எல்லாவற்றையுமாய் படம் பிடித்துக் கொண்டு வந்ததாய்/பிடித்துக்கொண்டுவந்தபடத்தில்ஒரு செட்பூரியும்இரண்டுஉளுந்த வடைகளுமாய் மணத்தது.

அன்றுகாலைடிபனை துறந்திருந்தான் வீட்டிலேயே/முடியவில்லை,எழுந்த வுடன்இரண்டு டீ சாப்பிட்டது,தவிர அலசர் வயிறு படுத்தும் பாட்டி ல் இது மாதிரியாய் வேளைக்கு சாப்பிட முடியாமல் போய்விடுதலும் ஆகிப் போகி றது.

மனைவிஇட்லிசுட்டிருந்தாள்வீட்டில்காரச்சட்னியும்,தேங்காய்ச்சட்னியுமாய்சேர்த்து/இவனால்தான்சாப்பிடமுடியவில்லை,மீறிச்சாப்பிட்டால்காற்றடித்த பலூனாய் ஊதிக்கொள்கிறதுவயிறு,ஊதிக்கொண்டவயிற்றைதூக்கிக் கொண் டு அலைவது பெரும்பாடாய்ப்போய் விடுகிறது. அதனாலேயேஎதற்கு வம் பு, இப்படி உடல் உபாதை தாங்கி அலைவதை விடுத்து பேசாமல் காலை யில்சாப்பாட்டைதுறந்துவந்துவிடுவதுஇவனில்சமீபத்தில்குடிகொண்டவழக்க மாய்இருக்கிறது.அப்படியானவழக்கம்மிகவும்நல்லதாயும் ஆகித் தோன்ற அதையேபின்பற்றுகிறவனாகிபோனான்.அதனால்இப்பொழுது என்ன கெட்டு விட்டது பெரிதாய் எனத்தோணக்கூட இல்லை.

வட்ட வடிவம் காட்டியிருந்த மொன்முறுவலான செந்ந்நிற பூரிகள் இரண் டுக்கும் நடுவாய் வைக்கப்பட்டிருந்தஉருளைக்கிழங்குமசாலாவுடன்சேர்த்து வைக்கப்பட்டிருந்ததேங்காய்ச்சட்னிபார்க்கவும்சாப்பிடவுமாய்நன்றாகவேஇருக்கிறது.
இப்பொழுதெல்லாம்உருளைக்கிழங்கு மசாலாக்களில் உருளைக் கிழங்கு தவிர்த்து மற்றதெல்லாம் பார்க்க முடிகிறது,பெரிய வெங்காயத்தை நிறைய அறுத்துப்போட்டுகடலைமாவுசேர்த்துகொதிக்கவிட்டுஅடுப்பிலிருந்து இறக்கி விடுகிறார்கள்,அதுவும்நன்றாகத்தான்இருக்கிறது. சாப்பிடுவதற்கு/ 
ஆனால் வழக்கமாய் அப்படிச்சாப்பிட்டால் உடல்போய்விடும் மாஸ்டர் என பூரி சுட்ட மாஸ்டரிடம் சொன்னபோது அவர் சிரித்தார். என்ன சார் இந்த வயசுலபோயி வயிறு கியிறுன்னு,என்பார்.என்ன செய்ய மாஸ்டர், இப்பிடித் தான் வயிறு நல்லா இருந்தப்ப அள்ளிச்சாப்புட சாப்பாடு இல்லை, இப்ப சாப்பாடு இருக்குறப்ப வயிறு நல்லா இல்ல.என்றான் இவன்.அது இவனுள் இந்த கணம் வரை ஒரு மென் சோகமாகவே/

நண்பர்களுடனோஅல்லதுதோழர்களுடனோஹோட்டலுக்குசாப்பிடச்செல்ல நேர்கிற தருணங்களில் மிகவுமே சங்கடப்பட்டிருக்கிறான்.காலை ,மாலை, இரவுடிபன்என்றால்சரி.இட்லியோதோசையோஅல்லதுபூரியோசாப்பிட்டுஎழுந்து விடுவான்.மதியநேரம்சாப்பாடுஎனபோய்விட்டால்அவர்கள் தருகிற அளவுச் சாப்பாட்டைக் கூட சாப்பிட முடியாமல் போய்விடும்.ஏதோ சாப்பிட்டதாய் பேர் பண்ணி விட்டு இலையில்  மிச்சம் வைத்து விடுவான். அதுவும் அன் லிமிடெட்மீல்ஸ்போடுகிறகடைஎன்றால் இவனின் முகமும் மனமும் வெகு வாகவே  மாறிப்போகும்.

கல்யாண வீட்டிலும் இதே கதைதான்.போன மாதம் தூரத்து ஊரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு அம்மாவுடன் சென்றிருந்தான். எவ்வள வோ தவிர்க்க முயன்றும் கூட பந்தியில் அமர நேர்ந்து விடுகிறது.என்ன செய்ய, சாப்பிடுவதாய் பேர் பண்ணி எழுந்திருக்கலாம் என்றால் பரிமாறு கிறவர்களின் கைபிடித்திழுக்காத குறையாக அம்மா அவர்களைக் கூப்பி ட்டுஇதைவை,அதைவைஎனமாறிமாறிசொல்லிக்கொண்டிருந்தார்கள்.விட்டா ல் பரிமாறுபவர்களின்கையிலிருந்த பிடுங்கி ஊட்டி விட்டு விடுவார்கள் போலும்.என்னதான்வயசு51ஆனாலும்கூடதாய்க்குமகன்சிறுபிள்ளைதானே? 

இதேஇது வீட்டில் மனைவி கையால் பரிமாறிச்சாப்புடுகிறபோது ஒன்றும் தோணவில்லையே அளவு மிகைஅளவெல்லாம்தாண்டி ஓடிக்கொண்டிருக் கிறதே,சாப்பாடு/

வட்டமாய் இருத்திவைக்கப்பட்டிருக்கிற சில்வர் தட்டில் கொஞ்சம், கொஞ் சமாய்போடப்படுகிற சாப்பாட்டில்,கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றப் படுகிற குழம்பு,ரசம் ,மோர் என பிணைந்து சாப்பிடும் போது அவைகள் காட்டும் ரசவாத வித்தையும்,மனைவியின் கை அன்பும் பரிமாறுகிற மென் மனசும் சாப்பாட்டின்அளவைபார்க்கவிடாமலும்,தெரியத்தோணாமலும்செய்து விடுகி றதுண்டுதான்.

மாஸ்டரின் மகள் மல்லிகா அக்காவுக்கு கோபாலைப் பிடிக்கும் என்றெல் லாம்சொல்லிவிடமுடியவில்லை,அதேசமயம்யாராவதுஇருவரையும்இணை த் துவைத்துப்பேசினால் அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவும் இல்லை. 

மளிகைக்கடையில்வேலைசெய்கிறான்,கோபால்,மளிகை மட்டும் இல்லை காய்கறியும்உண்டு,அவர்களதுக்கடையில்.கடைவேன்சுற்றுபட்டிஊர்பூராவும் அவர்களது கடை சரக்கை சுமந்து கொண்டு போய் வரும்,கூடவே இவனும் போய் வருவான்.தினசரி காய்கறி வியாபாரம் உண்டு.பலசரக்கு மாதம் இரு முறைஅல்லதுஒருமுறைகொண்டுபோவார்கள்.ஊர்க்கார்களின்தேவையைப் பொறுத்து அது நடக்கும்.அந்தப்பக்கம் ஊரிலுள்ள கடைக்காரர்களெல் லாம் சப்தம் போடுவார்கள் கோபாலிடம்/

கோபால்மல்லிகாக்காவிடம்பேசநேர்கிறசமயங்களில்இதைச்சொல்லிவருத்தப் படுவான்.சரிநீ என்ன செய்ய முடியும் அதுக்கு?நீயே வேலைக்கு இருக் குற ஆளு,ஓங் வருத்தந்தானாபெரிசாஅவுங்களப்போயி பாதிக்கப்போகுது,நீ பாட் டுக்கு வேலையச் செய்யி,சம்பளத்தவாங்கு, செலவு போக கையில கெடை க்கிறத சேத்து வையி,நாளைக்கி நமக்கு கல்யாணம் ஆன பிற்பாடு கைக்கு ஆகுமில்ல.என்பவள்என்னமோமுன்னாடிமில்லுவேலஅதுஇதுன்னுநெலையி ல்லாம் அலைஞ்சதுக்கு இது பரவாயில்லை.உக்காந்த யெடத்துல இருந்தும் ன்னுஆகிப்போச்சு,சொந்தஊருன்னும்ஆகிப்போச்சு,ஒரு தொழில் தெரிஞ்சிக் கிட்ட பலன் கெடைக்குமில்ல என்பவள் கோபாலுடன் பேசும் போது அவள் உடுத்தியிருக்கிறபூப்போட்டசேலை நன்றாக இருக்கிறதா என கேட்க தவற மாட்டாள். தினம் ஒரு பூ சேலையில் பூக்கிற மாதிரி/

மல்லிகாக்காவுக்குசேலைக்காபஞ்சம்என்பார்கள்ஊர்க்கார்களும் அவளிடம் தவணைக்கு சேலைதுணிஎடுக்கிறவர்களும்/கவரிங் அயிட்டம்,சேலை, ஜாக் கெட் துணி எல்லாம்விற்பாள்,வீட்டில்தையல்மிசின் வைத்திருந்தாள்.

ஐஸ்க்காரர்வீட்டுக்குப்பக்கத்தில் குடியிருக்கிற அவள் அவரது வீட்டுப் பாட் டையும்அவ்வப்பொழுதுகவனித்துக்கொள்கிறவளாக/

ஐஸ்க்காரருக்குபிள்ளைகள்கிடையாது,அவர்அடிக்கடிசொல்வதுண்டுமல்லிகாக்காவின்அப்பாவிடம்.பேசாமஓங்புள்ளையஎனக்குதத்துக்குடுத்துருயா/என்பார்அவரும்சிரித்துக்கொண்டே சரியா இப்ப என்ன,,குடுத்துட்டாப் போச்சு ஆனா இதுக்கு எங்க சாதி சனம் ஒத்துக்கிறணுமில்லய்யா என்பார். இப்ப எனக்கு ஒரு மக இருந்தாலும் மல்லிகா வயசு இருக்கும்.என்கிறவர் பிராயத்தில் ஒங்க ஊருப்பக்கம் ஐஸ் விக்க வந்துருக்கேன் சார் என்பார்.

ஒங்கள,ஒங்கசித்தப்பாவ,ஒங்க அப்பாவ,ஒங்க குடும்பத்து ஆளுகளப்பூராம் தெரியும் என்பார்.இவனைப்பார்க்கிற சமயங்களெல்லாம்/,

இப்பத்தான் ஆந்து போச்சி,வயசாகிருச்சி,என்கிற பாஸ்கர் டீக்கடைக்குப் பக்கத்திலாய்பெட்டிக்கடை வைத்திருந்தார்.இவனுக்கு இன்னும் ஞாபகமிரு க்கிறதுபசுமையாக.அவரது கடை இளநீர் போல் இந்தப்பக்கமிருக்கிற எந்தக் கடையிலும் குடித்ததாய் ஞாபகம் இல்லை.ஒரு இளநீரை வெட்டினால் இரண்டு பேர் சாப்பிடலாம்.நான் இங்கயெல்லாம் யெளனிவாங்கமாட்டேன் சார்,நமக்கு சோளவந்தான்ல இருந்து வந்துரும் நேரடியா விருதுநகருக்கு, அங்கபோயி எடுத்துக்குறுவேன்,முடியிற சமயத்துலநான் போவேன். போக. முடியாத சமயத்துல யாருக்காவாதுபத்தஞ்சி செல்லவுக்குக் குடுத்து எடுத்துட்டு வரச் சொல்வேன். அவ்வளவுதான் சார், வயசாகிப்போன காலத் துல அலைய முடிய நம்மளால, ஊர்க்காடெல்லாம் சைக்கிள்மிதிச்சிட்டு இப்ப பஸ்ஸுல ஏற்றதுன்னாக்கூடமனசு யோசிக்குது சார்,என்பார்.

அதுகெடக்குதுசார்,இப்ப ஒடம்பப்பத்தி பேச நம்ம கிட்ட ஆயிரம் இருக்கு சார்.ஒவ்வொருத்ததுக்கும்ஒருமாதிரி,இப்பஇந்த மல்லிகாப்புள்ளைய நெனை ச்சாத்தான் கொஞ்சம் பாவமா இருக்கு சார்.அவங்க அப்பா கோபால் பைய லுக்கு அவளக்கட்டிக்குடுக்க மாட்டேன்னு சொல்றானாம். நேத்து ஏங் கிட்டவந்துவருத்தப்பட்டா,என்னசெய்யம்மா நானுன்னு சொன்னதுக்கு எங்க அப்பாபோலஒங்களநெனைச்சிக்கிட்டிருக்கேன்.நீங்கதான்எப்படியாவது எங்க ளஒண்ணுசேத்துவைக்கணும்,இல்லைன்னாகொளுத்தீட்டுசெத்துப் போயிரு வேங்குறா என்ன செய்யிறன்னு ஒரே கொழப்பமா இருக்கு.அவுங்கப்பன் ஆசப்பட்டமாதிரியேகௌவர்மெண்ட் வேலை பாக்குற மாப்புளைய நிச்சயம் பண்ணப் அவுங்க போறாதா,இல்ல மல்லிகாப்பொண்ணு ஆசப்பட்ட மாதிரி கோபால் பையலையே அவளுக்கு கட்டி வச்சிற்றதா தெரியலயே என்பார்.

அவரின்அந்தப்பேச்சுடனும்நினைவுடனுமாய்டீக்கடைக்காரர்கொடுத்தடீயைக் குடித்து முடித்தபோதுஅந்தபெரியம்மாள்வந்துநின்றாள்உதவிக்கு கையேந்தி யவளாய்/.      

14 comments:

 1. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. அருமை அண்ணா! த.ம 1
  பதிவுலகில் பரபரப்பாக வலம் வரும் தமிழனின் ரிலே ரேஸ் பதிவில் உங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். பார்க்க http://makizhnirai.blogspot.com/2014/06/ii.html

  ReplyDelete
 3. வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
  தவிர ரிலே ரேஸ் பதிவு என்ன தெரியவில்லை,
  கொஞ்சம் புரிய வைக்கலாமா?

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சுரேஷ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. நல்லதொரு பதிவு நண்பரே... படமும் அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்லர்ஜி
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 7. என்னதான்வயசு51ஆனாலும்கூடதாய்க்குமகன்சிறுபிள்ளைதானே? //
  உண்மை, நன்றாக சொன்னீர்கள்.

  பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோமதி அரசு அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 8. நல்ல பகிர்வு.
  அருமை சகோதரா.

  ReplyDelete
 9. வணக்கம் சேகுமார் சார்,
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete